இலங்கையில் உள்ள பாடசாலை கிரிக்கெட் வீரர்களை ஊக்கப்படுத்தும் முகமாக வருடாந்தம் வழங்கப்பட்டும் விருது வழங்கல் விழாவில் 2019 ஆம் ஆண்டுக்கான டயலொக் 4G – சண்டே டைம்ஸ் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரருக்கான விருது லக்ஷித ரசன்ஜனவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
டயலொக் 4G – சண்டே டைம்ஸ் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர்களுக்கான விருது வழங்கல் விழா இன்றைய தினம் (16) கொழும்பு, தாமரை தடாக அரங்கில் நடைபெற்றது.
இலங்கை – பங்களாதேஷ் A அணிகளுக்கிடையிலான தொடர் அட்டவணை வெளியீடு
பங்களாதேஷ் A அணி மற்றும் இலங்கை A அணிகளுக்கு……….
இந்த நிகழ்வுக்கான பிரதம அதிதிகளாக இலங்கை கிரிக்கெட் அணியில் அதிகம் கொண்டாடப்படும் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார மற்றும் உலகின் மிகச்சிறந்த இடதுகை சுழல் பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத் ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தனர். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய குமார் சங்கக்கார,
“வெற்றிபெற்ற மற்றும் பங்குபற்றிய அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்த விருதுகள் உங்களின் வாழ்க்கையின் முடிவாகது. இதுவொரு சவால். குறிப்பாக நான் (சங்கக்கார) மற்றும் ரங்கன ஹேரத் இப்போது சிறந்த இடத்தில் இருக்கிறோம். ஆனால், நாம் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர்களாக தெரிவுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்” என்றார்.
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர்களுக்கான விருது வழங்கும் விழாவினை டயலொக் ஆசியாட்டா PLC நிறுவனம் மற்றும் விஜய பத்திரிகை தனியார் நிறுவனம் என்பன இணைந்து நடாத்தி வருகின்றது. இந்த நிலையில், 2019 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்த விருது வழங்கல் விழாவில் சுமார் 56 பிரிவுகளின்படி, 200 வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டிருந்தன.
இதில், அகில இலங்கை ரீதியில் சிறந்த பாடசாலை துடுப்பாட்ட வீரருக்கான விருதை புனித பேதுரு கல்லூரியின் சந்துஷ் குணதிலக்க பெற்றுக்கொண்டார். இவர், இந்த பருவகாலத்தில் 6 சதங்கள், சாதனை இரட்டைச் சதம் உள்ளடங்களாக 1000 ஓட்டங்களை கடந்திருந்தார். அத்துடன், சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான இரண்டாம் இடத்தை, மொறட்டுவ மகா வித்தியாலயத்தின் நிசான் மதுஷங்க பெற்றார். இவரும், 1000 ஓட்டங்களை கடந்ததுடன், தங்களுடைய பாடசாலை அணியின் தலைவராகவும் செயற்பட்டிருந்தார்.
ஆண்டுக்கான சிறந்த பாடசாலை பந்துவீச்சாளருக்கான விருதை இந்த பருவகாலத்தில் 128 விக்கெட்டுகளை வீழ்த்திய கண்டி – திரித்துவக் கல்லூரி வீரர் கவிஷ்க சேனாதீர பெற்றுக்கொண்டார். இரண்டாவது இடத்தை பாடசாலை கிரிக்கெட் மற்றும் தேசிய இளையோர் கிரிக்கெட் என்பவற்றில் சிறப்பித்து வரும் புனித தோமியர் கல்லூரியின் வேகப் பந்துவீச்சாளர் கலன பெரேரா பெற்றுக்கொண்டார்.
Photo Album : Dialog 4G – The Sunday Times Schoolboy Cricketer 2019
அத்துடன், இந்த பருவகாலத்தில் தனது திறமையினால் அனைவராலும் அதிகம் ஈர்க்கப்பட்ட நாலந்த கல்லூரி வீரர் லக்ஷித ரசன்ஜன மானசிங்க, அனைத்து துறையிலும் பிரகாசித்திருந்தார். 1000 இற்கும் அதிகமான ஓட்டங்களை குவித்த இவர், சுழல் பந்துவீச்சால் 75 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். அத்துடன், இந்த ஆண்டுக்கான சிறந்த களத்தடுப்பாளருக்குமான விருதினை வென்ற இவர், 2019 ஆம் ஆண்டுக்கான டயலொக் 4G – சண்டே டைம்ஸ் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரருக்கான விருதை தட்டிச்சென்றார்.
T20i இல் தமது சொந்த உலக சாதனையை முறியடித்த ஆப்கானிஸ்தான்
சர்வதேச T20 அரங்கில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி…..
