Home Tamil அதிரடி துடுப்பாட்டத்தோடு கொழும்பினை வீழ்த்திய ஜப்னா கிங்ஸ்

அதிரடி துடுப்பாட்டத்தோடு கொழும்பினை வீழ்த்திய ஜப்னா கிங்ஸ்

2633

ஜப்னா கிங்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டார்ஸ் அணிகள் இடையே நடைபெற்று முடிந்திருக்கும், லங்கா பிரீமியர் லீக் தொடரின் 09ஆவது லீக் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி அபாரமான முறையில் 93 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

தம்புள்ள – கோல் போட்டி மழையினால் கைவிடல்

இன்று (10) கெத்தராம ஆர். பிரேமதாச மைதானத்தில் கொழும்பு ஸ்டார்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் அணிகள் இடையிலான போட்டி ஆரம்பமாகியிருந்தது.

தமது இறுதிப் போட்டியில் தம்புள்ளை ஜயன்ட்ஸ் வீரர்களிடம் தோல்வியடைந்திருந்த கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் தலைவர் தனன்ஞய டி சில்வா மழையின் குறுக்கீட்டினால் அணிக்கு 18 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை ஜப்னா கிங்ஸ் வீரர்களுக்கு வழங்கியிருந்தார்.

மறுமுனையில் தமது கடைசி மோதலில் கண்டி வொரியர்ஸ் அணியினை வீழ்த்தியிருந்த ஜப்னா கிங்ஸ் அணி, அதே நம்பிக்கையுடன் போட்டியில் முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்திருந்தது.

எனினும் ஜப்னா கிங்ஸ் அணியின் ஆரம்ப வீரர்களாக வந்திருந்த அவிஷ்க பெர்னாண்டோ, ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆகிய இருவரும் சீக்குகே பிரசன்ன மற்றும் துஷ்மன்த சமீரவின் திறமையான பந்துவீச்சின் காரணமாக ஏமாற்றமான ஆரம்பத்தினை வழங்கியிருந்தனர்.

ஜப்னா கிங்ஸ் அணியின் முதல் விக்கெட்டாக போட்டியின் முதல் பந்திலேயே சீக்குகே பிரசன்னவிற்கு தனது விக்கெட்டினை கொடுத்திருந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் ஓட்டமின்றி ஓய்வறை நடக்க, அவிஷ்க பெர்னாண்டோ வெறும் 4 ஓட்டங்களுடன் தனது விக்கெட்டினை துஷ்மன்த சமீரவிற்கு தாரை வார்த்திருந்தார். இதனால், ஜப்னா கிங்ஸ் அணி 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியிருந்தது.

ஆனால் ஜப்னா கிங்ஸ் அணியின் மத்திய வரிசை வீரர்கள் அனைவரும் அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்த அவ்வணியின் ஓட்டங்கள் மிக விரைவாக அதிகரிக்கத் தொடங்கியது.

ஜப்னா கிங்ஸ் அணியின் மத்திய வரிசையில் துடுப்பாடியிருந்த கோஹ்லர்-கெட்மோர் வெறும் 21 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 40 ஓட்டங்களைப் பெற, சொஹைப் மலிக் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் உடன் 44 ஓட்டங்களை எடுத்திருந்தார். இவர்களோடு அஷேன் பண்டாரவும் 30 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 2 பௌண்டரிகள் பெற்று தனது தரப்பினை வலுப்படுத்தியிருந்தார்.

பங்களாதேஷ் அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்சியாளராகும் ரங்கன ஹேரத்

பின்னர் அணித்தலைவர் திசர பெரேராவும் தனது இறுதிநேர அதிரடி மூலம் ஜப்னா கிங்ஸ் அணிக்கு பெறுமதி சேர்க்க, அவ்வணி 18 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 207 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இந்த 207 ஓட்டங்கள் 2021ஆம் ஆண்டுக்கான LPL தொடரில் அணியொன்று பெற்ற கூடுதல் ஓட்டங்களாகவும் பதிவாகியிருந்தது.

