இன்றைய போட்டியில் இரு மைல்கல்களை கடந்த மெண்டிஸ் மற்றும் தரங்க

3123
Kusal & Taranga

காலியில் நடைபெறும் ஜிம்பாப்வே அணியுடனான முதலாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட நட்சத்திரங்களில் ஒருவரான குசல் மெண்டிஸ் ஒரு நாள் போட்டிகளில் 1000 ஆவது ஓட்டத்தினைக் கடந்துள்ளார்.

17 வருடங்களின் பின்னர் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இந்த ஒரு நாள் போட்டியில், குசல் மெண்டிஸ் இலங்கை அணியின் முதல் விக்கெட்டினைத் தொடர்ந்து களமிறங்கியிருந்தார். மைதானத்தில் நுழைந்த நேரத்தில் 1000 ஓட்டங்களினை பூர்த்தி செய்ய அவருக்கு மேலதிகமாக 28 ஓட்டங்கள் தேவைப்பட்டிருந்தது.

எனக்கும் மாலிங்கவிற்கும் தனிப்பட்ட குரோதங்கள் எதுவும் இல்லை : அமைச்சர் தயாசிறி

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, இலங்கை வீரர்களின் உடற்தகுதி குறித்து…

தொடர்ந்து போட்டியின் 17 ஆவது ஓவரின்போது, சோலமன் மைர் வீசிய ஆறாவது பந்தில் பௌண்டரி ஒன்றினை விளாசி மெண்டிஸ் தனது 1000 ஆவது ஒரு நாள் ஓட்டத்தினைப் பெற்றுக்கொண்டார்.

மெண்டிஸிற்கு, 1000 ஓட்டங்களினை பூர்த்தி செய்ய 28 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் இலங்கை அணி சார்பாக, ஒரு நாள் போட்டிகளில் விரைவாக 1000 ஓட்டங்களைக் கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையினையும் மெண்டிஸ் உபுல் தரங்கவுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

முன்னதாக, 1979ஆம் ஆண்டில் இலங்கை அணியின் முன்னாள் வலது கை துடுப்பாட்ட வீரர், றோய் டயஸ் இனாலேயே அதி விரைவாக (27 இன்னிங்ஸ்கள்) ஒரு நாள் போட்டிகளில் 1000 ஓட்டங்கள் கடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் சிறந்த முறையில் துடுப்பாடிய குசல் மெண்டிஸ், ஒரு சிக்சர் மற்றும் 8 பெளண்டரிகள் உள்ளடங்களாக 80 பந்துகளில் 86 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

அதோடு, இலங்கை அணியின் மற்றொரு துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான உபுல் தரங்கவும் இந்த போட்டி மூலம், ஒரு நாள் போட்டிகளில் தனது 6000 ஓட்டங்களினை கடந்திருக்கின்றார். இன்றைய போட்டியில் 14 ஓட்டங்களை எடுத்த வேளையில் அவர் இந்த மைல்கல்லைப் கடந்தார்.

32 வயதாகும் உபுல் தரங்க இதற்காக 192 இன்னிங்ஸ்களை எடுத்துக்கொண்டதோடு, இலங்கை அணி சார்பாக ஒரு நாள் போட்டிகளில் 6000 ஓட்டங்களைத் தாண்டிய 8ஆவது வீரராக தன்னை பதிவு செய்து கொள்கின்றார்.