இலங்கை மெய்வல்லுனர் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு இந்நாட்டின் கீர்த்திமிக்க மெய்வல்லுனர் பயிற்சியாளர்களில் ஒருவரான வை.கே குலரத்னவை நியமிக்க இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி, இலங்கை மெய்வல்லுனர் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு வை.கே குலரத்னவை நியமிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுக்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்திற்கு புதிய பெயர்
இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ பெயரை ‘ஸ்ரீலங்கா..
எனவே, இதற்கான அனுமதி கிடைத்தவுடன் தேசிய மெய்வல்லுனர் குழுவை அவரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மெய்வல்லுனர் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையின் மெய்வல்லுனர் விளையாட்டுக்கு முன்னணி வீரர்கள் பலவற்றை உருவாக்கிய இவர், 2008, 2009 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் மெய்வல்லுனர் அணியின் பிரதான பயிற்சியாளராக செயற்பட்டுள்ளார்.
அத்துடன் கடந்த டிசம்பர் மாதம் நிறைவுக்கு வந்த 13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை மெய்வல்லுனர் அணியின் பிரதான பயிற்சியாளராக செயற்பட்ட அவர், தன்னுடைய பயிற்றுவிப்பின் கீழ் அண்மைக்காலமாக தேசிய மட்டத்தில் பதக்கங்களை வென்று வந்த முப்பாய்ச்சல் வீரர் சப்ரின் அஹமட் போன்ற திறமையான வீரர்களின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
1980 ஆம் ஆண்டு விளையாட்டுத்துறை அதிகாரியாக அரச சேவையில் இணைந்து கொண்ட வை.கே குலரத்ன, 2017இல் ஓய்வு பெறும் வரை விளையாட்டுத்துறை அமைச்சின் செயற்றிட்ட அதிகாரியாக கடமையாற்றியிருந்தார்.
1957ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி பிறந்த அவர், தனது ஆரம்பக் கல்வியை வௌஹமடுவ வனிகசேகர கல்லூரியில் மேற்கொண்டிருந்தார். அதன் பிறகு மாத்தறை புனித ஜோசப் கல்லூரியிலும், மாத்தறை ராகுல கல்லூரியிலும் முன்னெடுத்தார்.
400 மீற்றர் மற்றும் 800 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய வை.கே குலரத்ன, 1974 இல் பாடசாலை வர்ண சான்றிதழையும் பெற்றுக் கொண்டார். ஒரு பயிற்சியாளராக தனது வாழ்க்கையை முன்னெடுத்த அவர், சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தின் 5 ஆவது பிரிவு பாடநெறியை வெற்றிகரமாக முடித்துள்ளார்.
மெய்வல்லுனர், டென்னிஸ், பெட்மிண்டன் உலகில் 2019ஐ கலக்கியவர்கள்
21ஆம் நூற்றாண்டின் முதாலவது தசாப்தமானது முடிவடைந்து அதன் இரண்டாவது..
எனவே இலங்கையின் அனுபவமிக்க பயிற்சியாளர்களில் ஒருவரான வை.கே குலரத்ன, இந்நாட்டின் மெய்வல்லுனர் விளையாட்டின் பிரதான பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால் எதிர்வரும் காலங்களில் சர்வதேச மட்டப் போட்டிகளில் எமது வீரர்கள் இன்னும் சாதிப்பார்கள் என மெய்வல்லுனர் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<