மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் பகுதிநேர சுழல் பந்துவீச்சாளரான கிரைக் ப்ரத்வைட், சந்தேகத்திற்கு இடமான முறையில் பந்துவீசுவதாக சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
நடைபெற்று முடிந்த இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில், கிரைக் ப்ரத்வைட் பந்துவீசியதை அடிப்படையாக கொண்டே அவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் பந்துவீசுகின்றார் என்கிற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
சங்கக்கார தொடர்பில் நீங்கள் அறியாதவையை கூறும் ரசல் ஆர்னல்ட்
இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது சர்வதேச கிரிக்கெட்….
பொதுவாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவே கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கும் கிரைக் ப்ரத்வைட், இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் பகுதிநேர சுழல் பந்துவீச்சாளராக வந்து ஒன்பது ஓவர்களை வீசி இசாந்த் சர்மாவின் விக்கெட்டினையும் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது முறையற்ற பந்துவீச்சுக்காக குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் கிரைக் ப்ரத்வைட், இம்மாதம் 14ஆம் திகதியளவில் தனது பந்துவீச்சு சரியாக உள்ளதா? என்பதற்கான பரிசோதனைக்கு முகம்கொடுக்கவிருக்கின்றார்.
கிரைக் ப்ரத்வைட் தனது பந்துவீச்சு தொடர்பான பரிசோதனையை முகம்கொடுக்கும் வரை கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீசமுடியும் என சர்வதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க