ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டை மறுக்கும் குலதுங்க, லொக்குஹெட்டிகே

320

கிரிக்கெட்டில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் ஊழல் தொடர்பில் அல் ஜெஸீரா தொலைக்காட்சி வலையமைப்பு மேற்கொண்டிருக்கும் இரகசிய நடவடிக்கையில் சிக்கிய இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான ஜீவன்த குலதுங்க மற்றும் தில்ஹார லொக்குஹெட்டிகே இருவரும், தாம் எந்த தவறும் செய்யவில்லை என்று கடந்த திங்கட்கிழமை (மே 28) மறுப்பு தெரிவித்துள்ளனர்.  

காலி டெஸ்ட் போட்டிகளில் ஆட்ட நிர்ணயம் இடம்பெறவில்லை – மொஹான் டி சில்வா

இலங்கையில் நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும்..

இலங்கை கிரிக்கெட் சபையில் ஒரு பயிற்சியாளராக பணியாற்றும் குலதுங்க, .சி.சி. விசாரணைகள் பூர்த்தியாகும் வரை குறித்த பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். இலங்கை அணிக்காக 11 சர்வதேசப் போட்டிகளில் ஆடி இருக்கும் லொக்குஹெட்டிகே தற்போது அவுஸ்திரேலியாவின், மெல்பேர்ன் நகரில் வாழ்ந்து வருகிறார்.  

அல் ஜெஸீரா கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பிய ஆவணப்படத்தில், ஆட்ட நிர்ணயக்காரர்கள் என்று குற்றம் சாட்டப்படுவர்களுக்கு குலதுங்க உடந்தையாக இருப்பது போல் காண்பிக்கப்பட்டுள்ளது. இதில் அவர் பல திடுக்கிடும் அறிவிப்புகளை வெளியிடுவதோடு, ‘ஆட்டத்திறனை குறைப்பது இலகுவானதுஎன்று குறிப்பிட்டுள்ளார். எனினும் தாம் ஒரு பொறிக்கு இறையாகிவிட்டதாக Cricbuzz விளையாட்டு செய்தி இணையதளத்திற்கு அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் நிரபராதிஎன்று குலதுங்க குறிப்பிட்டுள்ளார். நான் இதற்குள் சிக்கிவிட்டேன். இங்கிலாந்தில் நான் ஆடும் காலத்திலேயே ரொபின் மொரிஸை எனக்குத் தெரியும். நாம் 2006 ஆம் ஆண்டு முதல் முறை சந்தித்தோம். கடந்த ஆண்டு ஒரு மாலை வேளையில், தாம் கொழும்பில் இருப்பதாகவும் மதுபானம் அருந்துவற்கு என்னை சந்திக்க வேண்டும் என்றும் அவர் அழைத்தார். நான் அவரை சாதாரணமாக சந்தித்து மதுபானம் அருந்தினோம். இதற்குள் நான் சிக்கவைக்கப்பட்டிருக்கிறேன் என்று 200க்கும் அதிகமான முதல்தர போட்டிகளில் ஆடியிருக்கும் குலதுங்க தெரிவித்தார்.  

ரொபின் என்னவாக இருந்தார் என்பது எனக்குத் தெரியாதிருந்தது. தனது நண்பர் என்று கூறிய ஒருவரை அவர் என்னிடம் அறிமுகப்படுத்தியதையே எனக்கு ஞாபகப்படுத்த முடியும் என்றார் குலதுங்க.

இந்நிலையில் குலதுங்க சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு உத்தேசித்துள்ளார். நான் எந்த தவறும் செய்யவில்லை. நியாயமற்ற முறையில் நான் விமர்சிக்கப்படுவதாக உணர்கிறேன். எனது வழங்கறிஞர் வெளிநாட்டில் உள்ளார், அவர் நாடு திரும்பியதும் நாம் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று குலதுங்க கூறினார்.

2016ஆம் ஆண்டு தனது காலில் காயம் ஏற்பட்டதன் பின் குறைவாகவே கிரிக்கெட் போட்டிகளில் ஆடியிருக்கும் லொக்குஹெட்டிகே, தம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். நான் தற்போது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறேன். நான் கொழும்புக்கு வந்த நேரத்தில் ஜீவன்தவை சந்திக்க விரும்பினேன். தாம் மற்றொரு நண்பரை சந்திக்க செல்வதாகவும் கொழும்பில் உள்ள குறித்த ஹோட்டலுக்கு வரும்படியும் அவர் என்னை அழைத்தார். நாம் அங்கு சற்று மதுபானம் அருந்தினோம்என்று லொக்குஹெட்டிகே Cricbuzz க்கு குறிப்பிட்டுள்ளார்.

உலக பதினொருவர் அணியின் தலைவராக சஹீட் அப்ரிடி

புயல் நிவாரண நிதி திரட்டுவதற்காக மேற்கிந்திய…

இலங்கை அணிக்காக ஆடும் காலத்தில் .சி.சி. ஊழல் தடுப்பு பிரிவு நடத்தும் பல கூட்டங்களில் நான் பங்கேற்றிருக்கிறேன். ஏதோ தவறாக இருப்பதை நான் புரிந்துகொண்டேன். நீங்கள் அந்த ஆவணப் படத்தை பார்த்தால், எனது செய்கைகள் உங்களுக்கு தெளிவாக புரியவைக்கும். எனது காயம் காரணமாக நான் எந்த கிரிக்கெட் போட்டியிலும் ஆடாத நிலையிலும், எந்த ஒரு கிரிக்கெட் ஆட்டத்திலும் நான் இடம்பெறாத நிலையிலும் அந்த சந்திப்பில் முன்வைக்கப்பட்ட எந்த ஒரு கருத்தும் என்னுடன் தொடர்புபட்டதல்ல. இந்த நபர்கள் என்ன கூறுகிறார்கள் என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் கூறினார்.

தாம் குடிபோதையில் இருந்ததாகவும் அந்த சம்பாஷணையை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் இந்த இரு வீரர்களும் .சி.சி. ஊழல் தடுப்பு பிரிவுக்கு குறிப்பிட்டுள்ளனர்.  

இந்த இரு வீரர்களும் தவிர, மற்றொரு முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரரான தரிந்து மெண்டிஸ் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். இலங்கை கிரிக்கெட் சபையின் ஒரு மாவட்ட பயிற்சியாளராக பணியாற்றும் மெண்டிஸும் தனது பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் உதவி முகாமையாளர் தரங்க இந்திக்கவையும் இலங்கை கிரிக்கெட் சபை இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<