ICC யின் தொலைக்காட்சி வர்ணனையாளராக குமார் சங்கக்கார

2483
Kumar Sangakkara

எதிர்வரும் ஜூன் மாதம் 1ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளுக்கான கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பட்டியலை ICC வெளியிட்டுள்ளது.

அதேநேரம், நேரடி ஒளிபரப்பிற்கான வரைபு திட்டங்களை சர்வதேச கிரிக்கெட் சபை முதல் தடவையாக வெளியிட்டுள்ள நிலையில், வீரர்களை கண்காணிக்கும் புகைப்படக் கருவி (Camera) தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படவுள்ளது.

சம்பியன் கிண்ணத்துக்கான விஷேட தூதுவராக குமார் சங்கக்கார

சர்வதேச கிரிக்கெட் வாரியமானது, தற்போதைய காலத்தில் கிரிக்கெட்டில்..

முன்னாள் அணித் தலைவர்களான, அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங், நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம், இலங்கை அணியை வழிநடத்தியிருந்த குமார் சங்கக்கார மற்றும் தென்னாபிரிக்காவின் கிரகம் ஸ்மித் ஆகியோர் முதல் தடவையாக ICC தொலைகாட்சியில் கிரிக்கெட் வர்ணனையாளர்களாக தோன்றவுள்ளனர்.  

ஏனைய பிரசித்தி பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சௌரவ் கங்குலி, ஷேன் வோர்ன், மைக்கல் ஸ்லேட்டர், நசார் ஹுசைன், மைக்கல் ஆர்த்தடன், ஷோன் பொல்லொக், சஞ்சய் மஞ்ஞேக்கர், இயன் பிஷொப்,  ரமிஸ் ராஜா, சைமன் டூல் மற்றும் அத்தர் அலி கான் ஆகியோரும் நேரடி வர்ணனை செய்யவுள்ளனர்.  

ரிக்கி பொண்டிங்:ஒரு கிரிக்கெட் வீரராக நான் எப்பொழுதும் சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளை எதிர்பார்த்திருப்பேன். இரண்டு தடவைகள் கிண்ணத்தை கைப்பற்றியது என்னை சிலிர்ப்பூட்டுகின்றது. இம்முறை வர்ணனையாளர் குழுவுடன் இணைந்து வர்ணனையாளராக திறமைகளை வெளிப்படுத்தவுள்ளேன். இறுதிப் போட்டிக்கு பெட் கம்மிங்ஸ் மற்றும் ஜேசன் ரோய் ஆகியோருடன் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தகுதி பெறும் என்று எதிர்பார்கின்றேன். “  

பிரண்டன் மெக்கலம் : “ICC சம்பியன்ஸ் கிண்ண போட்டிகள் என்று சொல்லும் பொழுது பல பழைய இனிய நினைவுகள் மலர்கின்றன. அத்துடன், அனைத்து அணிகளும்,கிண்ணத்தை வெல்ல முயற்சிக்கும். இந்த 50 ஓவர் போட்டிகளில் முத்திரை பதிக்க சகல அணிகளும் ஆர்வத்துடன் விளையாடும். பெருமை மிக்க இந்த பெரும் நிகழ்வில் வர்ணனை செய்ய காத்திருக்கின்றேன். அத்துடன், பொண்டிங், கங்குலி மற்றும் ஸ்மித் போன்றவர்களுடன் வேலை செய்வது மிகவும் குதூகலமாக இருக்கப் போகின்றது. அத்துடன், கிரிக்கெட் ரசிகர்களுக்கு தனித்தன்மை மற்றும் விரிவான களநிலவரங்களை வழங்கவிருக்கின்றோம்

கிரகம் ஸ்மித் : “இவ்வருடத்துக்கான சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளுக்கு வர்ணனை செய்ய கேட்ட போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அத்துடன் அதனை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டவில்லை. இந்த மாபெரும் போட்டியில் எல்லா அணிகளுக்கும் திறமைகளை வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் உள்ளன . நிச்சியமாக  பல ஆச்சரியங்கள் மற்றும் புதுமைகள் காத்திருகின்றன. அதனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளேன்

இங்கிலாந்து காலநிலைக்கு ஈடுகொடுக்க மலையகத்தில் பயிற்சியில் ஈடுபடும் இலங்கை அணி

பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் எதிர்வரும் ஜூன் மாத ஆரம்பத்தில் இங்கிலாந்து..