இதேவேளை, 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடசாலை கிரிக்கெட் அணிக்கான விருதை கல்கிஸ்ஸை புனித தோமியர் கல்லூரி தொடர்ச்சியாக இரண்டாவது முறை தமதாக்கிக்கொண்டது. அதேநேரம், சிறந்த பாடசாலை அணித் தலைவருக்கான விருதை புனித தோமியர் கல்லூரியின் சிதார ஹபுஹின்ன பெற்றுக்கொண்டார்.
மொத்த விருதுகளுக்கான பட்டியல்
மகளிர் பாடசாலை விருதுகள்
- சிறந்த மகளிர் பாடசாலை அணி – ரத்கம தேவபதிராஜ கல்லூரி
- சிறந்த மகளிர் பாடசாலை அணி (2 ஆவது இடம்) – கம்பஹா ரத்னாவலி மகளிர் வித்தியாலயம்
- மிக பிரபலமான வீராங்கனை (வெற்றியாளர்) – சத்யா சந்தீபனி (தேவபதிராஜ கல்லூரி)
- மிக பிரபலமான வீராங்கனை (2 ஆவது இடம்) – கவீஷா டில்ஹாரி (தேவபதிராஜ கல்லூரி)
- மிக நம்பிக்கைக்குறிய வீராங்கனை (வெற்றியாளர்) – ஜனடி அனலி (அனுலா வித்தியாலயம்)
டயலொக் 4G விருதுகள்
- டயலொக் 4G வேகமான 100 ஓட்டங்கள் விருது – சந்துஷ் குணதிலக்க (புனித பேதுரு கல்லூரி)
- டயலொக் 4G வேகமான 100 விக்கெட்டுகள் விருது – கவிஷ்க சேனாதீர (திரித்துவக் கல்லூரி)
- டயலொக் 4G பந்துவீச்சாளர் விருது – நதீர இஷான் (வித்தியாலோக கல்லூரி)
டிவிஷன் 3 பாடசாலைகளுக்கான விருதுகள்
- சிறந்த பந்துவீச்சாளர் (வெற்றியாளர்) – நதீர இஷான் (வித்தியாலோக கல்லூரி, காலி)
- சிறந்த பந்துவீச்சாளர் (2 ஆவது இடம்) – கவிந்து மதுரங்க (நாலந்த மத்திய கல்லூரி – மினுவாங்கொடை)
- சிறந்த துடுப்பாட்ட வீரர் (வெற்றியாளர்) – கலன மதுஷங்க (சீதாவாக்க மத்திய கல்லூரி)
- சிறந்த துடுப்பாட்ட வீரர் (2 ஆவது இடம்) – விராஜ் ஹேமந்த (நுகேவல மத்திய கல்லூரி)
- சிறந்த சகலதுறை வீரர் (வெற்றியாளர்) – சந்தருவன் சிந்தக (கல்ஹிடியாவ மத்திய கல்லூரி)
- சிறந்த சகலதுறை வீரர் (2 ஆவது இடம்) – நிஷால் மாலிங்க (க்ரிஸ் கிங் கல்லூரி – ஜாஎல)
டிவிஷன் 2 பாடசாலைகளுக்கான விருதுகள்
- சிறந்த அணி – மேல் மாகாணம் – க்ரிஸ்ட் கிங் கல்லூரி – ஜாஎல
- சிறந்த அணி – தென் மாகாணம் – வித்தியாலோக கல்லூரி – காலி
- சிறந்த அணி – மத்திய மாகாணம் – ஸ்ரீ ராஹுல கல்லூரி – கட்டுகஸ்தோட்டை
- சிறந்த அணி – வடமேல் மாகாணம் – மலியதேவ மாதிரி கல்லூரி – குருணாகலை
- சிறந்த களத்தடுப்பாளர் – சமோத் சந்தரு (பிலியந்தல மத்திய கல்லூரி)
- சிறந்த களத்தடுப்பாளர் (2 ஆவது இடம்) – இசார மதுவந்த (கராந்தெனிய மத்திய கல்லூரி)
- சிறந்த விக்கெட் காப்பாளர் (வெற்றியாளர்) – ஜனித் கௌஷால் (கரந்தெனிய மத்திய கல்லூரி)
- சிறந்த விக்கெட் காப்பாளர் (2 ஆவது இடம்) – ரவிஷான் பெரேரா (புனித திருச்சிலுவைக் கல்லூரி, களுத்துறை)
- சிறந்த பந்துவீச்சாளர் (வெற்றியாளர்) – நிம்னக ஜயதிலக்க (புனித அந்தோனியார் கல்லூரி, கட்டுகஸ்தோட்டை)
- சிறந்த பந்துவீச்சாளர் (2 ஆவது இடம்) – ரவிந்து மிலான் (கரந்தெனிய மத்திய கல்லூரி)
- சிறந்த துடுப்பாட்ட வீரர் (வெற்றியாளர்) – சொஹான் டி லிவெரா (தேவானந்த கல்லூரி, அம்பலாங்கொடை)
- சிறந்த துடுப்பாட்ட வீரர் (2 ஆவது இடம்) – சமோத் சந்தரு (பிலியந்தல மத்திய கல்லூரி)
- சிறந்த சகலதுறை வீரர் (வெற்றியாளர்) – சமித் இருசு (கரந்தெனிய மத்திய கல்லூரி)
