Home Tamil பலமான ஜப்னா கிங்ஸ் அணியை இலகுவாக வீழ்த்திய கோல் கிளேடியேட்டர்ஸ்

பலமான ஜப்னா கிங்ஸ் அணியை இலகுவாக வீழ்த்திய கோல் கிளேடியேட்டர்ஸ்

Lanka Premier League 2021

1246

இரண்டாவது பருவத்திற்கான லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) இன்று (05) நடைபெற்ற முதல் போட்டியில் பலம் மிக்க ஜப்னா கிங்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடிய கோல் கிளேடியேட்டர்ஸ் அணி 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜப்னா கிங்ஸ் அணியின் தலைவர் திசர பெரேரா முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார்.  ஜப்னா கிங்ஸ் அணியை பொருத்தவரை வஹாப் ரியாஸ், டொம் கொலர் கெட்மோர் மற்றும் ஜெய்டன் சீல்ஸ் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் இணைக்கப்பட, கோல் கிளேடியேட்டர்ஸ் அணியில் சமித் பட்டேல், மொஹமட் ஹபீஸ் மற்றும் நூர் அஹ்மட் ஆகியோர் இணைக்கப்பட்டனர்.

>>LPL டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்வது எப்படி?

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய கோல் கிளேடியேட்டர்ஸ் அணி சார்பில் பானுக ராஜபக்ஷ வேகமான அரைச்சதம் ஒன்றை பதிவுசெய்ய, மறுமுனையில் சமித் பட்டேல் ஆரம்பத்தில் நிதானமாக ஓட்டங்களை பெற்றாலும், இன்னிங்ஸின் இறுதியில் வேகமாக ஓட்டங்களை குவித்தார்.

எனவே, இவர்கள் இருவரின் சிறந்த பங்களிப்பின் ஊடாக, கோல் கிளேடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பானுக ராஜபக்ஷ அதிகபட்சமாக 31 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, சமித் பட்டேல் 6 பௌண்டரிகள் அடங்கலாக 42 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து இறுதி ஓவரில் ஆட்டமிழந்தார்.

எனினும், தங்களுடைய தடைக்கு பின்னர் மீண்டும் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த குசல் மெண்டிஸ் 16 ஓட்டங்களுடனும், தனுஷ்க குணதிலக்க 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். ஜப்னா கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், வனிந்து ஹஸரங்க 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்போது, வனிந்து ஹஸரங்க தன்னுடைய 100வது T20 விக்கெட்டையும் பதிவுசெய்திருந்தார்.

பின்னர் 165 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஜப்னா கிங்ஸ் அணி ஆரம்பம் முதல் விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாற தொடங்கியது. ஜப்னா கிங்ஸ் அணியின் எந்தவொரு முதன்மை துடுப்பாட்ட வீரர்களும் சிறந்த ஓட்ட எண்ணிக்கைக்கு செல்லாத நிலையில், அந்த அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 110 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

ஜப்னா கிங்ஸ் அணிசார்பில், அதிகபட்சமாக வஹாப் ரியாஸ் 27 ஓட்டங்களையும், உபுல் தரங்க 17 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டதுடன், சமித் பட்டேல் 3 விக்கெட்டுகளையும், புலின தரங்க மற்றும் மொஹமட் ஹபீஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அந்தவகையில் முதல் போட்டியில் வெற்றிபெற்ற கோல் கிளேடியேட்டர்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. கோல் கிளேடியேட்டர்ஸ் அணி நாளைய தினம் (06) தங்களுடைய இரண்டாவது போட்டியில், கொழும்பு ஸ்டார்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Result


Galle Gladiators
164/7 (20)

Jaffna Kings
110/10 (18.4)

Batsmen R B 4s 6s SR
Danushka Gunathilaka c Thisara Perera b Suranga Lakmal 8 4 2 0 200.00
Kusal Mendis c Rahmanullah Gurbaz b Jayden Seales 16 12 2 0 133.33
Mohammad Amir c Avishka Fernando b Mahesh Theekshana 15 18 2 0 83.33
Ben Dunk c Thisara Perera b Wanindu Hasaranga 17 17 1 0 100.00
Bhanuka Rajapakse c Rahmanullah Gurbaz b Wanindu Hasaranga 56 31 6 3 180.65
Samit Patel c Wanindu Hasaranga b Jayden Seales 42 31 6 0 135.48
Lahiru Madushanka not out 5 7 0 0 71.43
Lahiru Madushanka c Wanindu Hasaranga b Jayden Seales 0 1 0 0 0.00


Extras 5 (b 0 , lb 0 , nb 1, w 4, pen 0)
Total 164/7 (20 Overs, RR: 8.2)
Fall of Wickets 1-8 (0.4) Danushka Gunathilaka, 2-40 (4.5) Kusal Mendis, 3-41 (5.3) Mohammad Amir, 4-93 (11.2) Ben Dunk, 5-133 (16.2) Bhanuka Rajapakse, 6-163 (19.4) Samit Patel, 7-164 (19.6) Lahiru Madushanka,

Bowling O M R W Econ
Suranga Lakmal 4 0 42 1 10.50
Mahesh Theekshana 4 0 21 1 5.25
Wahab Riaz 2 0 29 0 14.50
Jayden Seales 4 0 23 3 5.75
Sammu Ashan 1 0 5 0 5.00
Thisara Perera 1 0 14 0 14.00
Wanindu Hasaranga 4 0 30 2 7.50


Batsmen R B 4s 6s SR
Upul Tharanga b Mohammad Hafeez 17 13 4 0 130.77
Rahmanullah Gurbaz c Kusal Mendis b Mohammad Hafeez 11 16 1 0 68.75
Tom Kohler-Cadmore c Noor Ahmad b Samit Patel 10 12 0 1 83.33
Avishka Fernando c Bhanuka Rajapakse b Samit Patel 1 2 0 0 50.00
Sammu Ashan st Ben Dunk b Samit Patel 15 19 1 0 78.95
Thisara Perera c Ben Dunk b Lahiru Madushanka 11 12 1 0 91.67
Wanindu Hasaranga b Noor Ahmad 0 3 0 0 0.00
Wahab Riaz c Pulina Tharanga b Noor Ahmad 27 20 2 2 135.00
Suranga Lakmal b Pulina Tharanga 10 10 0 0 100.00
Mahesh Theekshana c Bhanuka Rajapakse b Nuwan Thushara 2 4 0 0 50.00
Jayden Seales not out 0 0 0 0 0.00


Extras 6 (b 4 , lb 1 , nb 0, w 1, pen 0)
Total 110/10 (18.4 Overs, RR: 5.89)
Fall of Wickets 1-28 (3.4) Upul Tharanga, 2-39 (5.4) Rahmanullah Gurbaz, 3-41 (6.3) Avishka Fernando, 4-52 (8.3) Tom Kohler-Cadmore, 5-70 (11.6) Thisara Perera, 6-71 (12.4) Wanindu Hasaranga, 7-75 (13.1) Sammu Ashan, 8-108 (17.4) Wahab Riaz, 9-108 (17.5) Suranga Lakmal, 10-110 (18.4) Mahesh Theekshana,

Bowling O M R W Econ
Nuwan Thushara 2.4 0 20 1 8.33
Isuru Udana 1 0 9 0 9.00
Mohammad Hafeez 4 1 11 2 2.75
Samit Patel 4 0 21 3 5.25
Noor Ahmad 4 0 25 1 6.25
Lahiru Madushanka 1 0 6 1 6.00
Pulina Tharanga 2 0 13 2 6.50



>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<