ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியுடன் இணையும் குமார் சங்கக்கார

4101

இந்த ஆண்டுக்கான (2021) இந்தியன் ப்ரீமியன் லீக் (IPL) கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குனராக செயற்படுவதற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.

இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பும் கோஹ்லி, ஹர்திக் பாண்டியா

கிரிக்கெட் விளையாட்டின் சட்டவிதிகளை தீர்மானிக்கும் மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் (MCC) தலைவராக இருக்கும் குமார் சங்கக்கார ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் கிரிக்கெட்  இயக்குனராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் விடயம் இன்று (20) ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி உரிமையாளர் மனோஜ் படலே மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

அதேநேரம், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் தமது அணித் தலைவராக ஸ்டீவ் ஸ்மித்திற்குப் பதிலாக விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் சஞ்சு சம்சனை நியமனம் செய்திருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது.

”சஞ்சு அணித்தலைவராக செயற்படுவதற்கான ஆரம்ப நிலையில் இருக்கின்றார். அதேநேரம், குமார் சங்கக்கார கிரிக்கெட் இயக்குனராக இணைகின்றார். அவரின் (சஞ்சு சம்சனின்) திறமைகள் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், அவர் மிகவும் பலம் கொண்ட ஒருவர். அதேநேரம், விக்கெட் காப்பாளராக இருப்பது அணித்தலைவராக இருக்க உதவியாக இருக்கும்.” என மனோஜ் படலே ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் புதிய நியமனங்கள் பற்றி கருத்து வெளியிட்டிருந்தார். 

“மெதிவ்ஸை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்” – மிக்கி ஆர்தர்

குமார் சங்கக்கார, ஐ.பி.எல். அணியொன்றில் நியமனம் பெறுவதற்கு முன்னர் இந்தப் பருவகாலத்திற்கான T10 லீக் தொடரில் ஆடும் டீம் அபுதாபி அணியின் ஆலோசகராக பணிபுரிவதற்கு அழைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடதக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<