ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக லான்ஸ் க்ளூஸ்னர்

153

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் நட்சத்திர சகலதுறை வீரரான லான்ஸ் க்ளூஸ்னர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

சீரற்ற காலநிலையால் கைவிடப்பட்டது இலங்கை – பாகிஸ்தான் போட்டி!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு…

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்டு வந்த பில் சிம்மோன்ஸின் பதவிக்காலம் நிறைவுக்கு வந்ததை அடுத்து, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை புதிய பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்களை கோரியிருந்தது. இவ்வாறு விண்ணப்பித்திருந்த 50 நபர்களில் இருந்து, லான்ஸ் க்ளூஸ்னர் புதிய தலைமை பயிற்சியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  

ஆப்கானிஸ்தான் அணி லான்ஸ் க்ளூஸ்னரின் ஆளுகைக்கு வந்த பின்னர் விளையாடும் முதல் தொடர், நவம்பர் மாதம் ஆரம்பமாகின்றது. இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் அணியுடன் மேற்கிந்திய தீவுகள் அணி மோதவுள்ளது.  

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் புதிய தலைமை பயிற்சியாளராக லான்ஸ் க்ளூஸ்னர் நியமிக்கப்பட்ட விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி லுப்துல்லா ஸ்டானிக்ஷாய் இவ்வாறு தெரிவித்திருந்தார். 

”லான்ஸ் க்ளூஸ்னர் கிரிக்கெட் உலகில் மிகவும் அறியப்பட்ட ஒரு நபராக இருக்கின்றார். இப்படியான ஒரு நபரிடமிருந்து எங்களது வீரர்கள் அனுகூலங்களை பெறுவது மிகச் சிறந்த விடயமாக பார்க்கப்படுகின்றது.” 

நான் பயங்கரவாதியா?: கவலை வெளியிடும் ஷகிப் மஹ்மூட்

சமூக வலைத்தளங்களில் தன்னை….

இதேநேரம், லான்ஸ் க்ளூஸ்னர், தான் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தலைமை பயிற்சியாளராக மாறிய விடயம் தொடர்பில் பேசும் போது, 

”கிரிக்கெட் உலகில் சிறந்த திறமைகள் கொண்ட ஒரு குழுவுடன் இணைந்து வேலை செய்ய எனக்கு கிடைத்த வாய்ப்பிற்கு நான் பெருமை கொள்வதோடு அதற்காக மிகவும் எதிர்பார்ப்புடனும் இருக்கின்றேன்.” 

”எல்லோருக்கும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி பயமற்ற கிரிக்கெட் விளையாட்டை ஆடுவது தெரியும். கடின உழைப்பை மேற்கொள்வதன் மூலம் ஆப்கானிஸ்தான் எதிர்காலத்தில் ஒரு சிறந்த கிரிக்கெட் அணியாக உருவெடுக்க முடியும். நான் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியினை அவர்களின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல அவர்களுக்கு உதவுவதற்கு எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்.”

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக மாறுவதற்கு முன்னர் லான்ஸ் க்ளூஸ்னர் ஐ.பி.எல். தொடரில் ஆடும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயற்பட்டிருந்ததோடு, தென்னாபிரிக்க டெஸ்ட் மற்றும் T20 அணிகளின் துடுப்பாட்ட பயிற்சியாளராகவும் கடமையாற்றியிருந்தார். அதோடு, க்ளூஸ்னரிற்கு ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கும் துடுப்பாட்ட பயிற்சியாளராக சேவை புரிந்த அனுபவம் இருப்பது குறிப்பிடத்தக்கது.   

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<