இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் ஆஸி. அணியில் இணையும் மார்னஸ்

463
Image Courtesy - www.cricket.com.au

இந்தியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெறவுள்ள இறுதி டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் சுழற்பந்துவீச்சு சகலதுறை வீரரான மார்னஸ் லாபுஸ்சன்னே இணைக்கப்பட்டுள்ளார்.  

அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் மோதும் 4ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஜனவரி 3ஆம் திகதி சிட்டினியில் ஆரம்பமாகவுள்ளது.  

அபார வெற்றியுடன் டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்றுள்ள இந்தியா

சுற்றுலா இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய ….

இப்போட்டிக்கான 13 பேர் கொண்ட அவுஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், முதல் மூன்று போட்டிகளின் முடிவில் 2-1 என இந்திய அணி டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்றுள்ளதால், தீர்மானமிக்க சிட்னி டெஸ்ட்டில் வென்றால் மட்டுமே அவுஸ்திரேலியாவுக்கு டெஸ்ட் தொடரை சமன் செய்ய முடியும் என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து 4ஆவது டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய அணியில் 24 வயதான சுழபற்பந்துவீச்சு சகலதுறை ஆட்டக்காரான மார்னஸ் லாபுஸ்சன்னே மேலதிக வீரராக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

சிட்னி டெஸ்ட் போட்டியில் மார்னஸ் லாபுஸ்சேன்ஜ் இணைத்துக் கொள்ளப்பட்டமை தொடர்பில் மெல்பேர்னில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவுஸ்திரேலிய அணித் தலைவர் டிம் பெய்ன் கருத்து வெளியிடுகையில்,

”குறித்த ஆடுகளமானது சுழற்பந்துக்கு சாதகமாக அமையும் என்பதால் நாம் அது தொடர்பில் விரிவாக ஆராயவுள்ளோம். முன்னைய போட்டிகளில் விட்ட தவறுகளை திருத்திக் கொண்டு சிறந்த இணைப்பாட்டத்தைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளோம். அத்தோடு அந்த டெஸ்ட் போட்டியையும் வெல்ல கடும் முயற்சியுடன் செயற்படுவோம்” என கூறினார்.

அஞ்செலோ மெதிவ்ஸிற்கு பதிலாக இலங்கை அணியில் சதீர சமரவிக்ரம

உபாதைக்குள்ளாகியிருக்கும் இலங்கை அணியின் …..

ஆனால், சிட்னி மைதானத்தின் ஆடுகளம் சுழற்பந்துக்கு சாதகமானதாகும். எனவே, சிட்னி டெஸ்ட் போட்டியில் மார்னஸ் லாபுஸ்சன்னே இணைக்கப்படலாம் என அணித்தலைவர் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் டுபாயில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர், இதுவரை 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 81 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன், அவரது சராசரி 52.94 ஆக உள்ளது. எனினும், இறுதியாக நடைபெற்ற பாகிஸ்தானுடனான டெஸ்ட் போட்டியில் அவர், ஏழு விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

அதன்பிறகு நடைபெற்ற அவுஸ்திரேலிய உள்ளூர் போட்டிகளில் பங்கேற்ற அவர், இதுவரை ஐந்து ஷெபில்ட் ஷீல்ட் முதல்தரப் போட்டிகளில் விளையாடி முறையே 52, 4, 47, 21 மற்றும் 78 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இதுஇவ்வாறிருக்க, இந்திய தொடருக்கு பீட்டர் ஹேன்ஸ்கோம்ப், மிட்செல் மார்ஷ் ஆகியோர் மத்திய வரிசை வீரர்களாக இடம்பிடித்திருந்ததால், மார்னஸுக்கு அவுஸ்திரேலிய அணியில் இடம்பெறும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய அணி விபரம்

டிம் பெய்ன் (அணித் தலைவர்), ஆரோன் பின்ச், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஹரிஸ், ட்ரவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஸ்சன்னே, நெதன் லியோன், ஷோன் மார்ஷ், பெட் கம்மின்ஸ், பீட்டர் சிட்ல், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வூட்

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<