மூன்றாவது தடவையாக நடைபெறவிருந்த LPL தொடர் ஒத்திவைப்பு!

Lanka Premier League 2022

395

இலங்கையில் அடுத்த மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவிருந்த லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடர் திகதிகள் அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

LPL தொடர் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் 21ம் திகதிவரை நடைபெறும் என ஏற்கனவே அறிக்கப்பட்டிருந்தது.

>> இராணுவ கழகத்துக்காக பந்துவீச்சில் அசத்திய ரத்னராஜ் தேனுரதன்

எனினும் நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையை கருத்திற்கொண்டு போட்டித்தொடரை நடத்துவதற்கான சாத்தியமில்லை என போட்டி தொடரின் உரிமத்தை பெற்றுள்ள IPG நிறுவனம் இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறியத்தந்துள்ளது.

இதன் காரணமாக திகதிகள் அறிவிக்கப்படாமல் LPL தொடரானது ஒத்திவைக்கப்படுவதாக இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

மூன்றாவது தடவையாக நடைபெறவிருந்த LPL தொடருக்கான வீரர்கள் வரைவு இம்மாத ஆரம்பத்தில் நடைபெற்றிருந்த நிலையில், அணிக்குழாம்கள் இறுதிசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<