லங்கா பிரீமியர் லீக்கில் இன்று (06) நடைபெற்ற முதல் போட்டியில், கண்டி வொரியர்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடிய தம்புள்ள ஜயண்ட்ஸ் அணி துடுப்பாட்டத்திலும், பந்துவீச்சிலும் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டதன் மூலம் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியினை பதிவுசெய்துள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கான தீர்மானத்தை தம்புள்ள ஜயண்ட்ஸ் அணியின் தலைவர் தசுன் ஷானக மேற்கொண்டார்.
தசுன் ஷானக தலைமையில் சாதிக்க காத்திருக்கும் தம்புள்ள ஜயண்ட்ஸ்
நாணய சுழற்சியின் வெற்றி ஆரம்பத்துடன், போட்டியின் வெற்றிக்கான ஆரம்பமும், நிரோஷன் டிக்வெல்ல மற்றும் பில் சோல்ட் ஆகியோரின் மிகச்சிறந்த இணைப்பாட்டத்துடன் தம்புள்ள ஜயண்ட்ஸ் அணிக்கு கிடைத்திருந்தது.
பில் சோல்ட் சிக்ஸர்களை விளாசி வேகமான ஆரம்பத்தை பெற்றுக்கொடுக்க, கிரிக்கெட் சபையின் தடைக்கு பின்னர் திரும்பிய நிரோஷன் டிக்வெல்ல அதற்கேற்றவாறு ஓட்டங்களை பெற்று, முதல் விக்கெட்டுக்காக 97 ஓட்டங்களை பகிர்வதற்கு உதவினார். தம்புள்ள ஜயண்ட்ஸ் அணியின் முதல் விக்கெட்டாக நிரோஷன் டிக்வெல்ல 23 பந்துகளில் 37 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்த போதும், முதல் 9 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 113 ஓட்டங்களை அவ்வணி பெற்றுக்கொண்டது.
இவ்வாறான மிகச்சிறந்த ஆரம்பத்தை தம்புள்ள ஜயண்ட்ஸ் அணி பெற்றிருந்த போதும், அரைச்சதம் கடந்து பில் சோல்ட் 27 பந்துகளில் 64 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க, தம்புள்ள ஜயண்ட்ஸ் அணி தடுமாறத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் 200 ஓட்டங்களை கடக்கக்கூடிய வாய்ப்பிருந்த போதும், தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது.
இதில், அணித்தலைவர் தசுன் ஷானக 24 ஓட்டங்களையும், ரமேஷ் மெண்டிஸ் இறுதி ஓவர்களில் துடுப்பெடுத்தாடி 11 பந்துகளுக்கு 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, தம்புள்ள ஜயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
கண்டி வொரியர்ஸ் அணிசார்பில், லஹிரு குமாரவுக்கு முதல் ஓவர் மோசமாக அமைந்திருந்தாலும், மத்திய ஓவர்களில் ஓட்டங்களை கட்டுப்படுத்தியதுடன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். இவருக்கு அடுத்தப்படியாக அல் அமின் ஹொஸைன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தை பொருத்தவரை கடினமான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய கண்டி டஸ்கர்ஸ் அணி ஆரம்பத்திலிருந்து தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கண்டி வொரியர்ஸ் அணியின் சரித் அசலங்க உட்பட முதல் மூன்று விக்கெட்டுகளும் 28 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன. இதன் பின்னர் கமிந்து மெண்டிஸ் (17) மற்றும் அணித்தலைவர் அஞ்செலோ பெரேரா ஆகியோர் 4வது விக்கெட்டுக்காக 42 ஓட்டங்களை பகிர்ந்த போதும், குறித்த இருவரின் விக்கெட்டுகளை வீழ்த்தி, ரமேஷ் மெண்டிஸ் நம்பிக்கை கொடுத்தார்.
இவர்கள் இருவரின் ஆட்டமிழப்புக்கு பின்னர் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட, 88 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து கண்டி வொரியர்ஸ் அணி மேலும் பின்னடைவை சந்தித்தது. ஆனாலும், தனியாளாக சிக்ஸர்களை விளாசி அணியை மீண்டும் ரோவ்மன் பவல் போட்டிக்குள் அழைத்துச்சென்ற போதும், நுவான் பிரதீப்பின் பந்துவீச்சில் இவர் ஆட்டமிழந்து வெளியேற தம்புள்ள ஜயண்ட்ஸ் அணி பக்கம் முழுமையாக போட்டி திரும்பியது.
