இங்கிலாந்தில் நடைபெறும் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் லீக் போட்டிகள், அரையிறுதிப் போட்டிகள் என அனைத்தும் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (14) லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
உலகக் கிண்ணத்தை உலுக்கிய ஆர்ச்சரின் டுவீட்டுகள்
சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரையில் உலகக் கிண்ணத் தொடரில் விளையாடி வரும்…
இந்த உலகக் கிண்ணத் தொடரின் இறுதி போட்டியில் ஆடுவதற்கு இதுவரையில் உலகக் கிண்ணம் ஒன்றை வெல்லாத நியூசிலாந்து அணியும், இங்கிலாந்து அணியும் தெரிவாகியிருக்கின்றன. இதில் நியூசிலாந்து அணி, அரையிறுதிப் போட்டியில் இந்தியாவையும், இங்கிலாந்து அணி அவுஸ்திரேலியாவையும் தோற்கடித்திருந்தன.
இவ்வாறாக மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ள இந்த உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நடுவர்கள், மத்தியஸ்தர்கள் யார் என்ற விபரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அந்தவகையில், இலங்கையைச் குமார் தர்மசேன உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் கள நடுவர்களில் ஒருவராக செயற்படவுள்ளதோடு, இலங்கையின் ரஞ்சன் மடுகல்ல உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் போட்டி மத்தியஸ்தராக கடமை புரியவுள்ளார். இதேநேரம், உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் ஏனைய கள நடுவராக தென்னாபிரிக்காவை சேர்ந்த மரைஸ் எரஸ்மஸ் பணியாற்றவுள்ளார்.
அதேவேளை, உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் மூன்றாவது நடுவராக அவுஸ்திரேலியாவின் ரொட் டக்கர் செயற்படவுள்ளதோடு, நான்காம் நடுவருக்கான பொறுப்பு பாகிஸ்தானின் அலிம் டாருக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது.
சரித்திரத்தை மாற்றிய இங்கிலாந்தின் அடுத்த இலக்கு நியூசிலாந்து
அவுஸ்திரேலியாவை சிறந்த முறையில் எதிர்கொண்டு வெற்றி பெற்றது போல…
கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தில் நடைபெறவுள்ள இந்த உலகக் கிண்ணத் தொடரில் இருந்து இலங்கை வெளியேறியுள்ள நிலையில் இலங்கையர்களான குமார் தர்மசேன, ரஞ்சன் மடுகல்ல ஆகியோர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் கடமை புரிவது முழு இலங்கையர்களுக்கும் கெளரவம் சேர்த்திருக்கின்றது.
அதோடு, இலங்கை அணி 1996ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வெல்லும் போது அதன் வீரர்கள் குழாத்தில் இடம்பெற்றிருந்த குமார் தர்மசேன மற்றும் ரஞ்சன் மடுகல்ல ஆகியோர், இந்த உலகக் கிண்ணத்தின் அரையிறுதிப் போட்டிகளிலும் சேவை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<