கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் இணையும் சேத்தன் சக்கரியா

Indian Premier League 2025

51

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியானது 2025ஆம் ஆண்டின் பருவத்திற்கான இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடரில் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான சேட்டன் சக்கரியாவினை இணைத்துள்ளது.  

T20I தொடரினை சமநிலை செய்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி

சேட்டன் சக்கரியா வேகப்பந்துவீச்சாளரான உம்ரான் மலீக்கின் பிரதியீட்டு வீரராக கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல். தொடரின் நடப்புச் சம்பியன்களாக காணப்படும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியானது உம்ரான் மலிக்கினை இந்திய நாணயப்படி 75 இலட்ச ரூபாய்களுக்கு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த நிலையிலையே உம்ரான் மலிக் உபாதை காரணமாக இந்தப் பருவத்திற்கான ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுகின்றார் 

27 வயது நிரம்பிய சேட்டன் சக்கரியா கடந்த ஆண்டும் கொல்கத்தா அணியினால் கொள்வனவு செய்யப்பட்டிருந்த போதும் அவர் கடந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் எதிலும் ஆடியிருக்கவில்லை. தற்போது உபாதைப் பிரதியீடாக உள்வாங்கப்பட்டிருக்கும் சக்கரியா இந்திய நாணயப்படி 75 இலட்ச ரூபாய்களுக்கு கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது 

மொத்தமாக இதுவரை 19 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடியிருக்கும் சக்கரியா 20 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருப்பதோடு, அவர்  மொத்தமாக 46 T20 போட்டிகளில் ஆடி 65 விக்கெட்டுக்களை தன்னகத்தே வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.   

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<