இலங்கை கிரிக்கெட் சபை அனுசரணையில் இன்று (15) முதல் நாளாக ஆரம்பித்த மாவட்ட அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டித் தொடரில், குசல் ஜனித் பெரேரா ஆட்டமிழக்காமல் அதிரடியாக பெற்றுக்கொண்ட 161 ஓட்டங்களின் மூலம் கேகாலை மாவட்ட அணி இலகுவாக வெற்றியீட்டிக் கொண்டது. அதே நேரம் 24 மாவட்ட அணிகளை கொண்ட இப்போட்டித் தொடர் எட்டு மைதானங்களில் இன்று முதல் நாளாக ஆரம்பித்தன.

கொழும்பு மாவட்டம் எதிர் களுத்துறை மாவட்டம்

கொழும்பு CCC மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டியில், கொழும்பு மாவட்டம் 7 விக்கெட்டுகளால் களுத்துறை மாவட்ட அணியை இலகுவாக வெற்றியீட்டியது.

முதலில் துடுப்பாடிய களுத்துறை மாவட்ட அணியினை தனது அதிரடி பந்து வீச்சின் மூலம் 83 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்திய லஹிரு கமகே 13 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனையடுத்து, இலகுவான வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய கொழும்பு மாவட்ட அணியை அதிரடி வீரர் தில்ஷான் முனவீர 30 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களை விளாசி வெற்றியை உறுதிப்படுத்தினார்.  

போட்டியின் சுருக்கம்

களுத்துறை மாவட்டம் – 83 (22.1) – லசித் பெர்னாண்டோ 22, நிமேஷ் விமுக்தி 25, லஹிரு கமகே 5/13, சசித் பத்திரண 2/40, மனேல்கர் டி சில்வா 2/8

கொழும்பு மாவட்டம் – 84/3 (8.4) – தில்ஷான் முனவீர 53* (30 பந்துகளில், 10 பவுண்டரி, 1 சிக்சர்), அஷான் ப்ரியஞ்சன் 27, நிமேஷ் விமுக்தி 1/11


பதுளை மாவட்டம் எதிர் இரத்தினபுரி மாவட்டம்  

DSC_0839பனாகொட, இராணுவ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் சகலதுறை ஆட்டக்காரர் சஞ்சிக ரித்மவின் அதிரடி துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சின் மூலம் பதுளை மாவட்டம், இரத்தினபுரி மாவட்ட அணியை 109 ஓட்டங்களால் இலகுவாக வெற்றியீட்டியது.

அதேநேரம் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்த லக்க்ஷித்த மதுஷான், துஷான் விமுக்தி மற்றும் ஜனித் டி சில்வா அரை சதங்களை விளாசினர். அதிரடியாக பந்து வீசிய சஞ்சிக ரித்ம வெறும் 11 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி பதுளை மாவட்டதின் வெற்றியை உறுதி செய்தார்.

போட்டியின் சுருக்கம்

பதுளை மாவட்டம் –  274/8 (50) – லக்க்ஷித்த மதுஷான் 61, சஞ்சிக ரித்ம 42, துஷான் விமுக்தி  70*, ஜனித் டி சில்வா 58, சிரான் பெர்னாண்டோ 2/60, யஷான் சமரசிங்க 2/38, சானக ருவன்சிரி 2/44

இரத்தினபுரி மாவட்டம் – 165 (37.5) – சஞ்சுல அபேவிக்ரம 50*, மதுரங்க சொய்சா 37, சஞ்சிக ரித்ம 5/11


புத்தளம் மாவட்டம் எதிர் கேகாலை மாவட்டம்

கட்டுநாயக்க, சுதந்திர வர்த்தக வலய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டியில், ஷெஹான் ஜயசூரிய மற்றும் இசுறு உதானவின் அரை சதங்களின் உதவியியுடன் புத்தளம் மாவட்ட அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 263 ஓட்டங்களை பதிவு செய்தது.

