இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் மூன்று வகையான போட்டிகளுக்குமான தலைவியாக ஹீதர் நைட்டை, இங்கிலாந்து கிரிக்கெட் சபை நியமித்துள்ளது. கடந்த மே மாதம், சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த சார்லோட் எட்வேர்ட்ஸையே நைட் பிறையீடு செய்யவுள்ளார்.
இந்திய மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான தொடர் ஜூலை 6ஆம் திகதி ஆரம்பம்
எதிர்வரும் 20ஆம் திகதி, பாகிஸ்தான் அணிக்கெதிராக ஆரம்பிக்கவுள்ள ஒருநாள் சர்வதேசப் போட்டி, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரே, இங்கிலாந்து அணியின் தலைவியாக, நைட்டின் முதலாவது தொடராக அமையவுள்ளது.
2010ஆம் ஆண்டு சர்வதேச அறிமுகத்தை மேற்கொண்ட வலதுகைத் துடுப்பாட்டவீரரான நைட், சுழற்பந்துவீச்சையும் மேற்கொள்ளக் கூடியவருமாவார். இதுவரையில், ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும், 55 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், 33 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடியுள்ளதோடு, 2014ஆம் ஆண்டிலிருந்து மார்ச்–ஏப்ரலில் நடைபெற்ற உலக இருபதுக்கு-20 வரை எட்வேர்ட்ஸின் உபஅணித் தலைவியுமாக இருந்துள்ளார்.
ஆதாரம் – விஸ்டன் இலங்கை
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்