சமநிலை அடைந்திருக்கும் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாலது டெஸ்ட் போட்டியில் இலங்கையின் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான நிரோஷன் திக்வெல்ல நேரத்தை கடத்த கையாண்ட உத்திகளை இந்திய அணித்தலைவர் விராத் கோஹ்லி பாராட்டியிருக்கின்றார்.
இந்திய வீரர்களுகெதிராக கொந்தளித்த திக்வெல்லவின் மறுமுகம்
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (20)… இலங்கை அணியின் முன்னணி சுழல் வீரரான ரங்கன ஹேரத்…
24 வயதாகும் திக்வெல்ல கொல்கத்தாவில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டியில் விராத் கோலி மற்றும் ஏனைய இந்திய வீரர்களுடன் பேசி மைதானத்தில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் போட்டி சிறிது நேரம் தாமதித்திருந்தது.
இந்த விடயம் பற்றி கோஹ்லி “ எனக்கு அவர் (போட்டியில்) எடுத்துக் கொண்ட பாத்திரத்தினை பார்க்க மிகவும் பிடித்திருந்தது. மைதானத்தில் அவ்வாறு போட்டித்தன்மையாக இருந்ததும் மிகவும் விருப்பமாக இருந்தது. அவர் (திக்வெல்ல) அவரது கிரிக்கெட்டுக்கு உரிய பெருமையினை எடுத்துக் கொள்ளும் ஒரு வீரர். எனவே, இதுவரை அவரிடம் பார்த்த அனைத்து விடயங்களுக்காகவும் நான் கவரப்பட்டிருக்கின்றேன். இதற்கு முன்னர் நடந்த தொடரிலும் அவரின் நடத்தை பிடித்திருந்தது. இலங்கை அணிக்காக விஷேடமான விடயங்களைச் செய்யும் ஆற்றல் அவருக்குள்ளே இருக்கின்றது. “ என இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முன்னர் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கோஹ்லி கருத்து தெரிவித்திருந்தார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா, இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 47 ஓவர்களில் 231 ஓட்டங்களினை நிர்ணயம் செய்திருந்தது. இந்த இலக்கினை பெற பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை, போட்டியின் இறுதி இடைவெளியில் 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியிருந்தது. குறிப்பிட்ட நேரத்தில் போதிய வெளிச்சமின்மையும் போட்டியில் ஏற்பட்டுக் கொண்டிருந்தது.
இந்த தருணத்தில் சாமர்த்தியமாக செயற்பட்ட திக்வெல்ல சில உத்திகள் மூலம் நடுவர்களுடன் பேச சந்தர்பத்தினை ஏற்படுத்திக் கொண்டு நேரத்தினை சற்று வீணடித்திருந்தார்.
டெஸ்ட் தரவரிசையில் திக்வெல்ல, தில்ருவன், கோஹ்லி முன்னேற்றம்
சர்வதேச கிரிக்கெட் பேரவை ( ஐ . சி . சி .), டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை …
அணிக்காக போராடும் இந்த அணுகு முறையை பாராட்டிய கோஹ்லி, இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் தானும் தனது அணியின் வெற்றிக்காக அவ்வாறான உத்திகளை பயன்படுத்தியிருப்பேன் எனக் கூறியிருந்தார்.
“ பரபரப்பான வேளைகளில், நானும் எனது அணி வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்வேன். போட்டி முடிந்தததும் அனைத்தும் சாதாரண நிலைமைக்குத் திரும்பிவிடும். நாங்கள் சிறுபேச்சுவார்த்தையொன்றோடு சண்டையும் போட்டிருந்தோம். அதெல்லாம் மைதானத்தில் மட்டும் தான். எங்களுக்கு மைதானத்தில் சவால் தருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நாம் மதிப்போம். இப்போது அந்த மதிப்பினை அவர் (திக்வெல்ல) சவால் தந்தமைக்காக பெற்றுக் கொள்கின்றார். நான் உறுதியாகச் சொல்கின்றேன் அவர் எதிர்காலத்தில் இலங்கை அணிக்காக பல நல்ல விடயங்களைச் செய்வார். “ எனவும் கோஹ்லி கூறியிருந்தார்.
திக்வெல்ல குறிப்பிட்ட போட்டியில் நடந்து கொண்ட விதத்தினை முன்னாள் வீரர்கள் பாராட்டியிருந்தாலும், அணி முகாமைத்துவம் அதில் சிறிது கவலைப்பட்டிருந்தது .
ஏனெனில், திக்வெல்ல ஏற்கனவே நன்னடத்தை விதி மீறல் புள்ளிகளைப் பெற்று இருப்பதால் இனி அவ்வாறு நடந்து கொள்ளும் போது 4 போட்டிகளைப் பெற்று விளையாடத் தடையினை பெற்றுவிட முடியும். இதற்கு முன்னர் திக்வெல்ல அவுஸ்திரேலிய அணியுடனான சுற்றுப் பயணத்தில் ஒழுக்க விதிமுறைகளை மீறிச் செயற்பட்டதற்காக T-20 போட்டி ஒன்றில் விளையாட தடையினைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியிலிருந்து இரு நட்சத்திர வீரர்கள் திடீர் விலகல்
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (20).. அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி …
திக்வெல்லவுடன் குறித்த சம்பவம் நடந்திருந்த போது துடுப்பாட்ட ஜோடியாக காணப்பட்ட இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமால், திக்வெல்லவின் பக்கம் தவறு ஏதும் இல்லாதிருந்தமையினால் குறித்த விடயத்தில் தலையிட விரும்பவில்லை எனத் தெரிவித்திருந்தார்.
குறிப்பிட்ட போட்டியில் இந்திய அணி 75 ஓட்டங்களுக்கு இலங்கையின் 7 விக்கெட்டுக்களை கைப்பற்றி பிரபல்யமான டெஸ்ட் வெற்றியொன்றினை பெறும் நிலையில் காணப்பட்டிருந்தது.
அப்போட்டியில் இலங்கை அணிக்காக 27 ஓட்டங்கள் சேர்த்த திக்வெல்ல போட்டியின் நேரத்தை சிறிது நேரம் வீணடிக்க கையாண்ட உத்திகளே அன்றைய நாளில் இலங்கை அணியைத் தோல்வியில் இருந்து தடுத்திருந்தது.
அச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த திக்வெல்ல “ (குறிப்பிட்ட நிகழ்வினால்) இந்திய அணியினர் இரண்டு அல்லது மூன்று ஓவர்களை இழந்துவிட்டனர். “ எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.