- சிறந்த சகலதுறை வீரர் (2 ஆவது இடம்) – ஹேஷான் மதுசங்க (பிலியந்தல மத்திய கல்லூரி)
- அகில இலங்கை வளர்ந்து வரும் அணி (வெற்றியாளர்) – புனித அந்தோனியார் கல்லூரி, கட்டுகஸ்தோட்டை
- அகில இலங்கை வளர்ந்து வரும் அணி (2 ஆவது இடம்) – பிலியந்தல மத்திய கல்லூரி
- மிக பிரபலமான பாடசாலை கிரிக்கெட் வீரர் (வெற்றியாளர்) – லிதிஜ கல்ஹார (ஆனந்த மைத்திரி கல்லூரி, பலாங்கொடை)
- மிக பிரபலமான பாடசாலை கிரிக்கெட் வீரர் (2 ஆவது இடம்) – விஷால் ருக்ஷான் (புனித பேதுரு கல்லூரி, உடுகம்பொல)
- மிக பிரபலமான பாடசாலை கிரிக்கெட் வீரர் (3 ஆவது இடம்) – தனுஷ சந்தருவன் கொஸ்டா
- ஆண்டுக்கான சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் (வெற்றியாளர்) – சமித் இருசு (கரந்தெனிய மத்திய கல்லூரி)
- ஆண்டுக்கான சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் (2 ஆவது இடம்) – சமோத் சந்தரு (பிலியந்தல மத்திய கல்லூரி)
டிவிஷன் 1 பாடசாலைகளுக்கான விருதுகள்
- சிறந்த களத்தடுப்பாளர் – லக்ஷித ரசன்ஜன மானசிங்க (நாலந்த கல்லூரி, கொழும்பு)
- சிறந்த களத்தடுப்பாளர் (2 ஆவது இடம்) – அமித தாபரே (டீ.எஸ். சேனாநாயக்க கல்லூரி, கொழும்பு)
- சிறந்த விக்கெட் காப்பாளர் (வெற்றியாளர்) – செனொன் பெர்னாண்டோ (புனித பேதுரு கல்லூரி, கொழும்பு)
- சிறந்த விக்கெட் காப்பாளர் (2 ஆவது இடம்) – டில்ஹார பொல்கம்பொல (நாலந்த கல்லூரி, கொழும்பு)
- சிறந்த பந்துவீச்சாளர் (வெற்றியாளர்) – கவிஷ்க சேனாதீர (புனித திரித்துவக் கல்லூரி, கண்டி)
- சிறந்த பந்துவீச்சாளர் (2 ஆவது இடம்) – கலன பெரேரா (புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்ஸை)
- சிறந்த துடுப்பாட்ட வீரர் (வெற்றியாளர்) – சந்துஷ் குணதிலக்க (புனித பேதுரு கல்லூரி, கொழும்பு)
- சிறந்த துடுப்பாட்ட வீரர் (2 ஆவது இடம்) – நிஷான் மதுஷங்க (மொறட்டுவ மகா வித்தியாலயம்)
- சிறந்த சகலதுறை வீரர் (வெற்றியாளர்) – இம்தியாஸ் சல்ஷா (ஸாஹிரா கல்லூரி, கொழும்பு)
- சிறந்த சகலதுறை வீரர் (2 ஆவது இடம்) – லக்ஷித ரசன்ஜன மானசிங்க (நாலந்த கல்லூரி, கொழும்பு)
- அகில இலங்கை சிறந்த பாடசாலை அணி (வெற்றியாளர்) – புனித தோமியர் கல்லூரி – கல்கிஸ்ஸை
- அகில இலங்கை சிறந்த பாடசாலை அணி (2 ஆவது இடம்) – நாலந்த கல்லூரி கொழும்பு
- சிறந்த அணித் தலைவர் – சிதார ஹபுஹின்ன
- மிக பிரபலமான பாடசாலை கிரிக்கெட் வீரர் (வெற்றியாளர்) – நவோத் பரனவிதான (மஹிந்த கல்லூரி, காலி)
- மிக பிரபலமான பாடசாலை கிரிக்கெட் வீரர் (2 ஆவது இடம்) – பசிந்து உஷெட்டி (மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு)
- மிக பிரபலமான பாடசாலை கிரிக்கெட் வீரர் (3 ஆவது இடம்) – முயிஷ் ரபீல்
- ஆண்டுக்கான சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் (வெற்றியாளர்) – லக்ஷித ரசன்ஜன மானசிங்க (நாலந்த கல்லூரி, கொழும்பு)
- ஆண்டுக்கான சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் (2 ஆவது இடம்) – கவிஷ்க சேனாதீர (புனித திரித்துவக் கல்லூரி, கண்டி)
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<