Home Tamil திரில்லர் வெற்றியினைப் பதிவு செய்த தம்புள்ளை ஜயன்ட்ஸ்

திரில்லர் வெற்றியினைப் பதிவு செய்த தம்புள்ளை ஜயன்ட்ஸ்

300

விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் 11ஆவது லீக் போட்டியில், தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணி கொழும்பு ஸ்டார்ஸ் வீரர்களை ஒரு ஓட்டத்தினால் வீழ்த்தியிருக்கின்றது.

மேலும் இந்த வெற்றியோடு தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணி, LPL அணிகளுக்கான புள்ளிகள் தரவரிசையிலும் முதல் இடத்திற்கு முன்னேறியிருக்கின்றது.

மூர்ஸ், பொப்பாராவின் வருகையுடன் கண்டி வொரியர்ஸிற்கு முதல் வெற்றி

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (12) ஆரம்பித்திருந்த இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தசுன் ஷானக்க தலைமையிலான தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமக்காக பெற்றிருந்தது.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணிக்கு ஆரம்பதுடுப்பாட்டவீரர்களில் ஒருவராக களம் வந்த நிரோஷன் டிக்வெல்ல அதிரடியான துவக்கம் ஒன்றினை வழங்கியிருந்தார். அதன்படி வெறும் 16 பந்துகளையே எதிர்கொண்ட நிரோஷன் டிக்வெல்ல 6 பௌண்டரிகள் அடங்கலாக 30 ஓட்டங்களைப் பெற்று, தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணியின் முதல் விக்கெட்டாக சீக்குகே பிரசன்னவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்திருந்தார்.

நிரோஷன் டிக்வெல்லவின் அதிரடியினை அடுத்து கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் சுழல்பந்துவீச்சாளர்களான ஜெப்ரி வன்டர்சே, சீக்குகே பிரசன்ன ஆகியோரின் சுழலினை சமாளிப்பதில் தடுமாற்றம் கண்ட தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணியின் முன்வரிசை துடுப்பாட்டவீரர்கள் சற்று மந்த கதியில் ஓட்டங்கள் குவிக்கத் தொடங்கினர். இதில் பில் சோல்ட் 21 ஓட்டங்களைப் பெற்றிருக்க, சொஹைப் மக்சூத் 24 ஓட்டங்களை மாத்திரம் எடுத்திருந்தார்.

பின்னர் தம்புள்ளை அணியின் மத்திய வரிசை வீரர்களும் ஏமாற்றமான துடுப்பாட்டத்தினையே தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணிக்காக வெளிப்படுத்தியிருந்தனர். இதில் அணித்தலைவர் தசுன் ஷானக்க பெற்ற 16 ஓட்டங்களே தம்புள்ளை ஜயன்ட்ஸ் தரப்பில் வீரர் ஒருவர் பெற்ற கூடுதல் ஓட்டங்களாக மாறியிருந்தது.

அதிரடி துடுப்பாட்டத்தோடு கொழும்பினை வீழ்த்திய ஜப்னா கிங்ஸ்

இதனையடுத்து தொடர்ந்து ரவி ராம்போலின் பந்துவீச்சினை எதிர்கொள்வதிலும் சரிவினைச் சந்திருந்த தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்ளை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் பந்துவீச்சில் ரவி ராம்போல் மற்றும் ஜெப்ரி வென்டர்சே ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்க்க, சீக்குகே பிரசன்ன 2 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 139 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி, வெற்றி இலக்கிற்கான பயணத்தில் தொடக்கத்தில் இருந்தே தடுமாற்றம் காட்டியிருந்தது.

கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களில் ஒருவராக  வந்திருந்த குசல் பெரேரா தரிந்து ரத்நாயக்கவின் சுழலில் வெறும் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ஏனைய ஆரம்பவீரரான டொம் பன்டன் வெறும் 8 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து இம்ரான் தாஹிரின் சுழலிற்கு இரையாகினார். அதேநேரம், தாஹிரின் சுழலில் ஆட்டமிழந்த ஏனைய வீரரான அஷான் பிரியஞ்சன் வெறும் 3 ஓட்டங்களை மாத்திரம் எடுத்திந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் களம் வந்த செர்பானே ரதர்போர்டும் 4 ஓட்டங்களுடன் ஏமாற்றினார்.

இதனால் கொழும்பு ஸ்டார்ஸ் அணி ஒரு கட்டத்தில் 38 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. எனினும், இந்த நேரத்தில் ஜோடி சேர்ந்த தினேஷ் சந்திமால் – தனன்ஞய டி சில்வா கொழும்பு ஸ்டார்ஸ் அணியினை கட்டியெழுப்பியிருந்ததுடன், தனன்ஞய டி சில்வா ஒரு சிக்ஸர் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 30 பந்துகளுக்கு 33 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

தனன்ஞய டி சில்வாவின் விக்கெட்டினை தொடர்ந்து கொழும்பு ஸ்டார்ஸ் அணி விக்கெட்டுக்களைக் தொடர்ச்சியாக பறிகொடுத்த போதும், தினேஷ் சந்திமால் தனது அதிரடியான ஆட்டம் மூலம் கொழும்பு ஸ்டார்ஸ் அணியினை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல முழு முயற்சியினையும் வழங்கியிருந்தார்.