ஜப்னா கிங்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் திசர பெரேரா வெறும் 23 பந்துகளுக்கு  5 இமாலய சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 57 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

இதேநேரம் கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் சீக்குகே பிரசன்ன 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க, துஷ்மன்த சமீர, நவின்-உல்-ஹக் மற்றும் அஷான் பிரியஞ்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 208 ஓட்டங்களை 18 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி, தொடக்கத்தில் இருந்தே தடுமாற்றம் காட்டியிருந்ததோடு 15.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 114 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் படுதோல்வியடைந்தது.

கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அஷான் பிரியஞ்சன் 25 பந்துகளுக்கு 4 பௌண்டரிகள் அடங்கலாக 35 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பில் கூடுதல் ஓட்டங்கள் பெற்ற வீரராக மாற, ஜப்னா கிங்ஸ் அணியில் மகீஷ் தீக்ஷன மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியின் வெற்றியோடு ஜப்னா கிங்ஸ் அணி LPL தொடரில் தமது தொடர்ச்சியான மூன்றாவது வெற்றியனைப் பதிவு செய்வதோடு, LPL அணிகளுக்கான புள்ளிகள் பட்டியலிலும் முதலிடம் பெற்றிருக்கின்றது.

போட்டியின் ஆட்டநாயகனாக ஜப்னா கிங்ஸ் அணியின் தலைவர் திசர பெரேரா தெரிவாகியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

Result


Jaffna Kings
207/5 (18)

Colombo Stars
114/10 (15.5)

Batsmen R B 4s 6s SR
Rahmanullah Gurbaz st Dhananjaya de Silva b Seekkuge Prasanna 0 1 0 0 0.00
Avishka Fernando not out 4 3 0 0 133.33
Tom Kohler-Cadmore c & b 40 21 0 0 190.48
Shoaib Malik c & b 44 24 0 0 183.33
Ashen Bandara c & b 42 30 0 0 140.00
Thisara Perera not out 57 23 0 0 247.83
Wanindu Hasaranga c & b 2 3 0 0 66.67
Chathuranga de Sliva not out 4 2 0 0 200.00


Extras 14 (b 1 , lb 1 , nb 1, w 11, pen 0)
Total 207/5 (18 Overs, RR: 11.5)
Bowling O M R W Econ
Seekkuge Prasanna 4 0 31 3 7.75
Dushmantha Chameera 4 0 54 1 13.50
Keemo Paul 3 0 41 0 13.67
Naveen Ul Haq 4 0 36 1 9.00
Thikshila de silva 1 0 20 0 20.00
Ashan Priyanjan 2 0 23 1 11.50


Batsmen R B 4s 6s SR
Kusal Perera c & b 0 2 0 0 0.00
Tom Banton c & b 18 9 0 0 200.00
Sherfane Rutherford c & b 10 7 0 0 142.86
Ashan Priyanjan c & b 35 25 0 0 140.00
Thikshila de silva c & b 0 1 0 0 0.00
Dhananjaya de Silva c & b 1 4 0 0 25.00
Dinesh Chandimal c & b 28 20 0 0 140.00
Keemo Paul c & b 1 3 0 0 33.33
Seekkuge Prasanna c & b 7 10 0 0 70.00
Dushmantha Chameera c & b 5 13 0 0 38.46
Naveen Ul Haq not out 1 2 0 0 50.00


Extras 8 (b 1 , lb 2 , nb 0, w 4, pen 1)
Total 114/10 (15.5 Overs, RR: 7.2)
Bowling O M R W Econ
Mahesh Theekshana 4 0 25 4 6.25
Suranga Lakmal 2 0 25 0 12.50
Wahab Riaz 3.5 0 26 4 7.43
Wanindu Hasaranga 4 0 17 2 4.25
Chathuranga de Sliva 2 0 18 0 9.00



முடிவு – ஜப்னா கிங்ஸ் அணி 93 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<