மட்டு நகரிற்கு பெருமை சேர்த்திருக்கும் லாபிர்

211

கொழும்பு சுகததாஸ மைதானத்தில் கடந்த 11ஆம், 12ஆம் திகதிகளில் நடைபெற்று முடிந்திருக்கும், மாஸ்டர் அத்லடிக் (Matser Athletic Sri Lanka) வருடாந்த தடகள விளையாட்டு விழாவில் ஏறாவூரினைச் சேர்ந்த AM. லாபிர் ஒரு தங்கம், ஒரு வெள்ளி என இரண்டு பதக்கங்களை வென்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கும், தனது பிறந்த ஊரிற்கும் பெருமை சேர்த்திருக்கின்றார்.

டாக்கா சர்வதேச மரதனில் பங்குபற்றும் மலையக வீரர்கள்

அந்தவகையில் AM. லாபிர் அவர்கள், மாஸ்டர் அத்லடிக் தடகள நிகழ்வில் 65 தொடக்கம 70 வயதுப் பிரிவில் ஒழுங்கு செய்யப்பட்ட 200 மீட்டர் ஓட்டப்பந்த நிகழ்வில் தங்கம் வென்றதோடு, அதே வயதுப் பிரிவில் இடம்பெற்றிருந்த 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் AM. லாபிர் அவர்கள் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தினை 15.06 செக்கன்களில் நிறைவு செய்திருந்ததுடன், தங்கம் வென்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தினை 31 செக்கன்களில் நிறைவு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சிறு வயது முதலே ஓட்டப்பந்தயம் உள்ளடங்கலாக பல்வேறு விளையாட்டுக்களில் ஆர்வம் காட்டியிருக்கும் 65 வயது நிரம்பிய AM. லாபிர் அவர்கள் தான் வென்ற இரண்டு பதக்கங்களின் மூலம் சாதிப்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதனையும் அனைவருக்கும் உணர்த்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டுக்கான (2021) மாஸ்டர் அத்லடிக் தடகள விளையாட்டு விழாவானது, நாடு பூராகவும் இருக்கும் 35 வயதிற்கு மேற்பட்ட சிரேஷ்ட வீர்ரகளின் திறமைகளை வெளிக்காட்டும் நோக்கத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு<<