பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள T20I தொடருக்கான இலங்கை குழாத்திலிருந்து அனுபவ துடுப்பாட்ட வீரர் குசல் பெரேரா விலகியுள்ளார்.
குசல் பெரேரா சுகயீனம் காரணமாக பங்களாதேஷ் தொடருக்கான குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
>>சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு பிரியாவிடை வழங்கிய முன்னணி நடுவர்
பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை குழாம் இன்று அதிகாலை (29) புறப்பட்டுச்சென்ற நிலையில், குழாத்துடன் குசல் பெரேரா செல்லவில்லை. எனவே அவர் T20I தொடரில் விளையாட மாட்டார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குசல் பெரேரா அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்ல அணியில் இணைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<