நேற்று (16) கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பிற்பகல் 2.30க்கு நடைபெற்ற 1வது அரையிரறுதிப்போட்டியில் கொழும்பு சாஹிரா கல்லூரி மற்றும் கட்டுநேரிய புனித செபஸ்டியன் கல்லூரி அணிகள் மோதின. இப்போட்டி ஆரம்பமாகி 3வது நிமிடத்தில் சாஹிராக்கல்லூரி வீரர் சப்ரான் முதலவாது கோலை போட்டார். அதன் பின் இறுதிவரை விறு விறுப்பாக சென்ற இப்போட்டியின் 76வது நிமிடத்தில் சாஹிராக்கல்லூரி அணியின் ஆகிப் தனது அணிக்காக 2வது கோலை போட்டார். அதன் பின் இப்போட்டியில் நடப்பு சம்பியன் கொழும்பு சாஹிரா கல்லூரி அணி 2-0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது.
மாலை 4.30க்கு நடைபெற்ற 2வது அரையிரறுதிப்போட்டியில் இளவாலை புனித ஹென்றிக் கல்லூரி அணி, களுத்தறை ஹொலி க்ரொஸ் அணியை எதிர்தாடியது. இப்போட்டியின் முதல் பாதியின் முடிவின் போது புனித ஹென்றிக் கல்லூரி அணி 1க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலை வகித்தது. அதன் பின் 2வது பாதியில் மிக அபாரமாக விளையாடி 8-0 என்ற அடிப்படையில் இலகுவான வெற்றியை பதித்தது. புனித ஹென்றிக் கல்லூரி அணி சார்பாக 10ம் இலக்க வீரர் அனோஜன் 3 கோல்களையும் (32,50 மற்றும் 85வது நிமிடங்களில்), அந்தொனிராஜ் (63வது நிமிடத்தில்), தனேஷ் (70வது நிமிடத்தில்), மதுசன் (82வது நிமிடத்தில்) தாலா ஒவ்வொரு கோல்களை போட்டனர். ஹொலி க்ரொஸ் அணியின் வீரர் சந்தீப் என்பவரால் 2 ஒவ்ன் கோல்கள் (69 மற்றும் 80வது நிமிடங்களில்) போடப்பட்டமை புனித ஹென்றிக் கல்லூரி அணிக்கு மேலதிகமாக 2 கோல்களைப் பெற உதவியது.
இதனடிப்படையில் கொத்மலை சொக்ஸ் கால்பந்து போட்டித் தொடரின் இறுதிப்போட்டி எதிர்வரும் 19ம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு சாஹிரா கல்லூரி மற்றும் இளவாலை புனித ஹென்றிக் கல்லூரி அணிகளுக்கு இடையில் மாலை 4.30க்கு ஆரம்பமாகவுள்ள நிலையில் 3ம் இடத்திற்கான போட்டி புனித செபஸ்டியன் கல்லூரி அணி மற்றும் ஹொலி க்ரொஸ் அணிகளுக்கிடையில் பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த இரண்டு போட்டிகளும் கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Live Stream of the Final on ThePapare.com