லங்கா பிரீமியர் லீக் தொடரில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியை, இரண்டாவது தடவைாயக இந்த ஆண்டு எதிர்த்தாடிய, கண்டி வொரியர்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தங்களுடைய முதல் றெ்றியை பதிவுசெய்துள்ளது.
பானுக ராஜபக்ஷ தலைமையிலான கோல் கிளேடியேட்டர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்திருந்தது. கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் துடுப்பாட்டம் மிகவும் பலமானதாக கடந்த போட்டிகளில் இருந்தாலும், இந்த போட்டியில் அவர்களுடைய துடுப்பாட்டம் சற்று வீழ்ச்சியடைந்திருந்தது.
அதிரடி துடுப்பாட்டத்தோடு கொழும்பினை வீழ்த்திய ஜப்னா கிங்ஸ்
முக்கியமாக தடைக்கு பின்னர் திரும்பியிருந்த குசல் மெண்டிஸ் மீண்டும் ஓட்டக்குவிப்புக்கு வருவாரா? என்ற கேள்விகள் எழுந்திருந்த போதும், இந்த போட்டியில் அணிக்காக பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
ஒருபக்கம் குசல் மெண்டிஸ், அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுசேர்க்க, முறுமுனையில் சீறான இடைவெளிகளில் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. குறிப்பாக ஒவ்வொரு விக்கெட்டுக்கும் இடையில், சிறிய இணைப்பாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட போதும், அதனை பலமான இணைப்பாட்டமாக மாற்றுவதற்கு கோல் கிளேடியேட்டர்ஸ் அணி தவறியது.
குசல் மெண்டிஸ் 33 பந்துகளுக்கு 44 ஓட்டங்களை பெற்று, அரைச்சதத்தை தவறவிட, இறுதிவரை போராடிய சமித் பட்டேல் 36 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இவர்களை தவிர்த்து ஏனைய அனைத்து வீரர்களும் ஓட்டங்களை குவிக்க தவறினர். அதுமாத்திரமின்றி கண்டி வொரியர்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் ஓட்டவேகத்தையும் குறைந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதன் காரணமாக, கோல் கிளேடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 127 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
கண்டி வொரியர்ஸ் அணியின் பந்துவீச்சினை பொருத்தவரை, துடுப்பாட்டத்தில் மாத்திரம் சோபித்துவந்த கமிந்து மெண்டிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், நிமேஷ் விமுக்தி மற்றும் ஷிராஸ் அஹ்மட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பதிலுக்கு இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களிறமிறங்கிய கண்டி வொரியர்ஸ் அணி, தங்களுடைய முதலாவது வெற்றியை எதிர்பார்த்து களமிறங்கியிருந்தது.
கோல் கிளேடியேட்டர்ஸ் அணி நிர்ணயித்திருந்த இந்த வெற்றியிலக்கு இலகுவானதாக ஆரம்பத்தில் தெரிந்தாலும், ஆட்டத்தின் மத்தியில் சற்று கடினமான ஓட்ட எண்ணிக்கையைாகவே இருந்தது. அதன்படி, சீறான இடைவெளிகளில், கண்டி வொரியர்ஸ் அணி, 9.4 ஓவர்களில் 56 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் இழந்திருந்தது.
ஆனாலும், டொம் மூர்ஸ் மற்றும் ரவி பொப்பாரா ஆகியோர் அரைச்சத இணைப்பாட்டம் ஒன்றை பகிர்ந்து, கண்டி வொரியர்ஸ் அணியின் முதலாவது வெற்றியை இலகுவாக்கினர்.
இவர்கள் இருவரும் மேற்கிந்திய தீவுகள் வீரர்களான டெவோன் தோமஸ் மற்றும் ரோவ்மன் பவல் ஆகியோர், அணியிலிருந்து விலகிய நிலையில், அவர்களுக்கு பதிலாக இன்றைய தினம் களமிறக்கப்பட்டனர். அதன்படி, தங்களுடைய முதல் போட்டியில் களமிறங்கி சிறந்த இணைப்பாட்டத்துடன், அணி வெற்றிபெறுவதற்கு முக்கிய காரணமாகவும் இருந்தனர்.
