புதிய கழகங்களுடனும், புதுமுக வீரர்களுடனும் ஆரம்பமாகியுள்ள 2017/18ஆம் ஆண்டு பருவகாலத்திற்கான லாலிகா சுற்றுப்போட்டிகள் வீரர்களிடமும் பார்வையாளர்களிடமும் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளதை காணமுடிகின்றது. இப்பருவகாலத்திற்கான கிண்ணத்தை கைப்பற்றும் நோக்குடன் லாலிகா சுற்றுப்போட்டியை ஆரம்பித்துள்ள கழகங்கள் சுற்றுப் போட்டியின் ஆரம்பம் முதலே எதிரணிக்கு சவால் விடுப்பதை போட்டியின் முடிவுகளும் லாலிகா புள்ளிப்பட்டியலும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

 2017/18 ஆம் ஆண்டு பருவகாலத்திற்கான லாலிகா சுற்றுப்போட்டிகள் இம்மாதம் 18ஆம் திகதி ஆரம்பமாகியது. 18ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைபெற்று முடிந்த போட்டிகளின் அடிப்படையில் றியல் சொசிடட் கழகம் புள்ளிப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றது. பருவகாலத்தின் முதற் கட்டம் தொடக்கமே பல விறுவறுப்பான போட்டிகள் நடைபெற்றன.

இப்பருவகாலத்திற்கான முதற் போட்டியானது லெகனஸ் கால்பந்து கழகம் மற்றும் அல்வெஸ் கால்பந்து கழகங்களுக்கு இடையில் நடைபெற்றன. இப்போட்டியில் லெகனஸ் கழகம் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் 19ஆம் திகதியன்று செல்டாவிகோ மற்றும் றியல் சொசிடட் அணிகள் மோதிய போட்டியானது பார்வையாளர்களை உச்சத்தின் விளிம்பு வரை கொண்டு சென்றதை காணக்கூடியதாக இருந்தது. போட்டியின் முதல் பாதியில் செல்டாவிகோ 2-0 என்று முன்னிலை வகித்தாலும் , போட்டியின் முடிவில் றியல் சொசிடட் கழகம் 3-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியது.

பிரிமியர் லீக் சுற்றுப் போட்டியில் இவ்வாரம் முன்னேறியுள்ள கழகங்கள்

பிரிமியர் லீக் சுற்றுப்போட்டியின் மூன்றாவது வாரத்திற்கான போட்டிகள் பார்வையாளர்களை..

அதே தினத்தன்று நடந்த ஜீரோனா கழகத்திற்கும் அட்லடிகோ கழகத்திற்குமிடையிலான போட்டியானது வெற்றி தோல்வியின்றி முடிவுற்றாலும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்திய போட்டியாகவே காணப்படுகிறது. போட்டியின் முதல் 25 நிமிடத்திலேயே 2 கோல்களை ஜீரோனா கழகம் பெற்றுக் கொண்டது. எனினும் இரண்டாம் பாதியில் அவ்வணியின் பின்கள வீரர்களின் மோசமான விளையாட்டால் அட்லடிகோ மெட்றிட் அணிக்கு இலகுவாக 2 கோல்களை பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பை அமைத்துக் கொடுத்தது. மேலும்  இப்போட்டியின் முக்கிய விடயம் யாதெனில் இப்போட்டியானது ஜீரோனா கழகத்தின் முதல் லாலிகா சுற்றுப்போட்டியாகும்.

கடந்த 20ஆம் திகதி பாரசிலோனா மற்றும் றியல் பெடிஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியே, பார்சிலோனா அணி நெய்மரின் இடைவிலகலின் பின்னர் விளையாடிய முதல் லாலிகா சுற்றுப் போட்டியாகும். இப்போட்டியிலே பார்சிலோனா அணி 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடந்த பருவகாலத்தின் லாலிகா சம்பியனான றியல் மட்றிட் கழகத்தின் இப்பருவகாலத்திற்கான முதற்போட்டி கடந்த 21ஆம் திகதி நடைபெற்றது. டிபோர்டிவோ (Deportivo) அணிக்கு எதிராக நடந்த இப்போட்டியில் றியல் மட்றிட் கழகம் 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. றியல் மட்றிட் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ இப்போட்டியில் விளையாடத நிலையிலே றியல் மட்றிட் அணி இவ்வெற்றியை தனதாக்கியது. மேலும் அணித்தலைவர் ஸர்ஜீயோ ராமோஸிற்கு இப்போட்டியில் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

26ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் ஜீரோனா கழகம் மலாகா கழகத்திற்கு எதிராக 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தனது லாலிகா தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது. அத்துடன் பார்சிலோனா அணி அலவெஸ் அணியுடன் கடுமையானதொரு போட்டியின் பின்பு 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இவ்வார இறுதியில் ஆரம்பமாகும் DCL கால்பந்து தொடர்

பெரிதும் பேசப்பட்ட மற்றும் எதிர்பார்க்கப்பட்ட 2017 டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப்..

