விஸ்டன் விருதை வென்று சாதனை படைத்த கோஹ்லி

221

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராத் கோஹ்லி தொடர்ந்து 3ஆவது முறையாக ‘உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்’ என விஸ்டன் இதழால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச அளவில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு வரும் விராத் கோஹ்லி, தொடர்ந்து 3ஆவது ஆண்டாக இந்த கௌரவத்தை பெற்று ஹெட்ரிக் சாதனை படைத்துள்ளார்.  

அத்துடன், 2018ஆம் ஆண்டின் தலைசிறந்த 5 வீரர்களுக்கான விஸ்டன் பட்டியலிலும் அவர் இடம்பிடித்து இம்முறை இரட்டை விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் மாத இதழான விஸ்டன், கிரிக்கெட்டின் முக்கிய பத்திரிகையாகப் பார்க்கப்படுகிறது. இந்த இதழ் ஆண்டுதோறும் உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர் என்று அந்த ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்ட வீரர் ஒருவருக்கு கௌரவம் அளிப்பதை 1889ஆம் ஆண்டு முதல் முன்னெடுத்து வருகின்றது.

எனவே, கிரிக்கெட்டின் பைபிள் என்று வர்ணிக்கப்படும் விஸ்டன் இதழின் இந்த வருடத்துக்கான உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகளின் பெயர் பட்டியல் நேற்று (10) வெளியிடப்பட்டது.

2018ஆம் ஆண்டின் தலைசிறந்த 5 வீரர்களுக்கான விஸ்டன் பட்டியலில் இங்கிலாந்து மகளிர் அணி வீராங்கனை டெம்மி பேமன்வுண்ட், இங்கிலாந்து வீரர்களான ஜோஸ் பட்லர், சேம் கரன், சர்ரே அணியின் தலைவர் ரோரி பேர்ன்ஸ் மற்றும் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

உலகக் கிண்ண வீரர்கள் குழாத்தினை அணிகள் எப்போது அறிவிக்கும்?

அடுத்த மாதம் இங்கிலாந்தில்….

அத்துடன், 2016ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 4ஆவது முறையாக விராட் கோஹ்லி விஸ்டன் இதழின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதைப் பெற்று வருகிறார். இதன்படி, 3 முறைக்கு மேல் விஸ்டன் விருதுகளை பெற்ற முதல் இந்திய வீரர் எனும் பெருமையையும் கோஹ்லி பெற்றுக் கொண்டார்.

இதுவரை 3 முறைக்கு மேல் விஸ்டன் விருதுகளை டொன் பிராட்மேன் (10 முறை), ஜேக் ஹோப்ஸ் (8 முறை) மட்டுமே வென்றுள்ளனர். இந்த இரண்டு வீரர்களுக்குப் பிறகு கோஹ்லி 3ஆவது இடத்தில் உள்ளார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் விராட் கோஹ்லி இந்தப் பட்டியலில் தொடர்ந்து 3ஆவது முறையாக இடம்பிடித்துள்ளார். 2018ஆம் ஆண்டில் 3 வடிவிலான போட்டிகளிலும் சேர்த்து 11 சதங்கள் உட்பட 2,735 ஓட்டங்களைக் குவித்து கோஹ்லி முதலிடம் பிடித்தார்.  

இதில் 7 சதங்களை இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய பலம்மிக்க அணிகளுக்கு எதிராக அந்த நாட்டு மண்ணில் கோஹ்லி பெற்றுக்கொண்டார். கடந்த ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியிடம் தோற்றது. ஆனால், கோஹ்லி, 5 டெஸ்ட் போட்டிகளில் 2 சதங்கள் உள்ளடங்களாக 593 ஓட்டங்களைக் குவித்தார்.

கடந்த கால அதிரடிகளை மீண்டும் ஞாபகப்படுத்திய பொல்லார்ட்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று (10)…

கோஹ்லி குறித்து விஸ்டன் ஆசிரியர் லோரன்ஸ் பூத் கூறுகையில், கடந்த 1889ஆம் ஆண்டில் இருந்து பாரம்பரிய விருது வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, இங்கிலாந்தில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வு செய்து விஸ்டன் விருதுகளை வழங்கி வருகிறோம். கடந்த 2014ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு விராட் கோஹ்லி வந்திருந்த போது 134 ஓட்டங்களை குவித்தார். அவரின் சராசரி 13.40 ஆக இருந்தது. ஆனால், கடந்த முறை அவர் 59.30 என்ற சராசரியுடன் 593 ஓட்டங்களைக் குவித்திருந்தார் என அவர் தெரிவித்தார்.

இதேநேரம், பெண்கள் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணியின் ஸ்மிர்தி மந்தனா சிறந்த வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரஷித் கான் ஆண்டின் சிறந்த டி-20 வீரராக 2ஆவது முறையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<