Home Tamil லங்கா பிரீமியர் லீக் தொடரில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு மூன்றாவது வெற்றி

லங்கா பிரீமியர் லீக் தொடரில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு மூன்றாவது வெற்றி

272

கோல் கிளேடியேட்டர்ஸ் மற்றும் தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் 2021 தொடரின் 16 ஆவது லீக் போட்டியில், கோல் கிளேடியேட்டர்ஸ் அணி 09 ஓட்டங்களால் வெற்றியைப் பதிவு செய்தது.

மழையின் இடையூறு காணப்பட்டிருந்த காரணத்தினால் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியும், நாணய சுழற்சிக்குப் பின்னர் அணிக்கு 14 ஓவர்களாக குறைக்கப்பட்டிருந்தது.

சீகுகேவின் அபாரத்தால் இறுதி ஓவரில் கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு வெற்றி

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணியின் தலைவர் தசுன் ஷானக்க முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை கோல் கிளேடியட்டர்ஸ் அணிக்கு வழங்கினார்.

அந்தவகையில் போட்டியில் முதலில் துடுப்பாடிய கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு தனுஷ்க குணத்திலக்க  அதிரடி ஆரம்பத்தினை வழங்கிய போதும் அவர், கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் முதல் விக்கெட்டாக இம்ரான் தாஹிரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்படி, தனுஷ்க குணத்திலக்க 12 பந்துகளில் 4 பெளண்டரிகள் அடங்கலாக 22 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு அதன் ஏனைய ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான குசல் மெண்டிஸ் அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தி ஓட்டங்களை அதிகரித்திருந்தார்.

இதில் கடந்த போட்டியில் அரைச்சதம் தாண்டிய குசல் மெண்டிஸ் இப்போட்டியில் 17 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 35 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குசல் மெண்டிஸின் பின்னர் கோல் கிளேடியேட்டர்ஸ் அணி, தொடர்ச்சியாக விக்கெட்டுக்களைக் பறிகொடுத்த போதும் அதன் தலைவர் பானுக்க ராஜபக்ஷ பொறுப்பான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.

இதனால் கோல் கிளேடியேட்டர்ஸ் அணி 14 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

T20 உலகக் கிண்ண தொடர் நாயகனுக்கு ICC விருது

கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் பானுக்க ராஜபக்ஷ 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பெளண்டரி அடங்கலாக 20 பந்துகளில் 33 ஓட்டங்களைப் பெற்றார்.

மறுமுனையில் தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணியின் பந்துவீச்சில் இம்ரான் தாஹிர் 3 விக்கெட்டுக்களையும், ஜோசுவா லிட்டில் 2 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 135 ஓட்டங்களை 14 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணி, மொஹமட் ஆமிரின் அபார பந்துவீச்சினால் தனது ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான நிரோஷன் டிக்வெல்லவின் விக்கெட்டினை அவர் ஓட்டமேதும் பெறாத நிலையில் பறிகொடுத்தது.

எனினும் ஏனைய துடுப்பாட்ட ஆரம்ப வீரர் பிலிப் சோல்ட் திறமையாக ஆடி 29 பந்துகளுக்கு 3 பெளண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 41 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இதன் பின்னர் மூன்றாம் இலக்கத்தில் துடுப்பாடிய ஜனித் லியனகேவும் தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணிக்கு அதிரடியான அரைச்சதம் ஒன்றின் மூலம் பலம் சேர்த்தார்.

ஆனால் ஜனித் லியனகவின் விக்கெட்டினை அடுத்து தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணிக்கு நஜிபுல்லா சத்ரான் போன்றோர் சிறு அதிரடி காட்டிய போதும் ஏனைய வீரர்களின் சற்று மந்தமான ஆட்டம் தோல்வியினைப் பெறுவதற்கு காரணமாக அமைந்திருந்தது.

ஜப்னா கிங்ஸின் அடுத்த போட்டிகளில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு

இதன்படி கடைசியில்  தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணி 14 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில் தோல்வியை தழுவியது.

தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஜனித் லியனகே 37 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். மேலும், நஜிபுல்லா சத்ரான் 9 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 16 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

மறுமுனையில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் சமிட் பட்டேல் மற்றும் இசுரு உதான ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியின் வெற்றியோடு கோல் கிளேடியேட்டர்ஸ் அணி இந்தப் பருவகாலத்திற்கான LPL தொடரில் தமது மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்திருப்பதோடு, தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணிக்கு இது தொடரில் மூன்றாவது தோல்வியாக அமைகின்றது.

போட்டியின் ஆட்ட நாயகன் விருதினை கோல் கிளேடியட்டர்ஸ் அணியின் சமிட் பட்டேல் பெற்றிருந்தார்.

போட்டியின் சுருக்கம்


Result


Galle Gladiators
134/7 (14)

Dambulla Aura
125/5 (14)

Batsmen R B 4s 6s SR
Danushka Gunathilaka b Imran Tahir 22 12 4 0 183.33
Kusal Mendis c & b 35 17 4 1 205.88
Bhanuka Rajapakse c & b 33 20 1 3 165.00
Samit Patel c & b 8 9 0 0 88.89
Mohammad Hafeez c & b 11 6 1 1 183.33
Dhananjaya Lakshan run out () 3 3 0 0 100.00
Mohammad Shamaaz not out 6 9 0 0 66.67
Isuru Udana c & b 13 8 2 0 162.50


Extras 3 (b 0 , lb 0 , nb 0, w 3, pen 0)
Total 134/7 (14 Overs, RR: 9.57)
Fall of Wickets 1-68 (6.1) Kusal Mendis, 2-2 (30) Danushka Gunathilaka,

Bowling O M R W Econ
Josh Little 3 0 29 2 9.67
Ramesh Mendis 3 0 41 0 13.67
Imran Tahir 3 0 20 3 6.67
Tharindu Rathnayake 3 0 17 1 5.67
Sachitha Jayathilake 1 0 14 0 14.00
Chamika Karunaratne 1 0 13 0 13.00


Batsmen R B 4s 6s SR
Niroshan Dickwella b 0 3 0 0 0.00
Phil Salt c & b 41 29 3 1 141.38
Janith Liyanage c & b 51 37 0 0 137.84
Dasun Shanaka c & b 1 2 0 0 50.00
Najibullah Zadran c & b 16 9 0 0 177.78
Chamika Karunaratne not out 8 3 0 0 266.67
Sachitha Jayathilake not out 5 2 0 0 250.00


Extras 3 (b 0 , lb 0 , nb 1, w 2, pen 0)
Total 125/5 (14 Overs, RR: 8.93)
Bowling O M R W Econ
Mohammad Amir 3 1 24 1 8.00
Samit Patel 3 0 24 2 8.00
Isuru Udana 3 0 30 2 10.00
Pulina Tharanga 2 0 19 0 9.50
Noor Ahmad 3 0 28 0 9.33



முடிவு – கோல் கிளேடியேட்டர்ஸ் அணி 09 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<