ரோவ்மன் பவல் அதிகபட்சமாக 42 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, சச்சிந்து கொலம்பகே 27 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார். இந்நிலையில், 20 ஓவர்கள் நிறைவில் கண்டி வொரியர்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தம்புள்ள ஜயண்ட்ஸ் அணிசார்பில் ரமேஷ் மெண்டிஸ் மற்றும் நுவான் பிரதீப் அகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.
சகலதுறையிலும் பிரகாசித்த தம்புள்ள ஜயண்ட்ஸ் அணியினர் இந்த போட்டியில் வெற்றிபெற்று, தங்களுடைய முதல் போட்டியில், முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளனர். இதேநேரம், LPL தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் மற்றும் கோல் கிளேடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Niroshan Dickwella | c & b Lahiru Kumara | 37 | 23 | 0 | 0 | 160.87 |
Phil Salt | c & b Al-Amin Hossain | 64 | 27 | 0 | 0 | 237.04 |
Sohaib Maqsood | c & b Sachindu Colombage | 11 | 11 | 0 | 0 | 100.00 |
Dasun Shanaka | c & b Rovman Powell | 24 | 18 | 0 | 0 | 133.33 |
Sacha De Alwis | c & b Lahiru Kumara | 6 | 7 | 0 | 0 | 85.71 |
Najibullah Zadran | c & b Lahiru Kumara | 2 | 5 | 0 | 0 | 40.00 |
Nuwanidu Fernando | c & b Al-Amin Hossain | 7 | 9 | 0 | 0 | 77.78 |
Chamika Karunaratne | not out | 8 | 9 | 0 | 0 | 88.89 |
Ramesh Mendis | not out | 22 | 11 | 0 | 0 | 200.00 |
Extras | 9 (b 4 , lb 0 , nb 0, w 5, pen 0) |
Total | 190/7 (20 Overs, RR: 9.5) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Ishan Jayaratne | 3 | 0 | 22 | 0 | 7.33 | |
Lahiru Kumara | 4 | 0 | 34 | 3 | 8.50 | |
Asela Gunarathne | 2 | 0 | 26 | 0 | 13.00 | |
Al-Amin Hossain | 4 | 0 | 36 | 2 | 9.00 | |
Sachindu Colombage | 4 | 0 | 46 | 1 | 11.50 | |
Kamindu Mendis | 1 | 0 | 10 | 0 | 10.00 | |
Rovman Powell | 2 | 0 | 12 | 1 | 6.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Kennar Lewis | c & b | 17 | 10 | 0 | 0 | 170.00 |
Devon Thomas † | b | 2 | 3 | 0 | 0 | 66.67 |
Charith Asalanka | c & b | 5 | 4 | 0 | 0 | 125.00 |
Angelo Perera | st Niroshan Dickwella b Ramesh Mendis | 24 | 21 | 0 | 0 | 114.29 |
Kamindu Mendis | st Niroshan Dickwella b Ramesh Mendis | 17 | 18 | 0 | 0 | 94.44 |
Rovman Powell | c & b Nuwan Pradeep | 42 | 21 | 0 | 0 | 200.00 |
Asela Gunarathne | b Nuwan Pradeep | 7 | 13 | 0 | 0 | 53.85 |
Ishan Jayaratne | c Nuwanidu Fernando b Dasun Shanaka | 18 | 12 | 0 | 0 | 150.00 |
Sachindu Colombage | not out | 27 | 16 | 0 | 0 | 168.75 |
Lahiru Kumara | not out | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 11 (b 4 , lb 0 , nb 0, w 7, pen 0) |
Total | 170/8 (20 Overs, RR: 8.5) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Chamika Karunaratne | 4 | 0 | 38 | 0 | 9.50 | |
Nuwan Pradeep | 4 | 0 | 30 | 3 | 7.50 | |
Imran Tahir | 4 | 0 | 28 | 1 | 7.00 | |
Ramesh Mendis | 4 | 0 | 21 | 3 | 5.25 | |
Dasun Shanaka | 3 | 0 | 43 | 1 | 14.33 | |
Nuwanidu Fernando | 1 | 0 | 5 | 0 | 5.00 |