Home Tamil பிளேஒப் சுற்றுக்கு செல்லும் நான்காவது அணியாக கொழும்பு ஸ்டார்ஸ்

பிளேஒப் சுற்றுக்கு செல்லும் நான்காவது அணியாக கொழும்பு ஸ்டார்ஸ்

328
Colombo Stars vs Kandy Warriors

தீர்மானமிக்க லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் 20 ஆவது லீக் போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி, கண்டி வொரியர்ஸ் அணியினை 58 ஓட்டங்களால் வீழ்த்தியது.

இதேவேளை இந்த வெற்றியுடன் LPL 2021 ஆம் ஆண்டு தொடரின் பிளே ஒப் சுற்றுக்கு மூன்று வெற்றிகளுடன் தெரிவாகும் நான்காவது அணியாக கொழும்பு ஸ்டார்ஸ் அணி மாற, கண்டி வொரியர்ஸ் அணி LPL தொடரில் இரண்டு வெற்றிகளை மாத்திரம் பதிவு செய்து தொடரில் இருந்து வெளியேறுகின்றது.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (17) தொடங்கிய இந்தப் போட்டி 2021 ஆம் ஆண்டுக்கான LPL தொடரின் இறுதி லீக் போட்டியாக அமைந்தது.

ஜப்னாவின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிளேடியேட்டர்ஸ்!

ஜப்னா கிங்ஸ், கொழும்பு ஸ்டார்ஸ் மற்றும் தம்புள்ளை ஜயன்ட்ஸ் ஆகிய அணிகளுடன் தொடரின் பிளே ஒப் சுற்றுக்கு செல்லும் நான்காவது அணியாக இப்போட்டியில் வெற்றி பெறும் அணியே மாறும் என்ற நிலைமை இருந்த காரணத்தினால், இப்போட்டி LPL தொடரின் காலிறுதிப்போட்டியை ஒத்தவிதத்தில் நடைபெற்றிருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கண்டி வொரியர்ஸ் அணியின் தலைவர் அஞ்செலோ பெரேரா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு வழங்கினார்.

அதன்படி போட்டியின் முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த கொழும்பு ஸ்டார்ஸ் அணி, இன்னிங்ஸின் மூன்றாவது பந்தில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான அஷான் பிரியஞ்சனின் விக்கெட்டினை அவர் ஓட்டம் எதுவும் பெறாத

நிலையில் கண்டி வொரியர்ஸின் சுழல் பந்துவீச்சாளரான நிமேஷ் விமுக்தியிடம் பறிகொடுத்தது.

எனினும் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேரா இந்த LPL தொடரில் தான் வெளிப்படுத்திய சிறந்த துடுப்பாட்ட இன்னிங்ஸ் உடன் கொழும்பு ஸ்டார்ஸ் அணியினை பலப்படுத்தினார். அதன்படி, குசல் பெரேரா 38 பந்துகளினை மாத்திரம் எதிர்கொண்டு 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்களைப் பெற்றார்.

பின்னர் தனன்ஞய டி சில்வாவும் பொறுப்பான ஆட்டத்துடன் கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு வலுச்சேர்த்தார். மொத்தம் 28 பந்துகளை எதிர்கொண்ட தனன்ஞய டி சில்வா 28 பந்துகளுக்கு 7 பௌண்டரிகள் அடங்கலாக 40 ஓட்டங்கள் பெற்றார்.

இதனையடுத்து தினேஷ் சந்திமால் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஜோடி, கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் 7 ஆவது விக்கெட்டுக்காக அதிரடியான முறையில் 68 ஓட்டங்களை இணைப்பாட்டமாகவும் பெற்றுக்கொடுத்தது.

கொரோனாவால் பாகிஸ்தான், மே.தீவுகள் ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு

தொடர்ந்து இந்த இணைப்பாட்டத்தின் உதவியோடு கொழும்பு ஸ்டார்ஸ் அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 20 ஓவர்களில் 182 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காமல் 29 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 44 ஓட்டங்கள் பெற்றிருக்க, அஞ்செலோ மெதிவ்ஸ் வெறும் 16 பந்துகளில் 4 பௌண்டரிகள் அடங்கலாக 29 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

கண்டி வொரியர்ஸ் அணியின் பந்துவீச்சில் நிமேஷ் விமுக்தி 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் துடுப்பாட்டத்தின் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 183 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய கண்டி வொரியர்ஸ் அணி சிறந்த ஆரம்பம் ஒன்றினைப் பெற்ற போதும் ஜெப்ரி வன்டர்சேயின் சுழல் பந்துவீச்சு காரணமாக தடுமாற்றம் காட்டியது.

