இலங்கையில் மூன்றாவது தடவையாக நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
LPL தொடரானது அடுத்த மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகி, 21ம் திகதிவரை நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு சம்பியன் கிண்ணத்தை வெற்றிக்கொண்ட ஜப்னா கிங்ஸ் அணி மற்றும் இரண்டாவது இடத்தை பிடித்துக்கொண்ட கோல் கிளேடியேட்டர்ஸ் அணிகள் முதல் போட்டியில் விளையாடவுள்ளன.
கண்டி பெல்கோன்ஸ் அணியில் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்!
தொடரில் மொத்தமாக 20 லீக் போட்டிகள் உட்பட 24 போட்டிகள் நடைபெறவுள்ளன. ஆகஸ்ட் 10ம் திகதிவரை 14 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், இந்தப்போட்டிகள் அனைத்தும் கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.
இதன் பின்னர் நடைபெறவுள்ள லீக் போட்டிகள், குவாலிபையர், எலிமினேட்டர் மற்றும் இறுதிப்போட்டிகள் ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு நாட்களும் தலா 2 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், முதல் போட்டி பிற்பகல் 03.00 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 07.30 மணிக்கும் ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டி அட்டவணை
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<