லா லிகா சுற்றுப் போட்டியின் ஜந்தாவது வர நிறைவில் தாம் ஆடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று 15 புள்ளிகளுடன் பார்சிலோனா அணி புள்ளிப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றது.
அதேவேளை லா லிகா சுற்றுப் போட்டியின் நடப்புச் சம்பியன் ரியல் மெட்ரிட் அணி நடைபெற்று முடிந்த ஜந்தாவது வாரப் போட்டியில் அதிர்ச்சித் தோல்வியுற்றதன் மூலம் புள்ளிப் பட்டியலில் 8வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
ஸர்ஜீயோ அக்வேய்ரோவின் ஹட்ரிக் கோலினால் மென்சஸ்டர் சிடி முன்னிலையில்
பிரீமியர் லீக் சுற்றுப் போட்டிகள் ஆரம்பித்து…
மலாகா மற்றும் வெலன்ஸியா கழகங்களுக்கிடையிலான போட்டியுடன் லா லிகா சுற்றுப் போட்டியின் ஜந்தாவது வாரப் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன. இப்போட்டியில், ஸய்மோனீ ஸாஸா (Simonie Zaza) மூலம் போட்டியின் இரண்டாம் பாதியில் பத்து நிமிடங்களிற்குள் பெறப்பட்ட ஹட்ரிக் கோலின் மூலம் 5-0 என்ற கோல்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் வெலன்ஸியா அணி வெற்றி பெற்றது. அவ்வணிக்காக ஸன்டா மினா (Santa mina) 17 ஆம் நிமிடத்திலும், ஸய்மோனி ஸாஸா 55, 60 மற்றும் 63 ஆம் நிமிடங்களிலும் ரொட்ரீகோ (Rodrigo) 86 ஆம் நிமிடத்திலும் கோல்களை பெற்றுக் கொடுத்தனர்.
20ஆம் திகதி பார்சிலோனா மற்றும் ஏய்பர் அணிகள் பார்சிலோனா அரங்கில் பலப்பரீட்சை நடாத்தின. இப்போட்டியில் லியொனெல் மெஸ்ஸியினால் பெறப்பட்ட ஹட்ரிக் கோலின்மூலம் பார்சிலோனா அணி 6-1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்றது.
மெஸ்ஸி இப்போட்டியில் 20 ஆம் நிமிடத்தில் பெறப்பட்ட பெனால்டி வாய்ப்பின்போதும் அதனைத் தொடர்ந்து 59, 62 மற்றும் 87 ஆவது நிமிடங்களில் கோல்களைப் பெற்று இப்போட்டியில் பார்சிலோனா அணி வெற்றி பெற வழிவகுத்தார்.
மேலும் போலீனோ (Paulinho) 38 ஆம் நிமிடத்திலும் டெனிஸ் சுவாரேஸ் (Denis Suarez) 53ஆம் நிமிடத்திலும் ஏய்பர் அணிக்கு எதிராக கோல்களைப் பெற்றனர். அத்துடன் ஏய்பர் அணி சார்பாக போட்டியின் 57ஆம் நிமிடத்தில் ஸர்ஜீ என்ரீச் (Sergi Enrich) ஓரு கோலைப் பெற்றார்.
இதுவரை நடைபெற்றுள்ள அனைத்துப் போட்டிகளிலும் மெஸ்ஸியினால் மொத்தமாக 9 கோல்கள் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பின்னர், 21 ஆம் திகதி நடைபெற்ற மிகவும் விறுவிறுப்பான போட்டியாக ரியல் மெட்ரிட் மற்றும் ரியல் பெடிஸ் அணிகள் மோதின. கடந்த பருவகால லா லிகா சம்பியனான ரியல் மெட்ரிட் அணி றியல்பெடிஸ் அணியிடம் போட்டியின் இறுதித் தருவாயில் பெறப்பட்ட கோலினால் அதிர்ச்சித் தோல்வியுற்றது.
ஸர்ஜீயோ அக்வேய்ரோவின் ஹட்ரிக் கோலினால் மென்சஸ்டர் சிடி முன்னிலையில்
பிரீமியர் லீக் சுற்றுப் போட்டிகள் ஆரம்பித்து…
இந்த வெற்றியின்மூலம் ரியல் மெட்ரிட் அணியின் மைதானத்தில் மோதிய தொடரான 75 போட்டிகளின் பின்னரான, தனது முதல் வெற்றியை றியல் பெடிஸ் அணி பதிவு செய்துள்ளது.
போட்டியின் ஆரம்பம் முதல் இறுதிவரை கூடுதலான நேரம் ரியல் மெட்ரிட் அணியே போட்டியை ஆக்கிரமித்தது. அவ்வணிக்கு கிடைத்த பல வாய்ப்புக்கள் றியல் பெடிஸ் அணியின் கோல் காப்பாளர் அன்டோனியோ அடன் (Antonio Adan) மூலம் சிறந்த முறையில் தடுக்கப்பட்டது. ரியல் மெட்ரிட் அணியின் முன்னாள் கோல் காப்பாளரான அன்டோனியோ அடன் மூலம் அன்றைய போட்டியில் மாத்திரம் கோலை நோக்கி எடுக்கப்பட்ட 7 முயற்சிகள் தடுக்கப்பட்டன.
அத்துடன் பல வாய்ப்பபுக்களை தவறவிட்ட வண்ணம் இருந்த ரியல் மெட்ரிட் அணிக்கு எதிராக றியல் பெடிஸ் அணியின் வீரர்கள் அனைவரும் பந்தை தடுத்தாடும் முறையிலேயே விளையாடினர். எனினும் போட்டியின் 92ஆம் நிமிடத்தில் அன்டோனியோ பரகன் (Antonio Baragan) மூலம் மத்தியகளத்திலிருந்து ரியல் மெட்ரிட் அணியின் பெனால்டி எல்லைக்குள் உள்ளனுப்பப்பட்ட பந்தை அன்டோனியோ ஸனப்ரியா (Antonia Sanabria) தனது தலையால் முட்டி கோலாக்கினார்.
இது றியல் பெடிஸ் அணி ரியல் மெட்ரிட் அணிக்கு எதிராகப் பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாக பதிவாகியுள்ளது.
ஏற்கனவே விதிக்கப்பட்ட 5 போட்டித்தடை நிறைவுற்றதன் பின்னர் ரியல் மெட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ இப்போட்டியில் விளையாடியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சில போட்டிகளின் முடிவுகள்
லெகனஸ் 0 – 0 ஜீரோனா
டிபோர்டிவோ 1 – 0 அலவஸ்
அட்லடிகோ மெட்ரிட் 2-1 அத்லடிக் பில்பாகு
செவில்லா 1- 0 லஸ்பல்மஸ்
ஈஸ்பான்யல் 0 – 0 விலரல்
றியல் சொசிடட் 0 – 3 லெவன்டே
ஸெல்டாவிகோ 1 – 1 கெடாவேய்