கண்டி வொரியர்ஸ் அணி இதன் பின்னர் தடுமாற்றத்தில் இருந்து மீளாத நிலையில் 17 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 124 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் படுதோல்வியடைந்தது.

கண்டி வொரியர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ரவி போபரா 31 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 47 ஓட்டங்கள் பெற்றிருக்க, ஏனைய அவ்வணி வீரர்களில் கென்னார் லூயிஸ் (21) மாத்திரமே 20 ஓட்டங்களை தாண்டியிருந்தார்.

இதேவேளை கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் ஜெப்ரி வன்டர்சே 25 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை சாய்க்க, சீகுகே பிரசன்னவும் 2 விக்கெட்டுக்களுடன் கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் வெற்றிக்கு பங்களிப்பு வழங்கியிருந்தார். போட்டியின் ஆட்ட நாயகனாக கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் ஜெப்ரி வன்டர்செய் தெரிவானார்.

இனி LPL தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் தொடரின் பிளே ஒப் சுற்றில், எலிமினேட்டர் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஸ்டார்ஸ் – தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணிகளுக்கு இடையிலும், குவாலிபையர் (Qualifier) 1 போட்டி, கோல் கிளேடியேட்டர்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் அணிகளுக்கு இடையிலும் நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்


Result


Colombo Stars
182/6 (20)

Kandy Falcons
124/10 (17)

Batsmen R B 4s 6s SR
Kusal Perera c Charith Asalanka b Sachindu Colombage 58 37 0 0 156.76
Ashan Priyanjan c Minod Bhanuka b Nimesh Vimukthi 0 1 0 0 0.00
Dhammika Prasad st Minod Bhanuka b Nimesh Vimukthi 40 28 0 0 142.86
Tom Banton run out () 2 4 0 0 50.00
Dinesh Chandimal not out 44 29 0 0 151.72
Keemo Paul c Angelo Perera b Nimesh Vimukthi 1 4 0 0 25.00
Angelo Mathews b Al-Amin Hossain 29 16 0 0 181.25
Seekkuge Prasanna not out 1 1 0 0 100.00


Extras 7 (b 0 , lb 3 , nb 1, w 3, pen 0)
Total 182/6 (20 Overs, RR: 9.1)
Bowling O M R W Econ
Nimesh Vimukthi 4 0 24 3 6.00
Charith Asalanka 2 0 8 0 4.00
Shiraz Ahmed 3 0 47 0 15.67
Kamindu Mendis 3 0 25 0 8.33
Al-Amin Hossain 3 0 40 1 13.33
Sachindu Colombage 3 0 17 1 5.67
Nishan Madushka Fernando 1 0 8 0 8.00
Asela Gunarathne 1 0 10 0 10.00


Batsmen R B 4s 6s SR
Kennar Lewis c Angelo Mathews b Jeffrey Vandersay 21 11 0 0 190.91
Minod Bhanuka c Dinesh Chandimal b Jeffrey Vandersay 6 7 0 0 85.71
Ravi Bopara b Seekkuge Prasanna 47 31 0 0 151.61
Charith Asalanka lbw b Jeffrey Vandersay 14 13 0 0 107.69
Asela Gunarathne b Naveen Ul Haq 17 17 0 0 100.00
Angelo Perera b Seekkuge Prasanna 0 2 0 0 0.00
Kamindu Mendis c Dushmantha Chameera b Jeffrey Vandersay 13 13 0 0 100.00
Nimesh Vimukthi run out () 1 3 0 0 33.33
Sachindu Colombage c Dushmantha Chameera b Jeffrey Vandersay 0 3 0 0 0.00
Al-Amin Hossain c Kusal Perera b Jeffrey Vandersay 0 2 0 0 0.00
Shiraz Ahmed not out 0 0 0 0 0.00


Extras 5 (b 0 , lb 3 , nb 0, w 2, pen 0)
Total 124/10 (17 Overs, RR: 7.29)
Bowling O M R W Econ
Jeffrey Vandersay 4 1 25 6 6.25
Dushmantha Chameera 2 0 15 0 7.50
Dhananjaya de Silva 4 0 33 0 8.25
Seekkuge Prasanna 4 0 27 2 6.75
Naveen Ul Haq 2 0 8 1 4.00
Ashan Priyanjan 1 0 12 0 12.00



முடிவு – கொழும்பு ஸ்டார்ஸ் அணி 58 ஓட்டங்களால் வெற்றி

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க