இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நிறைவுக்கு வந்துள்ள நிலையில், ஐ.சி.சி இனால் அணிகள் மற்றும் வீரர்களுக்கான புதிய தரவரிசைப் பட்டியலும் இன்று (05) வெளியிடப்பட்டது.
[rev_slider LOLC]
இதில் இலங்கை அணிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்து சதங்களைக் குவித்து குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா மற்றும் ரொஷேன் சில்வா ஆகியோர் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
துடுப்பாட்ட வீரர்களுக்கு மிகப் பெரிய சாதகத்தை ஏற்படுத்திக் கொடுத்த இப்போட்டியில் 5 சதங்கள், 6 அரைச்சதங்கள் விளாசப்பட்டதுடன், பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்சிற்காக 513 ஓட்டங்களையும், இலங்கை அணி முதல் இன்னிங்சிற்காக 713 ஓட்டங்களையும் பெற்று ஒட்டு மொத்தமாக 24 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டதோடு 1533 ஓட்டங்கள் குவிக்கப்பட்டன.
டாக்கா டெஸ்ட்டில் சிறந்த ஆடுகளத்தை எதிர்பார்க்கும் கருணாரத்ன
இதன்படி, ஐ,சி.சி இன் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் முதல் 4 இடங்களில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்திலும், இந்தியாவின் விராட் கோஹ்லி 2 ஆவது இடத்திலும், இங்கிலாந்தின் ஜோ ரூட் 3 ஆவது இடத்திலும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 4 ஆவது இடத்திலும் நீடிக்கின்றனர். இந்நிலையில், முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்ற ஒரேயொரு இலங்கை வீரராக தினேஷ் சந்திமால் உள்ளார். துடுப்பாட்ட வீரர்களுக்கான புள்ளிப்பட்டியலில் 746 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ள அவர், தொடர்ந்து 9 ஆவது இடத்தில் நீடிக்கின்றார்.
அத்துடன், இப்போட்டியில் 196 ஓட்டங்களை விளாசி தனது கன்னி இரட்சை சதத்தை 4 ஓட்டங்களால் தவறவிட்ட இளம் வீரர் குசல் மெண்டிஸ் 12 இடங்கள் ஏற்றம் கண்டு துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் 23 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். அதேநேரம் குசல் மெண்டிசுடன் இணைந்து துடுப்பாட்டத்தில் அசத்தி தனது 4 ஆவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்த தனஞ்சய டி சில்வா, 8 இடங்கள் முன்னேற்றம் கண்டு துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் 38 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
மறுமுனையில் குறித்த போட்டியில் ஓட்டம் எதனையும் குவிக்காமல் ஆட்டமிழந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்ன, 3 இடங்கள் பின்னடைவை சந்தித்து 28 ஆவது இடத்தையும், நிரோஷன் திக்வெல்ல ஒரு இடம் முன்னேறி 41 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
அதேநேரம் தனது கன்னி டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி ரொஷேன் சில்வா, துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் முதற்தடவையாக 28 இடங்கள் முன்னேற்றம் கண்டும் 78ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பங்களாதேஷ் அணியில் இணைந்த அதிரடி வீரர்
இநநிலையில், இப்போட்டியின் நாயகனாக, இரண்டு இனிங்சுகளிலும் சதம் பெற்ற முதலாவது பங்களாதேஷ் வீரராக தனது பெயரைப் பதித்துக் கொண்ட மொமினுல் ஹக், 15 இடங்கள் முன்னேற்றம் கண்டு 27 ஆவது இடத்தையும், தமீம் இக்பால் (21), முஸ்பிகுர் ரஹீம் (25), மஹ்முதுல்லா ரியாத் (48) ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
எனினும், பந்துவீச்சாளர்களுக்கு எந்தவொரு சாதகத்தையும் ஏற்படுத்திக் கொடுக்காத இப்போட்டியில் பந்துவீச்சாளர்கள் எவரும் பெரிதாக முன்னேற்றம் காணவில்லை.
சிட்டகொங் டெஸ்ட்டில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாத இலங்கை அணியின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் ஒரு இடம் பின்னோக்கி 8 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார். அதேநேரம், தில்ருவன் பெரேரா 3 இடங்கள் பின் சென்று 27 ஆவது இடத்தையும், லக்ஷான் சந்தகன் 3 இடங்கள் முன்னேற்றம் கண்டு 57 ஆவது இடத்தையும், சுரங்க லக்மால் 33 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
எனினும், டெஸ்ட் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில், ரங்கன ஹேரத் 8 ஆவது இடத்தையும், தில்ருவன் பெரேரா 10 ஆவது இடத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.