குமார் சங்கக்கார : “சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள் முக்கியம் வாய்ந்த போட்டியாகும். நான் மிகவும் நேசித்த மற்றும் இந்த போட்டிகளில் நான் மிகவும் ஆர்வத்துடன் பங்குபற்றினேன். அத்துடன், கிடைத்த வெற்றிகளை கௌரவத்துடன் ருசித்தேன். இப்போது ஒரு வர்ணனையாளராக பங்குபற்றுகின்றேன். இந்த மாபெரும் போட்டியில் பங்குபற்ற ஆவலுடன் காத்திருக்கின்றேன். அத்துடன் சிறந்த வீரர்களுக்கு மத்தியில் அணிகளுக்கிடையே பலத்த போட்டி காணப்படுகின்றது. அதனால் நிறைய அணிகளுக்கு கிண்ணத்தை கைப்பற்றும் வாய்ப்பு இருகின்றது. அதனால் மூன்று வாரத்துக்கான விறுவிறுப்பான போட்டிகளை கண்டுகளிக்கலாம் என்று உறுதியாகச் சொல்லலாம்.“

ICC தொலைக்காட்சியானது, தயாரிப்பு நிறுவனங்களான சன்செட் மற்றும் வைன் (Sunset + Vine) என்ற நிறுவனங்களின் உதவியுடனும் இலத்திரனியல் உபகரண உதவி நிறுவனமான NEP Broadcast Solutions நிறுவனத்தின் பங்களிப்புடன் நடைபெறவுள்ள அனைத்துப் போட்டிகளையும் நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளது.ICC TV commentary

எட்டு அணிகள் பங்குபற்றும் இந்தத்  தொடரில் முதலாவது போட்டியாக சொந்த மண்ணில் விளையாடும் இங்கிலாந்து அணியுடன் பங்களாதேஷ் அணி ஜூன் மாதம் 1ஆம் திகதி ஓவல் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றது.

இப்போட்டி அதி நவீன தொழிநுட்பத்துடன் நேரலையாக ரசிகர்களை சென்றடைய உள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் 34 கெமராக்கள் பயன்படுத்தப்படவுள்ள நிலையில், பல புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய கருவிகளும் பயன்படுத்தப்படவுள்ளன.  

ஒவ்வொரு  போட்டியிலும் 6 வீரர்களுக்கான கண்காணிப்பு கெமெராக்கள் உபயோகப்படுத்தப்படவுள்ளன. அத்துடன், ஜூன் 18ஆம் திகதி ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் சிறப்பு ஒளிபரப்புக்காக ட்ரோன் (Drone) கெமராக்களும் பயன்படுத்தப்படவுள்ளன.

இவை தவிர ரசிகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் இந்த கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பில், சில நுணுக்கமான தொழில்நுட்பம் பயன்படுத்தவுள்ள அதேவேளை, கிரபிக் உலகில் முன்னணி நிறுவனமான சிரோன் ஹீகோ (Chyron Hego)  நிறுவனத்தின் உதவியுடன் வீரர்களின் புள்ளிவிபரவியல் மற்றும் கிரிக்கெட் புள்ளிவிபரவியல் ஆய்வு போன்றன துல்லியமாக வழங்கப்படவுள்ளன.

போட்டிகளின் போது நேரடி ஒளிபரப்பில் முக்கியமான புள்ளி விபரங்கள் பற்றிய விடயங்களை விளையாட்டு கிரபிக் நிபுணத்துவம் பெற்ற முன்னணி நிறுவனமான Alston Elliott என்ற நிறுவனம் வழங்கவுள்ளதோடு,  அப்புள்ளி விபரம் DixonBaxi என்ற நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட புதிய வகையில் உருவாக்கப்பட்ட கிரபிக் வேலைப்பாடுகளுடன் கண்ணைக்கவரும் வகையில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

அவுஸ்திரேலிய கனிஷ்ட அணியிடம் மீண்டும் வீழ்ந்த இலங்கை

சுற்றுலா இலங்கை கனிஷ்ட அணி மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான..

போட்டி ஆரம்பிபதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக நாணய சுழற்சி மற்றும் துடுப்பாட்ட களத்தின் நிலவரம் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் தனிப்பட்ட புள்ளி விபரங்களும் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன.   

அத்துடன், இன்னிங்ஸ் இடைவேளையின்போது கிரிக்கெட் ரசிகர்களை கவரும் வகையில் போட்டியின் முக்கிய விடயங்கள் குறித்து மீள்பார்வை செய்யப்படும். அத்துடன், வெற்றி இலக்கு குறித்து முன்னோட்டம், பழைய சாதனைகள் என்பன ICC சம்பியன்ஸ் கிண்ண முன்னாள் நட்சத்திர வீரர்களினால் ஆய்வு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

அத்துடன் ICC தொலைக்காட்சியானது போட்டி குறித்த விபரங்கள் அடங்கிய புத்தகம் ஒன்றை, உத்தியோகபூர்வ ஒளிபரப்பு மற்றும் உத்தியோகபூர்வ ஊடக பங்குதாரர்களுக்கும் ICC இன் விபரங்கள் பகிர்ந்தளிக்கும் சேவையினூடாக வழங்கப்படவுள்ளது. இந்த உள்ளடக்க கோவையில் வீரர்கள் பற்றிய விபரங்கள் மற்றும் அணிகளை பற்றிய விரிவான செய்திகளும் அடங்கும்.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<