இலங்கையில் அடுத்த மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான தொழிநுட்ப குழுவை (Technical Committee) இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பந்துல ரத்நாயக்க தலைமையில் மொத்தமாக 4 பேர் அடங்கிய தொழிநுட்ப குழுவே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா அணியுடன் இணையும் எண்டி பிளவர்
அறிவிக்கப்பட்டுள்ள தொழிநுட்ப குழு உறுப்பினர்களாக ஷான் பெர்னாண்டோ, தரங்க பரணவிதான ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், டைரோன் விஜேவர்தன செயலாளர் மற்றும் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், LPL தொடருக்காக நிர்வாகக் குழுவால் கட்டமைக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி போட்டிகள் நடத்தப்படுகின்றதா? என்பதை உறுதி செய்வதே தொழில்நுட்பக் குழுவின் பணி என குறிப்பிடப்பட்டுள்ளது.
LPL தொடரின் நான்காவது பருவகாலத்துக்கான போட்டிகள் ஜூலை 30ம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
LPL தொழிநுட்பக் குழு
- தலைவர் – பந்துல ரத்நாயக்க
- செயலாளர் மற்றும் உறுப்பினர் – டைரோன் விஜேவர்தன
- உறுப்பினர் – தரங்க பரணவிதான
- உறுப்பினர் – ஷான் பெர்னாண்டோ
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<