ஆப்கானுடனான 2ஆவது ஒருநாள் போட்டியை தவறவிடும் லஹிரு குமார

Afghanistan tour of Sri Lanka 2023

262

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இன்று (04) நடைபெறவுள்ள இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் லஹிரு குமார இழந்துள்ளார்.

நேற்று முன்தினம் (02) நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் பந்துவீசும்போது அவருக்கு இடது தொடைப் பகுதியில் ஏற்பட்ட தடைப்பிடிப்பே இதற்குக் காரணம்.

அந்த காயத்தில் இருந்து லஹிரு குமார இன்னும் குணமடையாததால் இன்றைய போட்டிக்கான தேர்வுகளுக்கு லஹிரு குமார பரிசீலிக்கப்பட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இலங்கை அணியின் மருத்துவக் குழு அவரது உடற்தகுதியை கண்காணித்து வருவதாகவும், மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் விளையாடலாமா என்பது குறித்து பின்னர் முடிவு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (04) காலை 10 மணிக்கு ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

முன்னதாக நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியைப் பதிவு செய்த ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<