தோற்பட்டையில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் தம்மிக பிரசாத் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறி தாயகம் திரும்பவுள்ளார்.
இந்நிலையில் இவருக்குப் பதிலாக சமீபத்தில் ஊக்கமருந்து குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட குசல் ஜனித் பெரேராவை இலங்கை டெஸ்ட் குழாமில் இணைப்பது தொடர்பில் இலங்கை கிரிக்கட் தெரிவுக் குழு கலந்துரையாடிவந்தது.
2ஆவது டெஸ்டில் ஸ்டோக்ஸ் விளையாடுவது சந்தேகம்
அவர்களது கலந்துரையாடல் முடிவின்படி இந்த வருடம் 26 வயதை எட்டும் இலங்கை அணியின் இடதுகைத் துடுப்பாட்ட வீரர் குசல் பெரேரா மிக விரைவில் இங்கிலாந்தில் இருக்கும் இலங்கை அணியில் இணையவுள்ளார்.
சுமார் 4 மாதங்களுக்கு கிரிக்கட்டில் ஈடுபடாத குசல் கடந்த வாரம் மீண்டும் பயிற்சிகளில் இணைந்தார். அவர் கடந்த நவம்பர் மாதம் டெஸ்ட் போட்டிகளில் விளையாட நியுசிலாந்து சென்றிருந்த போது தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பாவித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு அவர் இலங்கை அணியில் இருந்து விலகி மீண்டும் தாயகம் திரும்பினார்.
உபதலைவர் தினேஷ் சந்திமால் ஒரு துடுப்பாட்ட வீரராகவும் அணியின் விக்கட் காப்பாளராகவும் செயற்பட்டு வருகிறார். அதனால் துடுப்பாட்டத்தில் அவரது முழுப் பங்களிப்பைப் பெற இலங்கை அணிக்கு சிறந்த துடுப்பாட்ட வீரர் மற்றும் விக்கட் காப்பாளரை இணைக்க வேண்டிய தேவை இருந்த நிலையில் அதற்குத் தீர்வாக குசல் பெரேரா அணியில் இணையவுள்ளார். இதனால் இவர் அணியின் விக்கட் காப்பாளர் பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 27ஆம் திகதி ஆரம்பமாகும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் இவர் விளையாடுவது மிக முக்கிய விடயமாகக் காணப்படுகிறது. ஆனால் ஜூன் மாதம் 9ஆம் திகதி லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறும் போட்டியில் இவர் விளையாடுவர் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
தனது 25ஆவது வயதில் கடந்த வருடம் இந்தியாவுக்கு எதிராக குசல் பெரேரா இலங்கை டெஸ்ட் அணியில் அறிமுகமானார். அவர் விளையாடிய முதல் போட்டியின் இரு இனிங்ஸிலும் அரைச்சதம் அடித்தார். முதல் இனிங்ஸில் 55 ஓட்டங்களையும் இரண்டாவது இனிங்ஸில் 70 ஓட்டங்களையும் அவர் பெற்றார்.
இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள குசல் பெரேரா 33.80 என்ற துடுப்பாட்ட சராசரியில் 169 ஓட்டங்களைப் பெறுள்ளார். அதில் அவரது அதிகபட்ச ஓட்டங்கள் 70 ஓட்டங்களாகும் என்பது ஒரு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்