இலங்கை அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் தசைப்பிடிப்பு உபாதைக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
உலகக்கிண்ணத்தின் தங்களுடைய இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு இலங்கை அணி ஹைதரபாத்தில் விளையாடி வருகின்றது.
ஒரு மாற்றத்துடன் களமிறங்கும் இலங்கை கிரிக்கெட் அணி
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களை குவித்துக்கொண்டது. இதில் குசல் மெண்டிஸ் 79 பந்துகளில் 122 ஓட்டங்களை விளாசியிருந்தார்.
குசல் மெண்டிஸ் துடுப்பெடுத்தாடிய பின்னர் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு களமிறங்கவில்லை. அவருக்கு தசைப்பிடிப்பு உபாதை ஒன்று ஏற்பட்டுள்ளதால் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார் என இலங்கை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன்காரணமாக இந்தப் போட்டியில் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு அவர் மீண்ம் களமிறங்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், துஷான் ஹேமந்த களத்தடுப்பில் ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குசல் மெண்டிஸின் உபாதை தொடர்பான மேலதிக அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<