T20 போட்டிகளில் KL ராகுல் புதிய சாதனை

Indian Premier league - 2021

227
BCCI

T20 கிரிக்கெட் போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸில் 5 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த உலகின் இரண்டாவது வீரராக பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைவர் KL ராகுல் புதிய சாதனை படைத்துள்ளார். 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரின் 14ஆவது லீக் போட்டியில்  பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது

இதன்மூலம் இம்முறை போட்டிகளில் அந்த அணி ஹெட்ரிக் தோல்வியை சநதித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 120 ஓட்டங்களை எடுத்தது.

ரோஹித் சர்மாவுக்கு 12 இலட்சம் அபராதம்

இதில் பஞ்சாப் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய ராகுல் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்

ஆயினும், குறித்த போட்டியில் T20 போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸில் 5 ஆயிரம் ஓட்டங்களை எடுத்த இரண்டாவது வீரராக அவர் புதிய சாதனை படைத்தார்.

அத்துடன், விராட் கோஹ்லியின் முந்தைய சாதனையை ராகுல் முறியடித்துள்ளார். விராட் கோஹ்லி 162 போட்டிகளில் விளையாடி தனது அதிவேக 5000 ஓட்டங்கள் சாதனையை எட்டியுள்ள நிலையில், தற்போது ராகுல் 143 T20 போட்டிகளிலேயே அதை முறியடித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் மேற்கிந்திய தீவுகளின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ல் 132 போட்டிகளில் 5 ஆயிரம் ஓட்டங்கள் மைல்கல்லை எட்டி முதலிடத்தில் இருக்க, அவுஸ்திரேலியாவின் ஷோன் மார்ஷ் 144 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டி 3ஆவது இடத்தில் உள்ளார்.

IPL கிரிக்கெட்டில் தடம்பதித்த இந்த சேத்தன் சக்காரியா யார்?

அத்துடன், T20 அரங்கில் 5000 ஓட்டங்களை அதிவேகமாகக் கடந்த இந்திய வீரர்களில் விராத் கோஹ்லி (167), சுரேஷ் ரெய்னா (173) ஆகிய இருவரும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்

இதனிடையே, பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைவர் ராகுல் T20 போட்டிகளில் முன்னணி வீரராக விளங்கி வருகிறார். .சி.சி இன் T20 போட்டிகளின் தரவரிசையில் அண்மைக்காலமாக முதல் 10 இடங்களில் அவர் இடம்பெறுவார். இதேபோல, IPL போட்டிகளிலும் அவர் சிறப்பான வீரராகவும், தலைவராகவும் விளங்கி வருகிறார்.

கடந்த பருவத்தில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய KL ராகுல், 14 போட்டிகளில் விளையாடி 670 ஓட்டங்களைக் குவித்து அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களுக்கு வழங்கப்படுகின்ற Orange தொப்பியைக் கைப்பற்றினார்

T20 உலகக் கிண்ணப் போட்டி நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

தொடர்ந்து இம்முறை IPL பருவத்தில் அவர் இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் 2 அரைச் சதங்களை அடித்துள்ளார். இதில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிராக 91 ஓட்டங்களைக் குவித்து 9 ஓட்டங்களில் சதம் பெறும் வாய்ப்பை தவறவிட்டார்

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…