அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள நான்கு நாட்களைக் கொண்ட மூன்று போட்டிகளுக்கான பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்காக இலங்கை A கிரிக்கெட் குழாமில் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான லஹிரு மிலன்த மற்றும் வேகப்பந்து வீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
மேற்கிந்திய தீவுகளிலிருந்து நாடு திரும்பும் மெதிவ்ஸ், லஹிரு கமகே
மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்…
தற்போது மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியில் இருந்து, முதல் டெஸ்ட்டில் விளையாடிய அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் லஹிரு கமகே ஆகியோர் விலகி நாடு திரும்பினர். எனவே, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் இலங்கை அணியுடன் இணைவதற்கு தசுன் ஷானக்க மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் மேற்கிந்திய தீவுகளுக்கு பயணித்தனர்.
எனவே, இலங்கை A குழாமில் இடம்பெற்றிருந்த தசுன் ஷானக்க மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோருக்குப் பதிலாகவே மிலன்த மற்றும் பெர்னாண்டோ சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சுற்றுப்பயணத்திற்கு இலங்கை அணிக்கு அனுபவ ஆரம்பத் துடுப்பாட்ட விரர் திமுத் கருணாரத்ன தலைமை வகிப்பதோடு, தொடருக்காக இலங்கை A அணி, வரும் ஜுன் 23 ஆம் திகதி சனிக்கிழமை நட்டை விட்டு புறப்படவுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் முடிந்த பின் ஷானக்க மற்றும் குணதிலக்க இலங்கை A குழாமுடன் இணைய வாய்ப்பு உள்ளது. அதுவரை மிலன்த மற்றும் பெர்னாண்டோவை கொண்டு அந்த இடத்தை நிரப்புவதற்கு தேர்வாளர்கள் தீர்மானித்துள்ளனர். இந்த இருவரும் மேலதிக வீரர்களாக குழாத்தில் இணைக்கப்பட்டிருந்தனர்.
பேதுரு கல்லூரியின் முன்னாள் வீரரான மிலன்த, கடந்த சில உள்ளூர் பருவங்களில் ராகம கிரிக்கெட் கழகத்திற்காக அதிக ஓட்டங்களை பெற்றிருப்பதோடு இலங்கை A அணிக்காக ஆட இதுவரை வாய்ப்பு கிடைக்காதவராக இருந்தார். பெர்னாண்டோ அனைத்து வகை கிரிக்கெட்டிலும் 9 சர்வதேச போட்டிகளில் இலங்கை அணிக்காக ஆடியுள்ளார். அவர் கடைசியாக 2017 டிசம்பரிலேயே இலங்கை அணியில் இடம்பிடித்தார்.
ஐ.சி.சி தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ள இலங்கை வீரர்கள்
மேற்கிந்திய தீவுகளுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி..
மூன்று ஆட்டங்களைக் கொண்ட, நான்கு நாள் போட்டிகளின் முதல் போட்டி வரும் ஜுன் 26 ஆம் திகதி கொக்ஸ் பசாரில் ஆரம்பமாகவிருப்பதோடு, இரண்டாவது போட்டி இதே மைதானத்தில் ஜூலை 3 ஆம் திகதி ஆரம்பமாகும்.
மூன்றாவது மற்றும் கடைசி போட்டி சில்ஹட் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஜுலை 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. நான்கு நாட்கள் கொண்ட போட்டித் தொடருக்கு பின்னர் மூன்று A நிலை போட்டிகள் நடைபெறவுள்ளன. அந்த போட்டிகள் முறையே ஜூலை 17, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் சில்ஹட்டில் நடைபெறும்.
மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டிகளில் இலங்கை A அணிக்கு திசர பெரேரா தலைவராக செயற்படவிருப்பதாக நம்பகமான வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க