2021ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் முதலாவது குவாலிபையர் (Qualifier) போட்டியில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணி, ஜப்னா கிங்ஸ் அணியினை 64 ஓட்டங்களால் வீழ்த்தியிருப்பதுடன் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய முதல் அணியாகவும் மாறியுள்ளது.
>>கொழும்பு ஸ்டார்ஸை வீழ்த்தி குவாலிபையருக்கு முன்னேறிய தம்புள்ள ஜயண்ட்ஸ்
ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) முதலாவது குவாலிபையர் போட்டி ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணியின் தலைவர் திசர பெரேரா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு வழங்கினார்.
அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு குசல் மெண்டிஸ், தனுஷ்க குணத்திலக்க ஜோடி அட்டகாசமான ஆரம்பத்தினை வழங்கியது.
பின்னர் பாரிய இணைப்பாட்டம் ஒன்றினை உருவாக்கிய குசல் மெண்டிஸ் – தனுஷ்க குணத்திலக்க ஜோடி LPL வரலாற்றில் ஆரம்ப விக்கெட்டுக்காகப் பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டத்தினைப் பதிவு செய்திருந்தது. 121 ஓட்டங்கள் வரை நீடித்த இந்த ஆரம்ப இணைப்பாட்டம் தனுஷ்க குணத்திலக்கவின் விக்கெட்டோடு நிறைவுக்கு வந்தது.
திசர பெரேராவின் விக்கெட் வேட்டைக்கு இரையான தனுஷ்க குணத்திலக்க இந்த பருவகாலத்திற்கான LPL தொடரில் தான் வெளிப்படுத்திய சிறந்த இன்னிங்சுடன் 42 பந்துகளில் 6 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 55 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
குணத்திலக்கவினைத் தொடர்ந்து குசல் மெண்டிஸ் அரைச்சதம் ஒன்று பெற்று கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு பலம் சேர்க்க, அணித்தலைவர் பானுக்க ராஜபக்ஷவும் அதிரடியாக செயற்பட்டு தனது தரப்பு ஓட்டங்களை அதிகரித்திருந்தார்.
பின்னர் இந்த வீரர்களின் துடுப்பாட்ட உதவியோடு கோல் கிளேடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இது LPL தொடரின் இந்தப் பருவகாலத்தில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணி இன்னிங்ஸ் ஒன்றில் பதிவு செய்த கூடிய ஓட்டங்களாகவும் பதிவானது.
இந்திய டெஸ்ட் அணியின் உப தலைவராகும் கேஎல் ராகுல்
கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் குசல் மெண்டிஸ் தனது சிறந்த T20 இன்னிங்ஸ் உடன் 53 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 85 ஓட்டங்கள் பெற்றிருந்தார். இதேவேளை பானுக்க ராஜபக்ஷ 15 பந்துகளில் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 25 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மறுமுனையில் ஜப்னா கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் அணித்தலைவர் திசர பெரேரா, வஹாப் ரியாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சுரங்க லக்மால் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியிருந்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 189 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய ஜப்னா கிங்ஸ் அணிக்கு சிக்ஸர் ஒன்றுடன் அவிஷ்க பெர்னாண்டோ சிறந்த ஆரம்பத்தினை வழங்கிய போதும், மொஹமட் ஆமிர் வீசிய இரண்டாவது இன்னிங்ஸின் இரண்டாவது பந்தில் அவரின் விக்கெட் பறிபோனது. இதனால், ஆறு ஓட்டங்களுடன் அவிஷ்க பெர்னாண்டோ ஓய்வறை நடந்தார்.
எனினும் மற்ற ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிரடியான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தி ஓட்டங்களை அதிகரித்த போதும், நுவன் துஷாரவின் வேகப்பந்துவீச்சுக்கு ஜப்னா கிங்ஸ் அணியின் ஏனைய முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் தடுமாற்றமான ஆட்டத்தினை வெளிப்படுத்த அவ்வணி 16.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 124 ஓட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில் தோல்வியினைத் தழுவியது.