தம்புள்ள – கோல் போட்டி மழையினால் கைவிடல்

தொடர்ந்து இந்த LPL தொடரில் பெற்ற முதல் அரைச்சதத்துடன் போட்டியினை இறுதி ஓவர் வரை கொண்டு சென்றிருந்த தினேஷ் சந்திமாலுக்கு, தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணியினை வீழ்த்த சாமிக்க கருணாரட்ன வீசிய போட்டியின் இறுதிப்பந்தில் 6 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், சந்திமாலினால் போட்டியின் இறுதிப் பந்தில் நான்கு ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

இதனால் இறுதியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் வெறும் ஒரு ஓட்டத்தினால் துரதிஷ்ட தோல்வி ஒன்றினைத் தழுவியது.

கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காது வெற்றிக்காக போராடியிருந்த தினேஷ் சந்திமால் 40 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 65 ஓட்டங்கள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் தரிந்து ரத்நாயக்க 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியும், இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகன் விருது தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணியின் தினேஷ் சந்திமாலுக்கு வழங்கப்பட்டிருந்தது.

போட்டியின் சுருக்கம்


Result


Colombo Stars
137/8 (20)

Dambulla Aura
138/9 (20)

Batsmen R B 4s 6s SR
Niroshan Dickwella c Kusal Perera b Seekkuge Prasanna 30 15 6 0 200.00
Phil Salt c Kusal Perera b Seekkuge Prasanna 21 18 4 0 116.67
Sohaib Maqsood lbw b Jeffrey Vandersay 24 22 4 0 109.09
Tharindu Rathnayake c Ashan Priyanjan b Jeffrey Vandersay 5 15 0 0 33.33
Najibullah Zadran lbw b Jeffrey Vandersay 11 15 1 0 73.33
Dasun Shanaka c Jeffrey Vandersay b Ravi Rampaul 16 15 2 0 106.67
Ramesh Mendis c Dhananjaya de Silva b Ravi Rampaul 8 7 0 0 114.29
Chamika Karunaratne lbw b Ravi Rampaul 12 10 0 1 120.00
Sachitha Jayathilake run out (Dinesh Chandimal) 1 1 0 0 100.00
Nuwan Pradeep not out 0 0 0 0 0.00


Extras 10 (b 4 , lb 3 , nb 0, w 3, pen 0)
Total 138/9 (20 Overs, RR: 6.9)
Did not bat Imran Tahir,

Fall of Wickets 1-48 (5.1) Niroshan Dickwella, 2-53 (5.5) Phil Salt, 3-88 (11.4) Tharindu Rathnayake, 4-88 (11.5) Sohaib Maqsood, 5-109 (15.2) Najibullah Zadran, 6-120 (17.4) Dasun Shanaka, 7-134 (19.1) Ramesh Mendis, 8-136 (19.4) Sachitha Jayathilake, 9-138 (19.6) Chamika Karunaratne,

Bowling O M R W Econ
Ravi Rampaul 4 0 27 3 6.75
Dushmantha Chameera 2 0 26 0 13.00
Seekkuge Prasanna 4 0 17 2 4.25
Dhananjaya de Silva 2 0 13 0 6.50
Naveen Ul Haq 3 0 15 0 5.00
Ashan Priyanjan 1 0 8 0 8.00
Jeffrey Vandersay 4 0 25 3 6.25


Batsmen R B 4s 6s SR
Kusal Perera b Tharindu Rathnayake 5 7 1 0 71.43
Tom Banton lbw b Imran Tahir 8 11 1 0 72.73
Ashan Priyanjan lbw b Imran Tahir 3 5 0 0 60.00
Dhananjaya de Silva c Chamika Karunaratne b Tharindu Rathnayake 33 30 3 1 110.00
Sherfane Rutherford c Niroshan Dickwella b Tharindu Rathnayake 4 8 1 0 50.00
Dinesh Chandimal not out 65 40 4 3 162.50
Jeffrey Vandersay c Imran Tahir b Ramesh Mendis 7 11 0 0 63.64
Seekkuge Prasanna c Phil Salt b Nuwan Pradeep 7 7 1 0 100.00
Dushmantha Chameera c & b Chamika Karunaratne 0 1 0 0 0.00
Naveen Ul Haq not out 0 0 0 0 0.00


Extras 5 (b 0 , lb 1 , nb 0, w 4, pen 0)
Total 137/8 (20 Overs, RR: 6.85)
Fall of Wickets 1-14 (2.2) Tom Banton, 2-17 (3.2) Kusal Perera, 3-32 (5.6) Ashan Priyanjan, 4-38 (7.5) Sherfane Rutherford, 5-70 (12.1) Dhananjaya de Silva, 6-86 (15.5) Jeffrey Vandersay,

Bowling O M R W Econ
Tharindu Rathnayake 4 0 18 3 4.50
Ramesh Mendis 4 0 23 1 5.75
Imran Tahir 4 0 19 2 4.75
Sachitha Jayathilake 3 0 19 0 6.33
Nuwan Pradeep 4 0 46 1 11.50
Chamika Karunaratne 1 0 11 1 11.00



முடிவு – கொழும்பு ஸ்டார்ஸ் அணி ஒரு ஓட்டத்தினால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<