இலங்கை அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ், கொவிட்-19 தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணத்துக்கான இலங்கை குழாத்தில் இணைக்கப்பட்டிருந்த குசல் மெண்டிஸ், அவுஸ்திரேலியாவில் வைத்து கொவிட்-1 தொற்றுக்கு முகங்கொடுத்திருந்தார். இதனைத்தொடர்ந்து இவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைகளை பெற்றுவந்தார்.
>>IPL மெகா ஏலத்தில் கோடிகளை அள்ளிய வீரர்கள்
இவ்வாறான நிலையில், இன்றைய தினம் (14) கொவிட்-19 தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ள குசல் மெண்டிஸ், அணியுடன் இணைந்துக்கொண்டார் என்ற அறிவிப்பை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இன்றைய தினம் குழாத்துடன் இணைந்துக்கொண்ட குசல் மெண்டிஸ், நாளைய தினம் (15) கெனபராவில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது T20I போட்டிக்கான வீரர்கள் தெரிவுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார் என் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட T20I தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தது. இதில், நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் சுப்பர் ஓவர்வரை சென்று இலங்கை அணி தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<