டொம் மூர்ஸ் 28 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற ரவி பொப்பாரா, 34 ஓட்டங்களையும், ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய சரித் அசலங்க 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். அதன்படி, 18.4 ஓவர்கள் நிறைவில் கண்டி வொரியர்ஸ் அணி 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்திருந்தது. கோல் கிளேடியேட்டர்ஸ் சார்பில், சமித் பட்டேல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இதேவேளை, தங்களுடைய முதல் வெற்றியை பதிவுசெய்துள்ள கண்டி வொரியர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில், 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Kusal Mendis | c Kamindu Mendis b Nimesh Vimukthi | 44 | 34 | 3 | 1 | 129.41 |
Danushka Gunathilaka | b Shiraz Ahmed | 5 | 4 | 1 | 0 | 125.00 |
Sadeera Samarawickrama | b Nimesh Vimukthi | 0 | 6 | 0 | 0 | 0.00 |
Ben Dunk | c Nimesh Vimukthi b Kamindu Mendis | 12 | 14 | 2 | 0 | 85.71 |
Bhanuka Rajapakse | lbw b Kamindu Mendis | 3 | 7 | 0 | 0 | 42.86 |
Samit Patel | not out | 36 | 32 | 1 | 1 | 112.50 |
Dhananjaya Lakshan | c & b Kamindu Mendis | 14 | 15 | 2 | 0 | 93.33 |
Lahiru Madushanka | b Shiraz Ahmed | 2 | 4 | 0 | 0 | 50.00 |
Noor Ahmed | not out | 3 | 5 | 0 | 0 | 60.00 |
Extras | 8 (b 1 , lb 2 , nb 1, w 4, pen 0) |
Total | 127/7 (20 Overs, RR: 6.35) |
Fall of Wickets | 1-17 (1.3) Danushka Gunathilaka, 2-18 (2.4) Sadeera Samarawickrama, 3-44 (6.2) Ben Dunk, 4-60 (8.6) Bhanuka Rajapakse, 5-75 (12.3) Kusal Mendis, 6-95 (16.4) Dhananjaya Lakshan, 7-104 (17.5) Lahiru Madushanka, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Tillakaratne Sampath | 1 | 0 | 13 | 0 | 13.00 | |
Shiraz Ahmed | 4 | 0 | 23 | 2 | 5.75 | |
Nimesh Vimukthi | 4 | 0 | 17 | 2 | 4.25 | |
Kamindu Mendis | 4 | 0 | 25 | 3 | 6.25 | |
Al-Amin Hossain | 2 | 0 | 21 | 0 | 10.50 | |
Sachindu Colombage | 4 | 0 | 20 | 0 | 5.00 | |
Charith Asalanka | 1 | 0 | 5 | 0 | 5.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Charith Asalanka | c Ben Dunk b Dhananjaya Lakshan | 21 | 19 | 2 | 0 | 110.53 |
Tillakaratne Sampath | lbw b Mohammad Amir | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Angelo Perera | b Nuwan Thushara | 12 | 10 | 1 | 1 | 120.00 |
Kamindu Mendis | c & b | 7 | 15 | 0 | 0 | 46.67 |
Sachindu Colombage | not out | 34 | 39 | 1 | 0 | 87.18 |
Nishan Madushka Fernando | st b | 28 | 21 | 0 | 0 | 133.33 |
Minod Bhanuka | not out | 8 | 7 | 0 | 0 | 114.29 |
Extras | 21 (b 0 , lb 3 , nb 0, w 18, pen 0) |
Total | 131/5 (18.4 Overs, RR: 7.02) |
Fall of Wickets | 1-5 (0.6) Tillakaratne Sampath, 2-33 (4.3) Charith Asalanka, 3-40 (5.4) Angelo Perera, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Mohammad Amir | 3 | 0 | 19 | 1 | 6.33 | |
Dhananjaya Lakshan | 3 | 0 | 20 | 1 | 6.67 | |
Nuwan Thushara | 3.4 | 0 | 31 | 1 | 9.12 | |
Noor Ahmad | 4 | 0 | 28 | 0 | 7.00 | |
Samit Patel | 4 | 0 | 20 | 2 | 5.00 | |
Danushka Gunathilaka | 1 | 0 | 10 | 0 | 10.00 |
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<