அவுஸ்திரேலியாவினை மையமாகக் கொண்டு இயங்கும் கூகபுர்ரா (Kookaburra) நிறுவனம் கிரிக்கெட் போட்டிகளில் பந்தினை மிளிர வைப்பதற்கு மெழுகினை அடிப்படையாக கொண்ட ஒரு செயற்கைப் பதார்த்தத்தை உருவாக்கி வருவதாக தெரிவித்திருக்கின்றது.
பந்து சேதப்படுத்துவது சட்டரீதியாக அனுமதிக்கப்படுமா?
கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் ஆபத்து முழுமையாக இல்லாமல் போகும்…
கிரிக்கெட் போட்டிகளில் பந்தினை மிளிர வைக்க, பந்துவீச்சாளர்கள் உமிழ்நீரினை (Saliva) வழமையாக பயன்படுத்துவர். ஆனால், தற்போது உலகிற்கு மிகப் பெரிய நெருக்கடியாக அமைந்திருக்கும் கொரோனா வைரஸ் உமிழ்நீர் மூலமும் தொற்றக்கூடியது எனக் கூறப்படுகின்றது. இதனால், ஐ.சி.சி. பந்தினை மிளிர வைப்பதற்கு வேறு ஒரு முறையை உபயோகம் செய்வது தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றது.
ஐ.சி.சி. இன் கலந்துரையாடல்களில் தற்போது பந்தினை சேதப்படுத்தும் முறைகளாக கருதப்படும் செயற்கை பதார்த்தம் ஒன்றை போட்டி நடுவரின் மேற்பார்வையோடு பந்தில் செலுத்துவது பற்றியும் விவாதங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையிலேயே துடுப்பு மட்டை, பந்து என பல்வேறு கிரிக்கெட் உபகரணங்களை தயாரிக்கும் மிகப் பிரபல்யமான கூகபுர்ரா நிறுவனம் பந்தினை மிளிர வைக்கும் பதார்த்தம் தொடர்பிலான தமது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தற்போது உருவாக்கப்பட்டு வருகின்ற குறித்த பதார்த்தம் பஞ்சு ஒன்றின் உதவியோடு பந்தினை மிளிர வைக்க உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மீண்டும் இங்கிலாந்து அணியில் விளையாடுவாரா அலெக்ஸ் ஹேல்ஸ்?
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக செயற்பட்டு வந்த…
இந்த பதார்த்தம் தொடர்பில் கருத்து வெளியிட்ட கூகபுர்ரா நிறுவனத்தின் முகாமைத்துவ இயக்குனரான ப்ரட் எல்லியட், வினைத்திறனான முறையில் பந்தினை மிளிர வைக்கும் வகையில் குறித்த பதார்த்தம் தயாரிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டதோடு, இன்னும் ஒரு மாதத்தில் இது சந்தைக்கு வரவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த பதார்த்தம் உபயோகத்திற்கு வந்தாலும், கிரிக்கெட் போட்டிகளில் அதன் வினைத்திறனைப் பார்க்க சில காலம் செல்லும் என கருதப்படுகின்றது.
இதேநேரம், கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் உமிழ்நீர் கொண்டு பந்தினை மிளிரச் செய்ய அனுமதிக்கப்படாமல் போவது பந்துவீச்சாளர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என ஆஷிஷ் நெஹ்ரா, வகார் யூனுஸ் போன்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறிவருவதோடு ஷேன் வோர்ன், இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆத்தர் போன்றோர் பந்தில் உமிழ்நீர் பயன்படுத்துவதற்கு பதிலாக வேறு யோசனைகளை முன்வைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<