சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறார்கள்.
அதேபோல, தென்னாபிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளரான றபாடா 3 இடங்கள் முன்னேறி 6ஆவது இடத்தையும், தென்னாபிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் 3 இடங்கள் ஏற்றம் கண்டு 7ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
சாதனைகளுடன் டெஸ்ட் தொடரை ஆரம்பித்த இந்திய அணி
இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் சர்வதேச …
தென்னாபிரிக்கா – ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் முடிவின் அடிப்படையில் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.
இதன்படி, துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி (884 புள்ளிகள்), ரோஹித் சர்மா (842 புள்ளிகள்), இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (818 புள்ளிகள்), அவுஸ்திரேலியாவின் டேவிட் வோர்னர் (803 புள்ளிகள்), இந்திய அணியின் ஷிகர் தவான் (802 புள்ளிகள்), பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் (798 புள்ளிகள்), நியூசிலாந்து வீரர் ரொஸ் டெய்லர் (785 புள்ளிகள்) ஆகியோர் முறையே மாற்றமின்றி 1 முதல் 7 இடங்களில் நீடிக்கின்றனர்.
நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் (778 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 8ஆவது இடத்தையும், தென்னாபிரிக்க வீரர் குயின்டன் டி கொக் (769 புள்ளிகள்) ஒரு இடம் சறுக்கியும், இங்கிலாந்து வீரர் ஜோனி பேர்ஸ்டோ (769 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறியும் 9ஆவது இடத்தை பகிர்ந்துள்ளனர்.
இந்தப் பட்டியலில் எந்தவொரு இலங்கை வீரரும் முதல் 20 இடங்களுக்குள் இடம்பெறவில்லை. எனினும், அஞ்செலோ மெதிவ்ஸ் 26ஆவது இடத்திலும், நிரோஷன் திக்வெல்ல 36ஆவது இடத்திலும், உபுல் தரங்க 41ஆவது இடத்திலும் உள்ளனர்.
ஜிம்பாப்வே அணியுடனான ஒருநாள் தொடரை வைட்-வொஷ் செய்த தென் ஆபிரிக்கா
தென் ஆபிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு …
இந்த நிலையில், பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (797 புள்ளிகள்), ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் (788 புள்ளிகள்), இந்திய வீரர் குல்தீப் யாதவ் (700 புள்ளிகள்), நியூசிலாந்து வீரர் ட்ரென்ட் போல்ட் (699 புள்ளிகள்), அவுஸ்திரேலிய வீரர் ஹசில்வுட் (696 புள்ளிகள்) ஆகியோர் முறையே 1 முதல் 5 இடங்களையும் தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.
தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் றபாடா (691 புள்ளிகள்) 3 இடங்கள் முன்னேறி 6ஆவது இடத்தையும், தென்னாபிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் (685 புள்ளிகள்) ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் 3 இடங்கள் ஏற்றம் கண்டு 7ஆவது இடத்தையும், இங்கிலாந்து வீரர் ஆடில் ரஷித் (681 புள்ளிகள்) 2 இடம் சரிந்தும், பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி (681 புள்ளிகள்) 2 இடம் சறுக்கியும் 8ஆவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். ஆப்கானிஸ்தானின் இளம் சுழற்பந்துவீச்சாளர் முஜீப் ரஹ்மான் (679 புள்ளிகள்) 2 இடம் சறுக்கி 10ஆவது இடத்தை பெற்றுள்ளார்.
இலங்கை வீரர்களில் அகில தனன்ஜய 21ஆவது இடத்தையும், சுரங்க லக்மால் 29ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை, அணிகள் தரவரிசையில் இங்கிலாந்து அணி 127 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. இந்திய அணி 122 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும், நியூசிலாந்து அணி 112 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும், தென்னாபிரிக்க அணி 110 புள்ளிகளுடன் 4ஆவது இடத்திலும், பாகிஸ்தான் அணி 101 புள்ளிகளுடன் 5ஆவது இடத்திலும் உள்ளன.
வரலாற்றின் ஊக்குவிப்புடன் இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரில் மோதும் இலங்கை
ஆசியக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷ் மற்றும் …
அஸ்திரேலிய அணி 100 புள்ளிகளுடன் 6ஆவது இடத்திலும், பங்களாதேஷ் அணி 92 புள்ளிகளுடன் 7ஆவது இடத்திலும், இலங்கை அணி 77 புள்ளிகளுடன் 8ஆவது இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் அணி 69 புள்ளிகளுடன் 9ஆவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் அணி 67 புள்ளிகளுடன் 10ஆவது இடத்திலும் உள்ளன.
இதுஇவ்வாறிருக்க, நாளை (10) ஆரம்பமாகவுள்ள இலங்கைக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை இங்கிலாந்து அணி இழந்தால் முதலிடத்தை இழக்க நேரிடும். அதேவேளை, இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேற வாய்ப்பு ஏற்படும். ஆனால், இந்த தொடரை இலங்கை அணி வென்றால் தரவரிசையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படாது.
மறுபுறத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் போட்டி தொடரில், இந்திய அணி வெற்றி பெற்றால், ஐ.சி.சி தரவரிசையில் இந்திய அணி முதல் இடத்தைப் பெறும் வாய்ப்பு உள்ளது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…