கடின இலக்கை நோக்கி களமிறங்கிய கேகாலை மாவட்டம், அதிரடி ஆரம்ப வீரர், குசல் ஜனித் பெரேரா ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 161 ஓட்டங்களின் உதவியுடன் எட்டு விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

போட்டியின் சுருக்கம்

புத்தளம் மாவட்டம் – 263/10 (49.2) – ஷெஹான் ஜயசூரிய 64, மஹேல உடவத்த 43, இசுறு உதான 56, ருக்க்ஷான் பெர்னாண்டோ 37, இஷான் ஜயரத்ன 4/49, நிசல தாரக 2/44

கேகாலை மாவட்டம் – 266/2 (38) – சதீர சமரவிக்கிரம 52, குசல் ஜனித் பெரேரா 161*, அவிஷ்க பெர்னாண்டோ 26, சசித்திர சேரசிங்க 1/57, இசுரு உதான 1/28


கண்டி மாவட்டம் எதிர் நுவரெலிய மாவட்டம்

DSC_2887கொழும்பு SSC விளையாட்டு கழகத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இலங்கை அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டிருந்த சசித்திர சேனாநாயக்கவின், சகலதுறை அதிரடி ஆட்டத்தினால் கண்டி மாவட்ட அணி, 69 ஓட்டங்களால் நுவரெலிய மாவட்ட அணியை வெற்றியீட்டியது.

திறமைகளை மீண்டும் வெளிப்படுத்திய சசித்திர சேனாநாயக்க அதிரடியாக 62 ஓட்டங்களை குவித்த அதே நேரம் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்.

போட்டியின் சுருக்கம்

கண்டி மாவட்டம் –  266/8 (50) – மினொத் பாணுக்க 58, கவிந்து குலசேகர 23, சசித்திர சேனாநாயக்க 62, ஜெப்ரி வண்டர்சே 19*, கசுன் மதுஷங்க 28*, கோசல குலசேகர 2/70, பிரமோத் மதுவந்த 3/41

நுவரெலிய மாவட்டம் – 197/9 (50) – ப்ரிமோஷ் பெரேரா 69, கோசல குலசேகர 77, சுரேஷ் நிரோஷன் 20, சந்துன் டயஸ் 22, சசித்திர சேனாநாயக்க  3/24, ஜெப்ரி வண்டர்சே 3/41


யாழ்ப்பாண மாவட்டம் எதிர் கிளிநொச்சி மாவட்டம்

சோனகர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி  மாவட்ட அணி டக்வத் லூயிஸ் முறைப்படி யாழ் மாவட்ட அணியை 2 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

சீரற்ற காலநிலை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்ட நிலையில், அதிரடியாக துடுப்பாடிய மிலிந்த சிரிவர்தன 38 பந்துகளை எதிர்கொண்டு 5 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் உட்பட 80 ஓட்டங்களை விளாசி கிளிநொச்சி  மாவட்ட அணியின் வெற்றியை உறுதிச் செய்தார்.

போட்டியின் சுருக்கம்

யாழ்ப்பாண மாவட்டம் – 266/8 (38) – தினுக் விக்கிரமநாயக்க 66, கித்ருவான் விதானகே 55, சம்மிக்க கருணாரத்ன 44, தரங்க பரணவிதாரண 35, உமேஷ் கருணாரத்ன 2/52, இரோஷ் சமரசூரிய 2/51, சுராஜ் ரந்திவ் 2/54

கிளிநொச்சி மாவட்டம் –  176/4 (27) – மிலிந்த சிரிவர்தன 80*, ஹர்ஷா குரே 31, உமேஷ் கருணாரத்ன 27, இரோஷ் சமரசூரிய 25, ஜீவன் மென்டிஸ் 2/16


மன்னார் மாவட்டம் எதிர் அனுராதபுரம மாவட்டம்

கோல்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் மன்னார் மாவட்ட அணியின் ரோஷேன் சில்வாவின் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட அதிரடி சதத்தின் மூலம் அனுராதபுர அணியை 70 ஓட்டங்களால் இலகுவாக வெற்றியீட்டியது.

