கார் விபத்து குற்றச்சாட்டில் குசல் மெண்டிஸ் கைது

483
Kusal Mendis

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான குசல் மெண்டிஸ், கார் விபத்து ஒன்றினை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கைப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஐ.பி.எல் தொடரை இலங்கையில் அல்லது துபாயில் நடத்த திட்டம்?

இந்த வருடம் நடைபெற எதிர்பார்க்கப்படும் 13ஆவது ஐ.பி.எல் தொடர் இந்தியாவில்

மெண்டிஸ் ஏற்படுத்தியதாக கூறப்படும் கார் விபத்து இன்று (05) அதிகாலை பாணதுறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதோடு, குறித்த விபத்தின் காரணமாக துவிச்சக்கர வண்டியில் பயணித்த 64 வயது முதியவர் ஒருவரும் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேநேரம், குறித்த விபத்தினை ஏற்படுத்த காரணமாக இருந்த குசல் மெண்டிஸின் SUV ரக வாகனமும் பொலிஸார் மூலம் கைப்பற்றப்பட்டுள்ளது.  

இந்த விபத்து தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் பொலிஸ் பேச்சாளர் SSP ஜாலிய சேனாரத்ன, விபத்தினை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள குசல் மெண்டிஸ் வைத்திய பரிசோதனைகளுக்காக தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் அடுத்த 48 மணி நேரங்களில் நீதாவன் ஒருவரிடம் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம், இந்த விபத்து தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளில் குசல் மெண்டிஸ் மது அருந்திவிட்டு வாகனம் செலுத்தவில்லை எனக் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. எனினும், இது தொடர்பான மேலதிக விபரங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 

முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து குழாம் அறிவிப்பு

மேற்கிந்திய தீவுகள் அணியுடன் சொந்த மண்ணில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரின்

இலங்கை அணியின் நிரந்தர வீரர்களில் ஒருவராக இருக்கும் குசல் மெண்டிஸ் இதுவரை 44 டெஸ்ட் போட்டிகளிலும், 76 ஒருநாள் போட்டிகளிலும், 26 T20 சர்வதேச போட்டிகளிலும் விளையாடியிருப்பதோடு, இலங்கை கிரிக்கெட் அணி தமது வீரர்களுக்கு என கடந்த வாரம் நடாத்தி நிறைவு செய்திருந்த பயிற்சி முகாமிலும் பங்கெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க