தென்னாபிரிக்க தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியின் உப தலைவராக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்திய அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. டெஸ்ட் தொடரில் விராட் கோஹ்லி தலைவராகவும், ரோஹித் சர்மா உப தலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இதற்கிடையே, டெஸ்ட் தொடரில் இருந்து ரோஹித் சர்மா காயம் காரணமாக விலகினார். இதனையடுத்து அவருக்குப் பதிலாக இந்திய ‘ஏ’ அணியின் தலைவர் பிரியங்க் பாஞ்சல் இந்திய டெஸ்ட் அணியில் இணைந்தார். ஆனால், ரோஹித்துக்குப் பதிலாக உப தலைவராக யாரையும் பிசிசிஐ அறிவிக்கவில்லை.
>>முன்னறிவிப்பின்றி தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டேன் – கோஹ்லி
இந்த நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் உப தலைவராக கேஎல் ராகுலை நியமிக்க இந்திய தேர்வுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏற்கெனவே இந்திய ஒருநாள் அணியின் உப தலைவராக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது டெஸ்ட் அணிக்கும் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்காக அனைத்து வகை போட்டிகளிலும் சிறப்பாக ஆடி வரும் 29 வயதான கேஎல் ராகுல் இதுவரை 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 சதங்கள் உட்பட 2321 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<