அத்துடன், இப்போட்டியில் சத்தினை பெற்றுக்கொள்ள சில்வா வெறும் 3 பவுண்டரிகளை மாத்திரமே பெற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேநேரம் மறுமுனையில் துடுப்பாடிய சத்துர பீரிஸ் மற்றும் உதார ஜயசுந்தர ஆகியோர் முறையே 71, 51 ஓட்டங்களை பெற்று பங்களிப்பு செய்தனர்.

போட்டியின் சுருக்கம்

மன்னார் மாவட்டம் –  278/9 (50) – உதார ஜயசுந்தர 51, ரோஷேன் சில்வா 102*, சத்துர பீரிஸ் 71, கொஷான் ஜயவிக்ரம 24, இம்ரான் கான் 2/59, அதீஷ நாணயக்கார 4/59, மலித் மஹேல 2/49.

அனுராதபுரம் மாவட்டம் – 208 (44) – ஷஸ்ரிக்க புஸ்சேகொல்ல 20, சச்சின் ஜயவர்தன 50*, வினோத் பெரேரா 45, நிலங்க பிரேமரத்ன 2/31, அமில அபோன்சோ 3/28


காலி மாவட்டம் எதிர் மாத்தறை மாவட்டம்

கொழும்பு, NCC மைதனத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான போட்டியில், மாத்தறை மாவட்ட அணி 1 ஓட்டத்தினால் வெற்றி வாகை சூடியது. சிறப்பாக பந்து வீசிய அனுக் பெர்னாண்டோ 50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அதே நேரம் லஹிரு உதார மற்றும் அஞ்சேலோ பெரேரா அரை சதங்களை பெற்று வெற்றியை உறுதிப்படுத்தினர்.

போட்டியின் சுருக்கம்

காலி மாவட்டம் –  229/9 (50) – யசோத லங்கா 36, டிலான் குரே 43, ஷாலிக்க கருணாநாயக்க 59, லசித் எம்புல்தேனிய 2/43, அனுக் பெர்னாண்டோ 4/50.

மாத்தறை மாவட்டம் –  233/9 (45.3) – லஹிரு உதார 59, அஞ்சேலோ பெரேரா 62, பர்வீஸ் மஹ்ரூப் 37, ரொஷான் ஜயதிஸ்ஸ 3/36, நிபுன காரியவசம் 2/40, சலன டி சில்வா 2/43


மட்டக்களப்பு மாவட்டம் எதிர் அம்பாறை மாவட்டம்

கொழும்பு, BRC மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணி 39 ஓட்டங்களால் அம்பாறை மாவட்ட அணியை இலகுவாக வெற்றியீட்டியது. அணித்தலைவர் ஹர்ஷ விதான சிறப்பாக துடுப்பாடி 54 ஓட்டங்களை அதிகபட்ச ஓட்டங்களாக பதிவு செய்தார். அதேநேரம் TM சம்பத் 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியை உறுதிச் செய்தார்.

போட்டியின் சுருக்கம்

மட்டக்களப்பு மாவட்டம் – 241 (49) – ஹர்ஷ விதான 54, சானக விஜேசிங்க 48, விக்கும் சஞ்சய 30, லசித் லக்க்ஷான் 28, ஹேஷான் ராமநாயக்க 24, சாலிய சமன் 3/35, டிலேஷ் குணரட்ன 3/48, நிமந்த மதுஷங்க 2/30

அம்பாறை மாவட்டம் – 202 /10 (47.4) – நதீர நாவல 46, சாலிய சமன் 33, சஹன் விஜேரத்ன 27, நிமந்த மதுஷங்க 27, TM சம்பத் 3/45, விக்கும் சஞ்சய 2/21, ஹேஷான் ராமநாயக்க 2/29

HIGHLIGHTS