Home Tamil பிளே ஓப் வாய்ப்பினை தக்கவைத்துள்ள கண்டி வொரியர்ஸ்

பிளே ஓப் வாய்ப்பினை தக்கவைத்துள்ள கண்டி வொரியர்ஸ்

245

கண்டி வொரியர்ஸ் மற்றும் தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் 18 ஆவது லீக் போட்டியில் கண்டி வொரியர்ஸ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.

மேலும் இந்த வெற்றியுடன் கண்டி வொரியர்ஸ் அணி, LPL தொடரின் பிளே ஓப் சுற்றுக்கான தமது வாய்ப்பினையும் தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்துள்ளது.

வியாஸ்காந்த்தின் அசத்தல் பந்துவீச்சுடன் ஸ்டார்ஸை வீழ்த்திய ஜப்னா!

கண்டி வொரியர்ஸ் அணி, பிளே ஓப் சுற்றுக்கான தமது வாய்ப்பினை தக்க வைக்க கட்டாய வெற்றியொன்றினை எதிர்பார்த்து களமிறங்கிய இந்தப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று (16) நடைபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணியின் தலைவர் தசுன் ஷானக்க முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை தமது தரப்பிற்காகப் பெற்றார்.

இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்திருந்த பில் சோல்ட் தடுமாற்றமான முறையில்  செயற்பட அவரின் விக்கெட் பினுர பெர்னாண்டோவின் துல்லியமான பந்துவீச்சில் பறிபோனது. போல்ட் செய்யப்பட்டிருந்த சோல்ட் வெறும் 03 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார்.

சோல்டின் பின்னர் புதிய வீரராக வந்த ஜனித் லியனகே ஓட்டம் எதனையும் பெறாமல் ஆட்டமிழக்க, அதன் பின்னர் மற்ற ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நிரோஷன் டிக்வெல்லவும் பினுர பெர்னாண்டோவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சோல்ட் போன்று போல்ட் செய்யப்பட்ட நிரோஷன் டிக்வெல்ல 12 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிரோஷன் டிக்வெல்லவின் விக்கெட்டை அடுத்து அணித்தலைவர் தசுன் ஷானக்க உள்ளடங்கலாக தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணியின் மத்திய வரிசை மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய போதும் ரமேஷ் மெண்டிஸ் மற்றும் சஜித ஜயத்திலக்க ஆகியோர் மாத்திரமே பொறுப்புடன் செயற்பட்டு ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

தொடர்ந்து இந்த வீரர்களின் துடுப்பாட்ட உதவியுடன் தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அடிலெய்ட் டெஸ்ட்டில் பட் கம்மின்ஸுக்கு தடை: தலைவரானார் ஸ்மித்

தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ரமேஷ் மெண்டிஸ் 28 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 2 பெளண்டரிகள் அடங்கலாக 41 ஒட்டங்களைப் பெற்றிருக்க, சஜித ஐயத்திலக்க 34 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

கண்டி வொரியர்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் பினுர பெர்னாண்டோ மற்றும் அல்-அமின் ஹொசைன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 131 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய கண்டி வொரியர்ஸ் அணி, தமது எதிர்பார்ப்பு வீரர்களை இழந்து வெற்றி இலக்கிற்கான பயணத்தின் ஆரம்பத்தில் தடுமாறியது.

அந்தவகையில் கண்டி வொரியர்ஸ் அணிக்கு நம்பிக்கை தருவார் என எதிர்பார்க்கப்பட்ட சரித் அசலங்க வெறும் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க மினோத் பானுக்க 8 ஓட்டங்களுடனும், கமிந்து மெண்டிஸ் 2 ஓட்டங்களுடனும் தங்களது விக்கெட்டுக்களைப் பறிகொடுத்திருந்தனர்.

எனினும் பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய ரவி போபரா, அணித்தலைவர் அஞ்செலோ பெரேரா ஆகியோரின் ஆட்டம் கைகொடுக்க கண்டி வொரியர்ஸ் போட்டியின் வெற்றி இலக்கினை 19.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்கள் பெற்றவாறு அடைந்தது.

ரங்கன ஹேரத்திற்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதி

கண்டி வொரியர்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்த ரவி போபரா அரைச்சதம் விளாசியதுடன் 50 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 59 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருக்க, ஆட்டமிழக்காது இருந்த அஞ்சலோ பெரேரா 22 பந்துகளுக்கு 29 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பு வெற்றியை உறுதி செய்திருந்தார்.

தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணியின் பந்துவீச்சில் ரமேஷ் மெண்டிஸ் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்ட நாயகனாக கண்டி வொரியர்ஸ் அணியின் ரவி போபரா தெரிவானார்.

போட்டியின் சுருக்கம்


Result


Kandy Falcons
135/4 (19.2)

Dambulla Aura
130/9 (20)

Batsmen R B 4s 6s SR
Niroshan Dickwella b 12 9 0 0 133.33
Phil Salt b 3 9 0 0 33.33
Janith Liyanage c & b 0 4 0 0 0.00
Dasun Shanaka not out 4 5 0 0 80.00
Najibullah Zadran c & b 14 17 0 0 82.35
Sachitha Jayathilake c & b 34 40 0 0 85.00
Chamika Karunaratne c & b 0 3 0 0 0.00
Ramesh Mendis b 41 28 0 0 146.43
Marchant De Lange c & b 1 2 0 0 50.00
Tharindu Rathnayake run out () 1 1 0 0 100.00
Imran Tahir not out 5 2 0 0 250.00


Extras 15 (b 0 , lb 1 , nb 0, w 14, pen 0)
Total 130/9 (20 Overs, RR: 6.5)
Bowling O M R W Econ
Nimesh Vimukthi 4 0 22 1 5.50
Binura Fernando 4 0 22 2 5.50
Kamindu Mendis 4 0 27 0 6.75
Shiraz Ahmed 4 0 26 1 6.50
Al-Amin Hossain 4 0 32 3 8.00


Batsmen R B 4s 6s SR
Kennar Lewis c & b 27 26 0 0 103.85
Charith Asalanka lbw b 4 2 0 0 200.00
Nishan Madushka Fernando not out 59 50 0 0 118.00
Minod Bhanuka c & b 8 10 0 0 80.00
Kamindu Mendis lbw b 2 6 0 0 33.33
Angelo Perera not out 29 22 0 0 131.82


Extras 6 (b 0 , lb 3 , nb 0, w 3, pen 0)
Total 135/4 (19.2 Overs, RR: 6.98)
Bowling O M R W Econ
Imran Tahir 4 0 17 2 4.25
Tharindu Rathnayake 4 0 28 0 7.00
Sachitha Jayathilake 4 0 30 0 7.50
Marchant De Lange 3.2 0 38 0 11.88
Ramesh Mendis 4 0 19 2 4.75



முடிவு – கண்டி வொரியர்ஸ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்ற

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<