WATCH – டிக்வெல்லவின் தலைமையில் கொழும்பு ஸ்டார்ஸை எலிமினேட் செய்த தம்புள்ள!
ஜப்னா கிங்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 37 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 59 ஓட்டங்களைப் பெற்றிருக்க, வனிந்து ஹஸரங்க 15 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 29 ஓட்டங்களைப் பெற்றார்.
கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சில் திறமையாக செயற்பட்டிருந்த நுவன் துஷார 13 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைச் சாய்த்திருக்க, இசுரு உதான, அன்வர் அலி, புலின தரங்க மற்றும் மொஹமட் ஆமீர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் தோல்வியடைந்திருக்கும் ஜப்னா கிங்ஸ் அணி, தமது இறுதிப் போட்டி வாய்ப்புக்காக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) குவாலிபையர் போட்டி 2 இல் தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணியுடன் மோதவுள்ளது. போட்டியின் ஆட்ட நாயகன் விருதினை கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் குசல் மெண்டிஸ் பெற்றிருந்தார்.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Kusal Mendis | lbw b Suranga Lakmal | 85 | 53 | 7 | 4 | 160.38 |
Danushka Gunathilaka | b Thisara Perera | 55 | 42 | 6 | 1 | 130.95 |
Anwar Ali | c Rahmanullah Gurbaz b Thisara Perera | 12 | 7 | 2 | 0 | 171.43 |
Bhanuka Rajapakse | c & b | 25 | 15 | 0 | 0 | 166.67 |
Mohammad Hafeez | c & b | 1 | 3 | 0 | 0 | 33.33 |
Samit Patel | not out | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 10 (b 0 , lb 7 , nb 0, w 3, pen 0) |
Total | 188/5 (20 Overs, RR: 9.4) |
Fall of Wickets | 1-121 (13.5) Danushka Gunathilaka, 2-147 (15.5) Anwar Ali, 3-175 (18.5) Kusal Mendis, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Mahesh Theekshana | 4 | 0 | 34 | 0 | 8.50 | |
Suranga Lakmal | 3 | 0 | 29 | 1 | 9.67 | |
Wahab Riaz | 4 | 0 | 39 | 2 | 9.75 | |
Wanindu Hasaranga | 4 | 0 | 33 | 0 | 8.25 | |
Thisara Perera | 4 | 0 | 36 | 2 | 9.00 | |
Shoaib Malik | 1 | 0 | 10 | 0 | 10.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Avishka Fernando | b | 6 | 2 | 0 | 0 | 300.00 |
Rahmanullah Gurbaz | c & b | 59 | 37 | 0 | 0 | 159.46 |
Tom Kohler-Cadmore | c & b | 4 | 5 | 0 | 0 | 80.00 |
Ashen Bandara | run out () | 9 | 17 | 0 | 0 | 52.94 |
Shoaib Malik | c & b | 2 | 5 | 0 | 0 | 40.00 |
Thisara Perera | c & b | 4 | 6 | 0 | 0 | 66.67 |
Wanindu Hasaranga | c & b | 29 | 15 | 0 | 0 | 193.33 |
Chathuranga de Sliva | c & b | 6 | 8 | 0 | 0 | 75.00 |
Wahab Riaz | b | 1 | 4 | 0 | 0 | 25.00 |
Suranga Lakmal | not out | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Mahesh Theekshana | c & b | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Extras | 4 (b 0 , lb 0 , nb 0, w 4, pen 0) |
Total | 124/10 (16.5 Overs, RR: 7.37) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Mohammad Amir | 3 | 0 | 22 | 1 | 7.33 | |
Samit Patel | 3 | 0 | 33 | 0 | 11.00 | |
Nuwan Thushara | 3.5 | 0 | 13 | 5 | 3.71 | |
Isuru Udana | 3 | 0 | 19 | 1 | 6.33 | |
Pulina Tharanga | 2 | 0 | 13 | 1 | 6.50 | |
Mohammad Hafeez | 1 | 0 | 21 | 0 | 21.00 | |
Anwar Ali | 1 | 0 | 3 | 0 | 3.00 |
முடிவு – கோல் கிளேடியேட்டர்ஸ் அணி 64 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<