இலங்கை பெட்மிண்டன் சங்க உள்ளக விளையாட்டு அரங்கில் நேற்று(05) நடைபெற்ற ஒரு நிகழ்வில், இலங்கை பெட்மின்டன் சங்கம் (SLBA) மற்றும் யோநெக்ஸ் சன்ரைஸ் நிறுவனம் இணைந்து 48 பெட்மின்டன் வீர விராங்கனைகளுடன் 8 பயிற்சியாளர்களுக்குத் தேவையான பெட்மின்டன் உபகரணங்களை இலங்கை பெட்மின்டன் சங்கத்தலைவர் திரு. சுராஜ் த்ண்தெனிய அழைப்பின் பேரில் அங்கு வருகை தந்திருந்த கெளரவ விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர முன்னிலையில் வைத்து பகிர்ந்தளிக்கப்பட்டது.
இலங்கை பெட்மின்டன் சங்கம் மற்றும் யோநெக்ஸ் சன்ரைஸ் நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற இந்த உபகரணங்கள் யாவும் நேற்று மாலை (நவம்பர் ௦5) தேசிய மட்ட வீரர்களுக்கும், அத்துடன் பாடசாலை மட்டத்தில் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கும் விநியோகிக்கப்பட்டது.
இலங்கை பெட்மின்டன் சங்கம் (SLBA), பெட்மின்டன் விளையாட்டை அபிவிருத்தி செய்யும் தொலைநோக்கில், திறமையான வீரர்கள் மற்றும் வளர்ந்து வரும் வீரர்களை ஊக்குவிக்கும் முகமாக இந்த விலை மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்களை வழங்கியது. பெட்மின்டன் ரெக்கட், காலணிகள், மற்றும் ஆடைகள் பிரத்தியேகமாக யோநெக்ஸ் சன்ரைஸ் நிறுவன அனுசரணையில் வழங்கப்பட்டது.
தேசிய மட்ட தர வரிசைப்படி முதல் எட்டு வீர வீராங்கனைகள், ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் குறிப்பிட்ட உபகரணங்களை பகிர்ந்தளிப்பதற்காகத் தெரிவு செய்யப்பட்டனர். அத்துடன், இளம் வீரர்கள் அண்மையில் உள்ளூர் மற்றும் சர்வதேச மட்டங்களில் அவர்கள் வெளிப்படுத்திய திறமைகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர். மொத்தமாக 48 வீர வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேலும், எட்டு பயிற்சியாளருக்கும் இந்த சலுகைகள் வழங்கப்பட்டன.
கெளரவ விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர கருத்து தெரிவிக்கையில், ”இந்த சலுகைகள் யாவும் வீரர்கள் அனைவரையும் தொடர்ந்து விளையாடுவதற்கு உந்து சக்தியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
மேலும் தெரிவித்த அவர், ”பெட்மின்டன் விளையாட்டு தொடர்பான சில பிரச்சனைகள் அவரது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் தான் இலங்கை பெட்மின்டன் சங்கத்துடன் (SLBA) இணைந்து சாத்தியமான தீர்வொன்றினை பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளதாக மேலும் வலியிறுத்தினார்.
மேலும் நாங்கள், தேசிய மட்டத்திலான பெட்மின்டன் குழாம் ஒன்றை உருவாக்கவும், பிராந்திய மட்டத்தில் பெட்மின்ட்ன் அரங்குகளை நிர்மாணிக்கவும் எதிர்பார்த்துள்ளேன். அத்துடன் வீர விராங்கனைகள் பயிற்சிகளுக்கு வருகை தராமை போன்ற விடயங்களில் தீர்வுகள் எட்டப்பட்டு நீங்கள் அனைவரும் தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபடுவீர்கள் என நம்புகின்றேன்” என்று மேலும் தெரிவித்தார்.
பெட்மின்டன் உபகரணங்கள் பெற்ற வீரர்கள்
நிலுக்க கருணாரத்ன, தினுக கருணாரத்ன, புவநேக்க குணதிலக்க, திழுக்கா கருணாரத்ன, கவிதி சிரிமனகே, திலினி ஹென்தஹேவ, சந்திரிகா டி சில்வா, அசினி ரத்னசிரி, சச்சின் டயஸ், இமேஷ் ஹசரங்க, விபவி மதுஷா, சுபுன் லங்ரங்கா, அருண செனவிரத்ன, உபுலி வீரசிங்ஹ, அமாலி அமரசிங்ஹ, நதீஷா காயனாதி, புத்மி களகமகே, சாமிக கருணாரத்ன, ஹசித்த சானக, திசர நிம்மிகா, ஆர்.எஸ். தஹநாயக்க, ரந்துஷ்க சசிந்து, லஹிரு மதுஷான் வீரசிங்ஹ, பிரமோதய ரணவீர, தரின் புஞ்சிஹேவா, ஹாசினி அமபலங்கோடகே, கவிசக்க குணரத்ன, மதுஷிகா டில்ருக்ஷி, கயனா சமாதி பீரிஸ், கீத்மி அபேரத்ன, எஷாணி பள்ளிஹென, டில்மி டயஸ், இனுரி குருப்பு, செவ்மின குணதிலக்க, திலின கோனாபினுவள, கசுன் தர்ஷன அமரசேன, தரிந்து அம்பேகோட, மதுக்க டுலாஞ்சனா, ரெசிந்தா ரித்ம, சசிந்த புபுது ராஜபக்ச, நதித் அனுஷ்கா, ஹசரா சத்தும்ஹாரி விஜேரத்ன, தனுஷி ரத்நாயக்க, அமாலி சமரநாயக்க, லசங்க ஹெட்டியாராச்சி, கவிந்திகா பினரி, யஸ்மிதா தயாரத்ன, பாக்கிய தீமந்தி, இல்மீ டி சில்வா