மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டிகள் பாகிஸ்தானில்

3
Lahore to host Women's World Cup

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் எஞ்சிய அணிகளைத் தெரிவு செய்வதற்கான தகுதிகாண் தொடரானது பாகிஸ்தானில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

>>டெல்லி கேபிடல்ஸின் தலைவராக அக்ஸர் படேல் நியமனம்<<

ஏப்ரல் மாதம் 09ஆம் திகதி தொடக்கம் நடைபெறும் இந்த தகுதிகாண் தொடரில் மொத்தம் 15 போட்டிகள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடரிற்காக பாகிஸ்தான் உட்பட பங்களாதேஷ், மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் தாய்லாந்து ஆகிய ஆறு நாடுகள் காணப்படுகின்றன.

அதேவேளை தொடரினை நடாத்தும் மைதானங்களாக லாஹூரில் காணப்படும் கடாபி மைதானம் மற்றும் சிட்டி கிரிக்கெட் மைதானம் ஆகியவை தெரிவு செய்யப்பட்டுள்ளன. ஐ.சி.சி. இன் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் பின்னர், பாகிஸ்தானில் நடைபெறும் ஐ.சி.சி. இன் தொடராகவும் இந்த தகுதிகாண் சுற்றுப் போட்டிகள் காணப்படுகின்றன. தகுதிகாண் சுற்றுத் தொடரின் மூலம் இரண்டு அணிகள் 2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ணத் தொடருக்கு தெரிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ணத் தொடர் இந்தியாவில் ஒக்டோபர் மாதம் தொடக்கம் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதோடு இந்த தொடருக்கு தொடரினை நடாத்தும் இந்தியா உட்பட இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் நேரடி தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<