இதே நிலையில் அட்லடிகொ மட்றிட் அணி 27ஆம் திகதியன்று லஸ் பல்மாஸ் (Las Palmas) அணியை எதிர்கொண்டு 5-1 என்றகள் கோல் வித்தியாசத்தில் பாரியதொரு வெற்றியை பெற்று கொண்டது. இம்மாதத்தின் இறுதிப்போட்டியாக வெலன்சியா மற்றும் றியல் மட்றிட் அணிகள் மோதிய போட்டியை குறிப்பிடலாம்.

இப்போட்டியானது இப்பருவகாலத்தின் மற்றுமொரு விறுவிறுப்பான போட்டியாக அமைந்தது. போட்டியின் முதல் பாதியிலே 1-1 என்ற கோல்கள் அடிப்படையில் போட்டி சமநிலையில் காணப்பட்டது. இரு அணிகளுக்கும் இரண்டாம் பாதியில் பல வாய்ப்புக்கள் கிடைத்த வண்ணமே இருந்தன. அதன் பிரதிபலனாக போட்டியின் 77ஆவது நிமிடத்தில் பின்கள வீரர் கொன்டோக்பியா (Kondogbia) வெலன்சியா கழகத்திற்கு இரண்டாவது கோலை பெற்றுக் கொடுத்தார். இதன் மூலம் வெலன்சியா கழகம் போட்டியில் முன்னிலை வகித்தது. இதனை தொடர்ந்து 83ஆவது நிமிடத்தில் மார்கோ அஸன்ஸியோ கோலிற்கு அருகாமையில் கிடைத்த ப்ரி கிக்கை தனது இடது பாதத்தின் மூலம் உதைந்து கோலாக்கினார். இதன் மூலம் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது.

அத்துடன் ஸர்ஜீயொ ராமோஸ் மற்றும் ரொனால்டோ ஆகியோருக்கு ஏற்கனவே போட்டித் தடை விதிக்கப்பட்டு இருந்ததால் இப்போட்டிக்கு றியல் மட்றிட் அணிக்கு மார்சலோ தலைமை தாங்கினார. இப்போட்டியில் றியல்மட்றிட் கழகத்திற்காக இரு கோல்களை அஸன்ஸியோவும், வெலன்சியா கழகத்திற்காக சோலர் மற்றும் கொன்டோக்பியா ஆகியோர் தலா ஓரு கோலையும் பெற்றுக் கொடுத்தனர். நடந்து முடிந்த மேற்கூறப்பட்ட போட்டிகளின் அடிப்படையில் லாலிகா புள்ளிப் பட்டியல் தற்போது (28) பின்வருமாறு காணப்படுகிறது.

நிலை அணி போட்டிகள் வெற்றி தோல்வி சமநிலை பெ.

கோல்கள்

எ.

பெ.கோல்கள்

புள்ளிகள்
1 றியல் சொசிடட் 2 2 0 0 6 2 6
2 பார்சிலோனா 2 2 0 0 4 0 6
3 லெகனஸ் 2 2 0 0 2 0 6
4 அட்லடிகோ மட்றிட் 2 1 0 1 7 3 4
5 றியல் மட்றிட் 2 1 0 1 5 2 4
6 ஜீரோனா 2 1 0 1 3 2 4
7 லெவன்டெ 2 1 0 1 3 2 4
8 வெலன்சியா 2 1 0 1 3 2 4
9 செவில்லா 2 1 0 1 2 1 4
10 அத்லடிக் பில்பாகு 2 1 0 1 1 0 4
11 ஏய்பர் 2 1 1 0 1 1 3
12 றியல் பெடிஸ் 2 1 1 0 2 3 3
13 ஈஸ்பான்யல் 2 0 1 1 1 2 1
14 கேடாவெய் 2 0 1 1 0 1 1
15 டிபோர்டிவா 2 0 1 1 2 5 1
16 செல்டாவிகோ 2 0 2 0 3 5 0
17 மலாகா 2 0 2 0 0 2 0
18 அலவெஸ் 2 0 2 0 0 3 0
19 விலரல் 2 0 2 0 0 4 0
20 லஸ் பல்மாஸ் 2 0 2 0 1 6 0