ஒரு பில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்க்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான நேர்முக வர்ணனையாளர்கள் மற்றும் ஏனைய ஒளிபரப்புத் திட்டங்களை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) வெளியிட்டுள்ளது.
இதில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார முதல் முறையாக உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் வர்ணனை வழங்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
ஸ்கொட்லாந்துடனான இறுதி வாய்ப்பை பயன்படுத்துமா இலங்கை?
உலகக் கிண்ணத்தை முன்னிட்டு இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி ஸ்கொட்லாந்து …………..
கடந்த முறை உலகக் கிண்ணத்தை சுவீகரித்த மைக்கல் கிளார்க் ஐ.சி.சி. தொலைக்காட்சி வர்ணனையாளராக இடம்பெறுவதோடு அவருடன் நசார் ஹுஸைன், இயன் பிசொப், சவ்ரௌ கங்குலி, மெலானி ஜோன்ஸ், குமார் சங்கக்கார, மைக்கல் ஆர்தடன், அலிசன் மிச்சல், பிரன்டன் மெக்கலம், கிராம் ஸ்மித் மற்றும் வசீம் அக்ரம் ஆகிய அதிகம் மதிப்புக்குரியவர்கள் இந்த குழுமத்தில் இடம்பெறுகின்றனர்.
இந்த தொடர் முழுவதும் நேர்முக வர்ணனை செய்யப்போகும் ஏனையவர்களில் ஷோன் பொலக், மைக்கல் சிலேட்டர், மார்க் நிகலஸ், மைக்கல் ஹோல்டிங், இசா குஹா, பொம்மி ம்பங்குவா, சஞ்ஜே மஞ்ரேக்கர், ஹார்ஷே போக்லே, சைமன் டோல், இயன் ஸ்மித், ரமிஸ் ராஜா, ஆத்தர் அலிக்கான் மற்றும் இயன் வார்ட் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
இதில், முக்கிய வீரர்கள் இம்முறை உலகக் கிண்ணம் குறித்து தமது கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
நஸார் ஹுஸைன்: ‘பாரிய கோடைகால கிரிக்கெட்டை முன்னிட்டு ஒட்டுமொத்த இங்கிலாந்து மற்றும் வேல்ஸும் எதிர்பார்ப்புடனும் உற்சாகத்துடனும் உள்ளது. இம்முறை உலகக் கிண்ணம் இதுவரை இல்லாத அளவுக்கு களியாட்டம் கொண்டதாக இருக்கும் என்று நம்பிக்கை தருவதோடு முதலாமவராக வரலாறு உருவாவதை பார்க்கும் இந்த தொடரில் வர்ணனையாளராக பங்கேற்கும் வரை எனக்கு இருப்புக் கொள்ளவில்லை.’
MCC இன் தலைவராக குமார் சங்கக்கார
கிரிக்கெட் விளையாட்டின் சட்ட திட்டங்களை தீர்மானிக்கும் மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் (MCC) அடுத்த தலைவராக இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட நட்சத்திரமான …..
பிரண்டன் மெக்கலம்: ‘எமது விளையாட்டில் இந்தத் தொடர் தொடர்ந்து முன்னணியாக உள்ளது. உலகக் கிண்ண கிரிக்கெட்டில் எனக்கு பல அனுபவங்கள் உள்ளன. கடும் பயிற்சிக்குப் பின்னர் 2015 உலகக் கிண்ணம் மிக உச்சமாக இருந்தது. இம்முறை வேறு துறையில் பங்கேற்பதையிட்டு உற்சாகமடைகிறேன். பல நாடகங்கள் அரங்கேறும் என்று எதிர்பார்க்கிறோம்.’
குமார் சங்கக்கார: ‘இங்கிலாந்து மற்றும் வேல்ஸுக்கு இது மிக முக்கியமான கிரிக்கெட் கோடைகாலமாக இருக்கும், அனைத்துக் காலத்திற்கும் சிறந்த ஐ.சி.சி. ஆடவர் கிரிக்கெட் தொடராக அமைய வாய்ப்பு உள்ளது. போட்டியை நடத்தும் இங்கிலாந்து சிறந்த அணியாக உள்ளது. ஆனால் பல உண்மையான போட்டியாளர்களும் உள்ளனர். மிக அற்புதமான கிரிக்கெட்டை பார்க்க முடியும் என்று நாம் உறுதியாக உள்ளோம்.’
வசீம் அக்ரம்: ‘எதிர்வரும் உலகக் கிண்ணம் 1992 இன் அதே வடிவில் உள்ளது. அணிகளுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் சிறந்த வடிவாக இது இருப்பதோடு அனைத்து அணிகளுக்கும் அரையிறுதிக்கு தகுதி பெற நிகரான வாய்ப்பு இருப்பதாக நான் கருதுகிறேன். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் உலகக் கிண்ணம் வருவதால் வீரர்கள் காத்திருந்து மறக்கமுடியாத திறமையை வெளிப்படுத்த எதிர்பார்ப்பார்கள். உலகம் கண்ட மிகச் சிறந்த வீரர்களுடன் இருக்கை நுணிக்கு எடுத்துச் செல்லும், அதிக திறன் மற்றும் நிகரற்ற தருணங்களுடன் மிகப் பரபரப்பான தொடராக இது இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
இயன் பிசொப்: ‘பெரும் எதிர்பார்ப்புடன் அடுத்த சில வாரங்களுக்குக் காத்திருக்கிறேன். நீங்கள் எங்கிருந்தபோதும் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தின் செய்திகள், புதுத் தகவல்கள் மற்றும் மதிப்பீடுகளை கொண்டுதரும் நேர்முக வர்ணனைக் குழுவில் அங்கத்துவம் வகிப்பதை இட்டு பெருமை கொள்கிறேன். முன்னெப்போதும் இல்லாத வகையில் இம்முறை உலகக் கிண்ணம் பரபரப்பு மற்றும் புதுமையை தரும் என்று உறுதி அளிப்பதோடு அதனை உங்களுக்குத் தரும் அணியில் இடம்பெற்றிருப்பது கௌரவமாகும்.’
