26 வயது நிரம்பிய இலங்கை அணியின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் குசல் பெரேரா ஊக்க மருந்துப் பாவனை குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டு இறுதியில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பாவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அவர் தோல்வி அடைந்ததாக கூறப்பட்டு இருந்தமையால் அவருக்கு கிரிக்கட் போட்டிகளில் விளையாட சர்வதேச கிரிக்கட் சபை தடை விதித்திருந்தது.
ஆனாலும் குசல் பெரேரா இதற்கு எதிராக சட்ட ரீதியான முன்னெடுப்பை மேற்கொண்டிருந்தார்.
இதன் படி அவருக்கு ஊக்க மருந்து சோதனையை நடாத்திய கட்டார் நாட்டைத் தளமாகக் கொண்ட நிறுவனம் தாம் முன்வைத்த அறிக்கை பிழையானது என்று அறிவித்துள்ளது .
இதற்கிணங்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடை தற்போது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்