இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட் அணியான சர்ரே பிராந்திய அணியின் அதிசிறந்த வெளிநாட்டு வீரராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தேர்வாகியுள்ளார்.
குமார் சங்கக்காரவிற்கு ஐ.சி.சி. இன் தலைவர் பதவியா?
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான குமார் சங்கக்காரவினை, இலங்கை …
இங்கிலாந்தில் உள்ள 18 பிராந்திய அணிகளிலும் விளையாடிய வெளிநாட்டு வீரர்களில் அதிசிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக வாக்கெடுப்பு ஒன்று பிரித்தானிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தினால் (பி.பி.சி) நடத்தப்பட்டது.
இதில் பி.பி.சி வானொலிச் சேவையில் கடமை புரிகின்ற ஊடகவியலாளர்களும், உள்ளூர் வானொலி வர்ணனையாளர்களும் கலந்துகொண்டதுடன், ஒவ்வொரு பிராந்திய அணியிலும் தலா 4 வீரர்கள் குறும்பட்டியலிட்டு இந்த வாக்களிப்பு நடத்தப்பட்டது.
இதன்படி, இங்கிலாந்தின் பிராந்திய கழகமான சர்ரே அணிக்காக விளையாடிய அதிசிறந்த வெளிநாட்டு வீரருக்கான விருதை குமார் சங்கக்கார பெற்றுக் கொண்டுள்ளார். இதில் அவர் 40 சதவீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டமை சிறப்பம்சமாகும்.
சர்ரே அணிக்காக 2015 முதல் 2017 வரையான காலப்பகுதியில் விளையாடியுள்ள குமார் சங்கக்கார, 33 போட்டிகளில் பங்குகொண்டு 14 சதங்களுடன் 3,400 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
இதேநேரம், மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் அந்த அணிக்காக 1,941 ஓட்டங்களையும் அவர் குவித்துள்ளார்.
இலங்கை அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சங்கக்கார, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 28,016 ஓட்டங்களை எடுத்து அதிக ஓட்டங்களைக் குவித்த இலங்கை வீரராக வலம்வந்து கொண்டிருக்கிறார்.
அத்துடன், அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து 100 சதங்களைக் குவித்துள்ள ஒரேயொரு இலங்கை வீரரும் குமார் சங்கக்கார என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதுஇவ்வாறிருக்க, சர்ரே அணிக்காக குமார் சங்கக்காரவுடன் குறித்த வாக்கெடுப்பில் இடம்பிடித்த பாகிஸ்தான் வீரர்களான சக்லைன் முஷ்டாக் 21 சதவீத வாக்குகளையும், இன்டிகாப் அலாம் 20 சதவீத வாக்குகளையும், மேற்கிந்திய தீவுகளின் சில்வெஸ்டர் கிளார்க் 19 சதவீத வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.
சங்கக்காரவின் தலைமைப் பதவியை நீடிக்கவுள்ள MCC
கிரிக்கெட்டின் சட்டவிதிகளை உருவாக்கும் இங்கிலாந்தின் மெர்லிபோன் கிரிக்கெட் …
இதனிடையே இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான அரவிந்த டி சில்வா கென்ட் அணிக்காக விளையாடிய வெளிநாட்டு வீரர்களில் ஒருவராக இடம்பிடித்திருந்தார்.
எனினும், அந்த அணியில் அவருடன் போட்டியிட்ட பாகிஸ்தான் வீரரான ஆசிப் இக்பால், 56 சதவீத வாக்குகளைப் பெற்று கென்ட் அணியின் அதிசிறந்த வீரருக்கான விருதினை தட்டிச் சென்றார்.
இதேவேளை, மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சேர் விவியன் றிச்சர்ட்ஸ், இங்கிலாந்தின் சமர்செட் மற்றும் க்ளமோர்கன் ஆகிய இரண்டு பிராந்திய அணிகளின் அதிசிறந்த வெளிநாட்டு வீரராக தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…