நாட்டில் வன்முறை வேண்டாம்: கிரிக்கெட் நட்சத்திரங்கள் கோரிக்கை
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல் ……….
மொத்தமாக 46 நாட்களில் அனைத்து 48 போட்டிகளின் நேரடி ஒளிபரப்பை தரவுள்ள ICC TV முதல் முறையாக பத்து பயிற்சிப் போட்டிகளையும் நேரடி ஒளிபரப்புச் செய்யவுள்ளது.
எல்லாப் போட்டிகளுக்கும் எட்டு ultra-motion Hawk-Eye கெமராக்கள், முன் மற்றும் தலைகீழ் காட்சி கொண்ட ஸ்டம்ப் கெமராக்கள் மற்றும் Spidercam உட்பட ஒவ்வொரு போட்டிக்கும் குறைந்தது 32 கெமராக்கள் பயன்படுத்தப்பட்டு பார்வையாளர்களுக்கு உயரிய விருந்து அளிக்கப்படவுள்ளது.
முதல் முறையாக ஒளிபரப்பில் Piero மூலம் 360° ரீப்ளே முறை பயன்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் பல கெமராக்களில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு போட்டியின் தருணங்களை ஆழமாக பார்க்கும் அற்புதமான வீடியோ காட்சிகள் தரப்படவுள்ளது.
இந்த ஒளிபரப்பு Player Tracking இனை பயன்படுத்துவது உட்பட பகுப்பாய்வு மற்றும் காட்சி விரிவாக்கங்களுடன் முழுமை பெற்றதாகவும் அமையவுள்ளது. Hawk-Eye போன்ற ஒளிபரப்புக் கருவிகள் பகுப்பாய்வு செயலியான CricViz மூலம் வழங்கப்பட்டிருக்கும் கிரிக்கெட் தரவு பகுப்பாய்வு மூலம் இணைக்கப்பட்டிருக்கும்.
Batcam வழங்கப்படும் ஆளில்லா விமானக் கெமராக்கள் மூலம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள அனைத்து மைதானங்களினதும் அட்புதமான கட்சிகள் தரப்படவுள்ளன. இதில் சுற்றித்திரியும் Buggy Cam தரைமட்ட காட்சிகளை வழங்கவுள்ளது.
உற்பத்தி சேவைகள் கூட்டாண்மையான Sunset+Vine மற்றும் உபகரண சேவைகள் கூட்டாண்மையான NEP ஒளிபரப்பு தீர்வுகள் ICC TV யிற்கு உதவவுள்ளன. அதேநேரம், விளையாட்டு வரைகலை (கிரபிக்ஸ்) நிபுணரான ஆல்ஸ்டன் எல்லியோட் ஒளிபரப்பில் முக்கியமான தரவுகள் மற்றும் ஓட்ட விபரங்களின் சமகால வடிவிலான கிரபிக்ஸ் காட்சிகளை மேம்படுத்தியுள்ளார்.
ஊடக உரிமங்கள், ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தலைவர் ஆர்டி டபாஸ் கூறும்போது, ‘ICC TV யிற்கு இத்தனை திறமை படைத்த ஒளிபரப்பாளர்களை வரவேற்பதை இட்டு நான் உற்சாகம் அடைந்துள்ளேன். அவர்கள் உலகெங்கும் ஒரு பில்லியனுக்கு அதிகமான ரசிகர்களுக்கு ஐ.சி.சி. ஆடவர் உலகக் கிண்ணத்தை நேரடியாகத் தரவுள்ளனர்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் ரசிகர்களுக்கு மிக நெருக்கமாக கொண்டுதருவதே எமது நோக்காக உள்ளது. எமது விரிவான ஒளிபரப்புத் திட்டம் இதனை வழங்கும். இந்த மிகப்பெரிய உலகக் கிண்ண ஒளிபரப்பில் முன்னர் காணாத பகுப்பாய்வுகளில் அவதானம் செலுத்துவதன் மூலம் எமது நேர்முக வர்ணனையாளர்களிடம் இருந்து தனித்துவமான அம்சங்களை வாசகர்கள் காண முடியும்’ என்றார்.
ICC TV ஊடாக ஒளிபரப்புக் கூட்டாளிகள் மற்றும் ஏனைய ஊடக உரிமம் பெற்ற கூட்டாளிகள் ஆடுகளத்தின் மேலதிக உள்ளடக்கங்களை தருவதற்கு ICC TV ஏற்பாடுகளை செய்துள்ளது. நாளாந்தம் வீரர்கள் சுயவிபரம், அணிகள் தொடர்பான தகவல்கள், போட்டி முன்னோட்டம், ஆடுகளம் தொடர்பான விபரங்கள் மற்றும் ஏனைய திரைக்குப் பின்னாலுள்ள விடயங்கள் இந்த உள்ளடக்கத்தில் உட்படுவதோடு, 2019 ஐ.சி.சி. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் அனைத்து நிகழ்வுகளையும் ரசிகர்களுக்கு தனிப்பட்டு மற்றும் நெருக்கமாக தருவதற்கு ஏற்பாடுகள் தயாராக உள்ளன.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<