மேற்கிந்திய தீவுகளுடனான மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா லோங் ஓன் (Long on) திசையில் இருந்து ஷனோன் காப்ரியல் அடித்த பந்தை பிடியெடுக்க முயன்றபோது விளம்பரப் பலகையில் மோதியதால், முதலுதவி படுக்கையில் வைத்து மைதானத்தில் இருந்த அழைத்துச் செல்லப்பட்டார்.
போராட்டத்துடன் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடும் இலங்கை அணி
சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள்..
அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெரேரா ஸ்கேன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதோடு, அவரது காயத்தின் அளவை அறிந்துகொள்ள தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார். எனினும், அவர் ஆபத்தான நிலையில் இல்லை என்றும் தேவை ஏற்படின் துடுப்பெடுத்தாட முடியும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பார்படோசில் நடைபெற்றுவரும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் திங்களன்று (ஜுன் 25) இரவு உணவு இடைவேளைக்கு முன்னர் மேற்கிந்திய தீவுகள் அணி 88 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது டில்ருவன் பெரேராவின் பந்தை காப்ரியல் பௌண்டரிக்கு வெளியில் அடிக்க முயன்றார். இதன்போது, அது சரியாக மட்டையில் படவில்லை. பந்து வானில் நீண்ட நேரம் இருந்த நிலையில் பிடியெடுப்புச் செய்ய பெரேரா அதனை நோக்கிச் சென்றபோது அவர் பௌண்டரி எல்லையையும் தாண்டிச் சென்றார். அப்போது கீழே விழுந்த அவர் குறிப்பிடத்தக்க நேரம் உணர்விழந்து இருந்தார்.
அங்கு விரைவாக வந்த மருத்துவ உதவியாளர்கள், விளம்பரப் பலகைக்கு அருகில் நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு தலைகுப்புற இருந்த பெரேராவை முதலுதவி படுக்கையில் வைத்து வெளியே எடுத்துச் சென்றனர். பின்னர் அவர் அம்புலன்ஸ் வண்டி மூலம் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த நிலைமை காரணமாக நடுவர் முன்கூட்டியே இரவு உணவு இடைவேளையை வழங்கினார்.
டெஸ்ட் அரங்கில் 10,000 ஓட்டங்களைக் கடப்பதே கனவு என்கிறார் குசல் மெண்டிஸ்
மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரிற்கு முன்…
எவ்விரிருப்பினும், இலங்கை அணி தற்பொழுது வெற்றி இலக்காக நிர்ணயம் செய்த 144 ஓட்டங்களை நோக்கி தமது இறுதி இன்னிங்ஸை ஆடி வருகின்றது. இலங்கை வீரர்கள் தமது முதல் 5 விக்கெட்டுக்களையும் இழந்து 81 ஓட்டங்களைப் பெற்றுள்ளனர். இப்போட்டியில் வெற்றி பெற கைவசம் 5 விக்கெட்டுக்கள் மீதமிருக்க, மேலும் 63 ஓட்டங்கள் இலங்கைக்கு தேவையாக உள்ளது.
எனவே, இந்தப் போட்டியில் துடுப்பாட வேண்டிய நிலைமை ஏற்பட்டால், உபாதைக்குள்ளான குசல் பெரேரா மைதானத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<