லங்கா லயன்ஸ் மெய்வல்லுநர் சம்பியன் தொடர் தியகமவில்

361
Athletic

லங்கா லயன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 18ஆவது வருடாந்த கிளப் சம்பியன்ஷிப் போட்டிகள் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் எதிர்வரும் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இந்தச் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 14 வயதிற்குட்பட்டோர், 16 வயதிற்குட்பட்டோர், 18 வயதிற்குட்பட்டோர், 20 வயதிற்குட்பட்டோர் மற்றும் சிரேஷ்ட திறந்த பிரிவு ஆகிய வெவ்வேறு வயதுப் பிரிவுகளில் 1400க்கும் அதிகமான தடகள வீரர்கள் பங்குபற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற போட்டிகளில் திறமை வாய்ந்த தடகள வீரர்கள் வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் பயிற்சிகள் மற்றும் தகுந்த அறிவுகளைப் பெற்றனர் என்பது முக்கிய அம்சமாகும்.